2:14 PM | ஜனவரி 08, 2016
அனந்தபூர்,கடந்த 2013ம் ஆண்டு வெளியான பிசினஸ் மாத இதழ் ஒன்றில் தோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபாரப் பொருளை வைத்திருப்பது போலவும் அட்டைப் படம் இருந்தது. இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது. ‘God of Big Deals’ என்று கட்டுரைக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.இந்த அட்டைப்படத்தை பார்த்த இந்து அமைப்புகள் கொந்தளித்தன. இந்த விளம்பரம் இந்து கடவுளை அவமதிப்பது போல இருக்கிறது என்று சிவசேனா இந்துஸ்தான் அமைப்பை சேர்ந்த ராஜிந்தர் சிங் ராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தோனி மற்றும் பத்திரிகை வெளியிட்டாளர் ஆகியோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே வழக்கு ஐதராபாத் மாநிலம் அனந்தபூர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அனந்தபூர் நீதிமன்றம் தோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிடித்துள்ளது. வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தோனி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. தோனி தற்போது 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இந்த கிரிக்கெட் தொடர் ஜனவரி 21 ஆம் தேதி முடிவு பெறுகிறது.
No comments:
Post a Comment