Friday, 8 January 2016

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிய ஹைகோர்ட்டில் மனு


Posted : Fri, Jan 8, 2016,

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடுவதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் பெய்த பெருமழையின்போது, முன் அறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதாகவும், இதனால் நகரின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்து, உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும் அதிகரித்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகளும், சில ஊடங்களும் குற்றம்சாட்டியுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த திமுக கோரிக்கைவிடுத்து ஆளுநரிடம் மனு அளித்ததோடு, சமீபத்தில் சென்னையில் பெரிய பேரணியை நடத்தியது.
இந்நிலையில், சென்னை ஹைகோர்ட்டில், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், இன்று ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விவகாரம் பற்றி விசாரிக்க சென்னை போலீஸ் கமிஷனர் வரை மனு கொடுத்து ஓய்ந்துவிட்டதாகவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆறுமுகம், தனது மனுவில் கூறியுள்ளார்.
ஆறுமுகத்தின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ள ஹைகோர்ட், விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தது

No comments:

Post a Comment