பதிவு செய்த நேரம்:2016-01-07
திரிப்பொலி: லிபியாவில் காவலர் பயிற்சி முகாம் மீது நடந்த தற்கொலை படை தாக்குதலில் 65 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் திரிப்பொலிக்கு அருகே உள்ள சிலிட்டன் நகரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் வெடிகுண்டுடன் வந்த லாரி வெடித்து சிதறியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது. குண்டு வெடித்த சமையத்தில் ஏராளமான காவலர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சர்வாதிகாரியாக திகழ்ந்த கடாபியின் ஆட்சியில் ராணுவ தளமாக இருந்த அந்த இடம் தற்போது காவலர் பயிற்சி மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 65 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. லிபியாவில் உள்ள ஐ.நா. சிறப்பு பிரதிநிதி மார்டின் கோப்லர் இது ஒரு தற்கொலை படை தாக்குதல் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
விடாப்பியின் வீழ்ச்சிக்கு பின்னர் லிபியாவில் திறம்மற்ற நிலை நிலவுகிறது. ஐ.நா. சபை மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையை அடுத்து எதிர் எதிர் கட்சிகள் சேர்ந்து அரசை அமைக்க ஒப்புக்கொண்டிருந்தனர். இன்னும் அந்த அரசு ஏற்படாதிருந்த நிலையில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. லிபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் காலுன்றி இருப்பதால் இந்த தாக்குதலை அவர்களே நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலையடுத்து லிபியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் திரிப்பொலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment