Saturday, 19 March 2016

சர்ச்சைக்குரிய கருத்து ஒவைசிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ம.பி. சட்டசபையில் கண்டன தீர்மானம்


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாணவர்களுக்கு ‘பாரத் மாதா கி ஜே’ என கூற கற்றுத்தருமாறு விடுத்திருந்த வேண்டுகோள்பற்றி ஏ.ஐ.எம்.ஐ.எம். என்னும் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரான அசாதுதீன் ஒவைசி எம்.பி., கருத்து தெரிவித்தார். அப்போது அவர், தனது கத்தியில் கழுத்தில் வைத்தால் கூட அப்படி கூற மாட்டேன் என கூறினார்.
இதே போன்ற கருத்தை மராட்டிய சட்டசபையில் உறுப்பினராக உள்ள அவரது கட்சியின் வாரிஸ் பதானும் கூறினார்.
இவர்கள் இருவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி மும்பை ஐகோர்ட்டில் புனேயை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் ஒரு பொது நல வழக்கை நேற்று தாக்கல் செய்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும்.
இதற்கிடையே ஒவைசி விவகாரம், பாரதீய ஜனதா ஆட்சி நடக்கிற மத்திய பிரதேச மாநில சட்டசபையில் நேற்று எதிரொலித்தது. அவருக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர் ஜிட்டு பட்வாரி கண்டன தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

No comments:

Post a Comment