11:45 PM | ஜனவரி 08, 2016
ஸ்ரீநகர், ஜன. 8-
காஷ்மீர் மாநில முதல்-மந்திரி முப்தி முகமது சயீத் மறைவைத் தொடர்ந்து, புதிய முதல்-மந்திரி பதவிக்கு அவருடைய மகள் மெகபூபாவை ஆதரிப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள், கவர்னர் என்.என்.வோராவிடம் கடிதம் அளித்தனர். ஆனால், 4 நாள் துக்கம் நீடிப்பதால், மெகபூபா உடனடியாக பதவி ஏற்க ஆர்வம் காட்டவில்லை.
அவரை பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ் சந்தித்து, புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். 4 நாள் துக்கம் முடிந்த பிறகு, தங்கள் நிலையை தெரிவிப்போம் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, புதிய அரசு அமைப்பது குறித்து மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜனதாவும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு அக்கட்சிகளின் தலைவர்களுக்கு கவர்னர் கடிதம் அனுப்பினார். உடனடியாக புதிய அரசு பதவி ஏற்க வாய்ப்பில்லாததால், குறுகிய காலத்துக்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment