தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஜனவரி 27 கோவையில் வைத்து நடைபெற உள்ளது.
சிறைகள் என்பது இன்றைக்கு சித்தரவதை கூடங்களாக மாற்றப்பட்டு சிறைவாசிகளை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒரு சில சிறைத்துறை அதிகாரிகளால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சிறைத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடுமையான துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை இதற்கு முன்பு ஆட்சியில் அமர்ந்த திமுக அரசும் மற்றும் அதிமுக அரசும் பல்வேறு காலகட்டங்களில் கருணையின் அடிப்படையில் பொதுமன்னிப்பின்மூலம் விடுதலை செய்துள்ளது. எனவே அதே போன்று கருணையின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் முஸ்லிம் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு. இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் வருகின்ற 27.01.2016 புதன்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசம் ஆசிரியர் தோழர்.தியாகு உட்பட பல்வேறு அரசியல் மற்றும் இயக்க தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறைவாசிகள் குடும்பத்தார்களும் கலந்து கொள்ள உள்ளனர். சிறைவாசிகளின் வாழ்வில் ஒளியேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

No comments:
Post a Comment