Monday, 11 January 2016

அமைச்சர்களின் சார்பில் ஆனந்த விகடன் வார இதழ் மீது அவதூறு வழக்கு தாக்க



தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த ஆனந்த விகடன் வார இதழ் மீது ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து மந்திரி-தந்திரி என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சார்பில் ஆனந்த விகடன் வார இதழ் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கனவே அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ப. வளர்மதி, தங்கமணி, பா.மோகன் ஆகியோரின் சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், வார இதழில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், இது தமிழக அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் என்பதால் அந்த பத்திரிகை மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment