Sunday, 10 January 2016

இனி எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி அறிவிப்பு


Updated on January 10, 2016
  

​இனி எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி அறிவிப்பு
எதிர்காலத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய போவதில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் சார்பில் வரும் 31ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு குறித்த பொதுகூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பக்கீர் முகமது அல்தாபீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பக்கீர் முகமது அல்தாபீ, சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வேலைவாய்ப்பில் 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், இனிவரும் காலங்களில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யமாட்டோம் என்றும், ஆதரவும் தெரிவிக்கப்போவது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment