Sunday, 17 January 2016

தில்லி முதல்வர் கேஜரிவால் மீது மை வீச்சு


புது தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது பெண் ஒருவர் மையை வீசினார்.தில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசிக் கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் அவர் மீது மையை வீசினார்.போலீஸார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment