சென்னை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து, இரண்டரை கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குவைத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து இன்று காலை சென்னை வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஆந்திர மாநிலம் ராஜபேட்டையை சேர்ந்த லட்சுமி தேவி என்ற பெண், தனது உடை மற்றும் கைப்பையில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இரண்டரை கிலோ எடையுள்ள அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 75 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், பெண் பயணி லட்சுமி தேவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

No comments:
Post a Comment