பெரம்பலூர், ஜன. 9–

பெரம்பலூரில் இன்று நடைபெற்ற தே.மு.தி.க. தலைமை பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
தே.மு.தி.க.வின் 11–வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) பெரம்பலூரில் உள்ள ஜே.கே. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் சுதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில செயலாளர்கள் உள்பட 1,450 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டம் சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டத்திற்கு வருகை தந்த விஜயகாந்துக்கு செண்டை மேளம் மற்றும் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த மாநில, மாவட்ட நிர்வா கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் அங்கு திரண்டிருந்த நிர்வாகிகள் நாளைய முதல்வர் விஜயகாந்த் வாழ்க என்ற கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய விஜயகாந்த், வருகிற சட்டமன்ற தேர்தலின் போது கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
மேலும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும் விரிவாக கருத்துக்களை கேட்டு ஆலோசனை நடத்தினார். கட்சி நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், யாருடன் கூட்டணி அமைத்தால் வெற்றி உறுதி என்பது குறித்தும் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
சட்டமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்ட விஜயகாந்த், தேர்தல் அறிக்கை தயாரிப்பது பற்றியும், பொது மக்களிடம் அளிக்கும் வாக்குறுதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பேசினர். அதனை தொடர்ந்து தீர்மான நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. தீர்மானத்தின் உள்ள முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தை தொடர்ந்து பிற்பகலில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தெரிவிக்கிறார்.
சமீப காலமாக தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் போட்டி போட்டு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பெரம்பலூரில் இன்று நடைபெற்ற தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தமிழகம் முழுவதும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தையொட்டி பெரம்பலூர் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கூட்டத்தில் பங்கேற்க நேற்று மாலையே விஜயகாந்த் பெரம்பலூர் வந்தார். அப்போது அவருக்கு உற்காக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேற்று பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

No comments:
Post a Comment