Monday, 11 April 2016

சவூதியில் சிக்கித் தவிக்கும் 63 மீனவர்களை மீட்க உறவினர்கள் வலியுறுத்தல்!


சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 63 மீனவர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் சார்பில் வெளியுறவு அமைச்சகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
சவுதி அரேபியாவில், 6 மாதம் ஊதியம் வழங்காமல் சவுதி நிறுவனங்கள் தனியறையில் அடைத்து துன்புறுத்துவதாக தமிழக மீனவர்கள் 63 பேர், வாட்ஸ் அப்பில் அவர்கள் உறவினர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்துள்ள அவர்களது குடும்பத்தினர், மீனவர்களை மீட்டுத்தரக் கோரி டெல்லியிலுள்ள வெளியுறவு அமைச்சகத்தில் மனு அளித்துள்ளனர். இந்தியாவிலுள்ள சவுதி தூதரக அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு வழங்கியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment