காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த கலவரத்தில் 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
காஷ்மீர் மாநிலத்துக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற முழுக்கத்துடன் சோப்பியான் மாவட்டத்தின் துக்ரோ பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊர்வலமாக செல்ல முயன்ற ஆர்ப்பாட்டகாரர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது மூண்ட கலவரத்தில் சையார் அகமது சாஹீக் என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதே போல் அனந்த்நாக் மாவட்டத்தின் போடெங்கோ பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை, பாதுகாப்புப் படையினர் துரத்தி அடித்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அகம்மது டார் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

No comments:
Post a Comment