தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும், சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாகவும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை,
முஸ்லிம் சமுதாயத்தின் ஜீவாதார கோரிக்கையான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக பல கட்டங்களில் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும், இன்னபிற நிர்வாகிகளும் கூறிவிட்டு தேர்தல் அறிக்கையில் அந்த வாக்குறுதியை இடம்பெற செய்யவில்லை,
இட ஒதுக்கீட்டை மூடி மறைப்பதற்காக முஸ்லிம் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளை ஒதுக்கி விட்டு முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகளை அள்ளி விடலாம் என்று திமுக கணக்கு போடுகிறது.
முஸ்லிம் சமுதாயத்தின் வாக்கு வங்கி என்பது முஸ்லிம் அரசியல் கட்சிகளை வைத்து தீர்மானிக்கப்படுவது அல்ல,
முஸ்லிம் சமுதாயத்தின் ஜீவாதார கோரிக்கையான இட ஒதுக்கீட்டை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதை திமுகவுக்கு நினைவுப்படுத்திக்கொள்கிறோம்.
அதேப்போல் முஸ்லிம் சமுதாயத்தின் நீண்டகால கோரிக்கையான அப்பாவி சிறைவாசிகள் விடுதலை குறித்தும் எவ்வித வாக்குறுதயும் தரப்படவில்லை,
பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, அதேப்போல் கடந்த தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்டிருந்த எஸ்மா, டெஸ்மா வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக எந்த வாக்குறுதியும் அளிக்காமல் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளது.
நாம் கொலைகாரர்களையும், கொல்லைகாரர்களையும் விடுதலை செய்ய சொல்லவில்லை, அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை தான் விடுதலை செய்ய சொல்கிறோம், அதில் கூட திமுகவுக்கு மனமில்லை,
திட்டமிட்டு திமுக தேர்தல் அறிக்கை முஸ்லிம் சமுதாயத்தின் முதுகில் குத்தியே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment