Thursday, 7 January 2016

முப்தி முகமது சயீத் மறைவு: காஷ்மீர் புதிய முதல்–மந்திரியாக மெகபூபா முப்தி தேர்வாகிறார்


1/8/2016 5:15:00 AM


ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநில புதிய முதல்–மந்திரியாக மெகபூபா முப்தி தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.புதிய முதல்–மந்திரி

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜனதா கூட்டணி சார்பில் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்தி முகமது சயீத் முதல்–மந்திரியாக பதவி வகித்து வந்தார். உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவர் நேற்று காலையில் காலமானார்.இதைத்தொடர்ந்து காஷ்மீரின் புதிய முதல்–மந்திரி யார்? என்ற கேள்வி மாநில மக்கள் மட்டுமின்றி ஆளும் கூட்டணி தலைவர்களிடையேயும் எழுந்துள்ளது. இதற்கு, மறைந்த முதல்–மந்திரி முப்தி முகமது சயீதின் மகளும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியே அடுத்த முதல்–மந்திரி என அந்த கட்சி அறிவித்து உள்ளது.பா.ஜனதா எதிர்க்கவில்லை

இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முசாபர் உசேன் கூறுகையில், ‘மக்கள் ஜனநாயக கட்சியை பொறுத்தவரை, முப்தி சாகிப்புக்கு பின் மெகபூபா முப்தியே எங்களின் ஒரே தேர்வு’ என்றார்.ஆனால் மெகபூபாவை முதல்–மந்திரியாக்குவதற்கு கூட்டணி கட்சியான பா.ஜனதாவின் ஒப்புதலை பெற வேண்டும். எனினும் மெகபூபாவின் தேர்வுக்கு பா.ஜனதா இதுவரை எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக அந்த கட்சியின் உயர்மட்டக்குழு இறுதி முடிவு எடுக்கும் என தெரிகிறது.87 உறுப்பினர்களை கொண்ட காஷ்மீர் சட்டமன்றத்தில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 உறுப்பினர்களும், பா.ஜனதாவுக்கு 25, தேசிய மாநாட்டு கட்சிக்கு 15, காங்கிரசுக்கு 12 உறுப்பினர்கள் உள்ளன.மெகபூபா முப்தி காஷ்மீர் முதல்–மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், மாநிலத்தின் முதல் பெண் முதல்–மந்திரி என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment