Thursday, 30 June 2016

இலங்கை இந்தியாவில் வெப்பத்தால் பலியாகப் போகும் பல லட்சம் மக்கள்!


நேற்று உலக மின்சக்தி நிறுவனம் வாயு மாசடைதலால் வருடாந்தம் 6.5 மில்லியன் மக்கள் இறக்கின்றார்கள் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தது.
இது தொடர்பாக இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கருத்துக்களைப் பகிர்ந்த ஆய்வாளர் சுரேஸ் தர்மா அவர்கள், உலகின் முன்னுள்ள அபாயங்கள் எவ்வாறானவை, எவ்வாறான அழிவுகள் இப்போது இடம்பெறுகின்றன என்பது பற்றியும்,
இந்த நூற்றாண்டின் இறுதியில் எவ்வாறான மாற்றங்களை எமது சந்ததியினர் எதிர்கொள்ளப் போகின்றார்கள்.
எவ்வாறான அழிவுகளை உலகம் பெறப் போகின்றது.
குறிப்பாக இலங்கை, இந்தியா, ஐரோப்பா, கனடா போன்றவற்றில் ஏற்படப் போகும் மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

Wednesday, 29 June 2016

வளரும் குழந்தைகளுக்கு நெய் சாதம் கொடுங்கள்! 


வளரும் குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவுகளை கொடுக்க வேண்டும். நெய்சாதம் ஊட்டச்சத்து மிக்கது.
தேவையான பொருட்கள்
பொன்னி அரிசி - கால் கிலோ
நெய் - 100 கிராம்
பட்டை - 3 துண்டுகள் (சிறியது)
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பூண்டு - 7 பல்
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
முந்திரி, திராட்சை - தேவைக்கு
செய்முறை
அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வடித்து கொள்ளவும்.
பூண்டை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும். ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளித்த பின் முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
அடுத்து அதில் வடிகட்டிய அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறவும்.
இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கர் மூடி போடவும். விசில் போடாமல் மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும். பத்துநிமிடம் கழித்து சாதம் குழையும் முன் இறக்கி வைக்கவும்.
சுவையான நெய் சாதம் தயார்.
இதனுடன் சைடு டிஸ்சாக குருமா, ரைத்தா தொட்டுக்கொள்ளலாம்.

“ஒசந்த சாதி’ ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி!: சுப.வீ.



சுவாதி கொலை குறித்து, ஒய்.ஜி. மகேந்திரன் கருத்து தெரிவித்ததும் அதற்கு கண்டனங்கள் எழுந்ததும் தெரிந்த செய்தி.  ஆனால் பலரும் கவனிக்கத் தவறிய அவரது தொலைக்காட்சி பேட்டி குறித்து கண்டனத்தை தனது வலைப்பூவில் பதிவு செய்திருக்கிறார் சுப.வீ.  அந்த கட்டுரை இதோ..
சுப.வீ.
சுவாதி என்னும் பெண்ணை அரிவாள் ஒருமுறை கொன்றது. சாதி பலமுறை கொல்கிறது!
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பெயரில் வெளியாகியிருக்கும் ஒரு பதிவு, சமூக வலைத்தளங்களில் வெகு விரைவாகப் பரவிக் கொண்டுள்ளது.  இப்போது அது குறித்து அவரே ஒரு விளக்கத்தையும் ஒரு தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.
அந்தப் பதிவைத் தான் உருவாக்கவில்லை என்றும், தனக்கு வந்த ஒரு செய்தியை, அதில் நியாயம் இருப்பதாகத் தானும் அந்த நேரத்தில் கருதியதால், பிறருடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் தமிழ் எழுத்துகளே இல்லை என்றும், ஆங்கிலம்தான்  உள்ளதென்றும்  கூறியுள்ளார். (ஒருவேளை சமற்கிருத எழுத்துகளையும் வைத்திருக்கக்கலாம். தமிழ் எழுத்து இருக்க வாய்ப்பில்லைதான்.)
அவர் கூற்றை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும் அவர் நேர்காணல் வெளியிட்டுள்ள பல சாதிய நஞ்சினை நம்மால் ஏற்க முடியவில்லை.
சுவாதியின் படுகொலையை யாரும் கண்டிக்கவில்லை என்பது எள்ளளவும் உண்மையில்லை. அனைவரும் கண்டித்தனர்.  அனைத்துக் கட்சியினரும் கண்டித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உட்படப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். இது போன்ற தரங்கெட்ட பதிவுகளைப்  பகிர்ந்ததன் மூலம் ஒய்.ஜி. மகேந்திரன் போன்றவர்கள்தான், சுவாதி கொலையைப் பற்றி நீண்டிருக்க வேண்டிய விவாதங்களைச்  சாதி பற்றியதாக மாற்றிவிட்டனர்.
சுவாதி
தனக்கு வரும் செய்தியை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கு முன், அந்தச் செய்தியின் தரம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டாமா? திராவிடப் பொறுக்கிகள், காம்ராட் கயவர்கள் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிற அந்தப் பதிவை, மக்களால் அறியப்பெற்ற நீங்கள் பகிரலாமா? “தெருப்பொறுக்கி ஒய்.ஜி.மகேந்திரன்” என்று யாராவது எனக்கு ஒரு பதிவை அனுப்பினால், அதனை நான் கண்டிப்பேனே அல்லாமல், அதனை இன்னொருவருக்கு   அனுப்ப மாட்டேன். அப்படி அனுப்பிவிட்டு, அது என்னுடையதில்லை என்று சொல்லும் கோழையாகவும் வாழமாட்டேன்.
தான் அதனை உருவாக்கி அனுப்பவில்லை என்றாலும், அந்தக் கருத்தில் அந்த நேரத்தில் தனக்கு உடன்பாடு  இருந்தது என்று கூறுவதன் மூலம்,  தன்  சாதி வெறியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.  ஆம், அது சாதி வெறிதானே  அன்றிச்  சமூக அக்கறை அன்று. சமூக அக்கறை உடையவராக மகேந்திரன் இருந்திருப்பாரரேயானால், யார் கொலை செய்யப்பட்டாலும் குமுறியிருப்பார், குரல் கொடுத்திருப்பார். தருமபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுலராஜ், உடுமலைப்பேட்டை சங்கர் போன்றவர்கள் கொல்லப்பட்டபோது, எத்தனையோ செய்திகள் வலைத்தளங்களில் உலவினவே!
அவற்றுள் எத்தனை செய்திகளை அவர் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்? அவருடைய அம்மா நடத்தும் பள்ளியில் ஒரு சிறுவன் நீச்சல் குளத்த்தில் இறந்து போனானே, அவனுக்காக மகேந்திரன் தெருவுக்கு வந்து போராடினாரா?
போகட்டும், அவர்களெல்லாம் சூத்திரர்கள், தலித்துகள்! பார்ப்பன சாதியில் பிறந்த காஞ்சி சங்கரராமன் கொலை செய்யப்பட்டபோது, எத்தனை பதிவுகளை மகேந்திரன் பகிர்ந்துள்ளார்? அந்த வழக்கில் குற்றம் சாற்றப்பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டபோது, கொந்தளித்தாரா மகேந்திரன்? உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்பதில் எந்தப் பார்ப்பனருக்காவது ஆர்வம் உண்டா?
ஒரு தொலைக்காட்சி,  சங்கரராமன் கொலைவழக்கில் தீர்ப்பு வெளிவந்த நாளில், நடிகர் எஸ்.வி.சேகரிடம் பேட்டி கண்டது. “இது இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி” என்றார் அவர். அடுத்து என்னிடம் கேட்டார்கள், “அடடா, சங்கரராமன் ஒரு முஸ்லீம் என்று எனக்கு இதுவரை தெரியாமல் போய்விட்டதே” என்றேன் நான்.
சங்கர்ராமனைக் கொன்றவர்கள் மீதும் பார்ப்பனர்கள் கோபம் கொள்ளவில்லை. சங்கராச்சாரியைக் கைது செய்த ஜெயலலிதாவின் மீதும் அவர்கள் கோபம் கொள்ளவில்லை. சாதி வெறிக்கு இதனை விடச் சிறந்த சான்று வேறு என்ன இருக்க முடியும்?
இப்போதும் தமிழக அரசின் மீதோ, முதலமைச்சர் ஜெயலலிதா மீதோ அவர்கள் ஒரு சிறு கல்லையும் எடுத்து எறியவில்லை. அவரைப்  பாதுகாப்பதில் அவ்வளவு கவனமாக உள்ளனர். இரண்டு மணி நேரம் அந்த உடலின் மீது ஒரு துணியைக் கூடப் போர்த்தாமல், அங்கேயே நின்ற காவல் துறை மீதும், அத்துறையைத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் மீதும்  இவர்களுக்கெல்லாம் எந்த வருத்தமும் இல்லை.
ஒய்.ஜி. மகேந்திரன்
தொலைக்காட்சி நேர்காணலில், தன்னை அறியாமல் நடிகர் மகேந்திரன் வெளியில் வந்து விழுந்திருக்கும் இடம் ஒன்று உள்ளது. “ஒசந்த சாதி” என்பதால் யாரும் கவனிக்காமல் விட்டு விட்டார்களோ என்று தோன்றியதாகச் சொல்கிறார்.
நீங்கள் “ஒசந்த சாதி” என்றால் நாங்களெல்லாம் யார் மகேந்திரன்? சுவாதியைக் கொன்றவர்களை மட்டுமில்லை, உங்களைப் போன்ற சாதி வெறியர்களையும் கைது செய்ய வேண்டாமா?
http://newstig.com/news/tamil-nadu/16852/Mahendran-a-question

நாடு முழுவதும் 10ம் வகுப்பு வரை இலவச கல்வி: மத்திய அரசு திட்டம்!


புதுடெல்லி: நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு வரை இலவச கல்வியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.கல்வியை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், பள்ளிப் படிப்பை முடிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், ஆரம்ப கல்வியை நிறைவு செய்யாமல் படிப்பை இடையிலேயே நிறுத்திவிடும் மாணவர்களின் எண்ணிக்கை 36 சதவீதம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், அனைவரும் படிக்கும் வகையில், கல்வி கொள்கையில் மாற்றங்களை கொண்டுவர மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், 10ம் வகுப்பு வரை இலவச கல்வியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் சாதாரணமாக பெறப்படும் கட்டணம் கூட வசூலிக்காமல் இலவச கல்வி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் அமலுக்கு வருகிறது. சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8ம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாய கல்வி முறை இருந்துவரும் நிலையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘9 மற்றும் 10 வகுப்பு பாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்த சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளோம். கல்வி கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருவதோடு, பள்ளி கல்வியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?


தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது. கடந்த 2010ம் வருடத்திலிருந்து இதற்கென தனி அரசாணை பிறப்பித்து இந்தச் சலுகையை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.
அந்த அரசாணையில், ‘அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களின் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையெனில் எந்தச் சாதிபாகுபாடுமின்றி, வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என குறிப்பிட்டுள்ளது. அதாவது அந்த மாணவ-மாணவியின் ‘டியூஷன் ஃபீஸ்’ எனப்படும் கல்விக் கட்டணத்தை மட்டுமே அரசு செலுத்தும்.
இந்தக் கல்விச் சலுகைக்குத் தகுதியுள்ள மாணவர்கள், ‘முதல் தலைமுறை பட்டதாரி’ என்கிற சான்றிதழை அரசிடம் பெற்று கல்லூரி விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டியது அவசியம். இந்தச் சான்றிதழைப் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்கள் அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும்.
அல்லது இணையத்தின் வழியாகவும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பம் தாசில்தார் நேரடியாக கையொப்பமிட்டு சான்றிதழ் வழங்கும் வகையிலேயே இருக்கும். ஆனால், இதில் உங்கள் பெயர், தந்தை, தாய் பெயர், பிறகு உங்கள் தந்தையின் அப்பா, அம்மா பெயர்கள்(தாத்தா, பாட்டி), அம்மாவின் அப்பா, அம்மாவின் பெயர்கள், உடன்பிறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் வயது ஆகியவற்றை எழுதி, அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
பிறகு இதனுடன், உறுதிமொழி விண்ணப்பம் ஒன்றையும் இணைத்து கொடுக்க வேண்டும். அதில், ‘குடும்பத்தில் யாரும் பட்டதாரிகள் இல்லையென உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கும் பகுதியின் கீழ் உங்கள் கையெழுத்தும், அதன்கீழ் பெற்றோர், கையொப்பத்தையும் இடவேண்டும். ஏனெனில், தாத்தா, பாட்டியின் கல்வித் தகுதியை அதிகாரிகளால் விசாரிக்க முடியாமல் போகலாம். அதற்காக பெற்றோர் கையொப்பமிட்ட உறுதிமொழிச் சான்று அவசியமாகிறது. நிறைவில் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், சரி பார்ப்பிற்குப் பிறகு தாசில்தாரிடம் கையொப்பம் பெற்று சான்றிதழைப் பெறவேண்டும்.
தந்தை, தாய், உடன்பிறந்தவர்கள் ஆகியோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகல் இதனுடன் இணைக்கப்பட வேண்டியது அவசியம். ஏழு நாட்களில் இந்த சான்றிதழ் கிடைத்து விடும். தாமதமானால் வருவாய் அலுவலரான டி.ஆர்.ஓ.,வை அணுகி முறையிடலாம். அல்லது மாவட்ட கலெக்டரை அணுகலாம். மாணவன் தரும் உறுதிமொழி சான்றிதழ் தவறானது எனத் தெரியவந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. மாணவர் படித்து முடித்த பின்னர் உறுதிமொழிச் சான்றிதழ் தவறு எனத் தெரிய வந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறது, தமிழக அரசின் அரசாணை.
அண்ணா பல்கலையில்,இந்த ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் மாணவியர் உட்பட, 71 ஆயிரம் பேர், இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, முதல் தலைமுறை பட்டதாரிகளாக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தினகரன்-28/6/2016

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2700 இளநிலை பெறியாளர் (JE) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியில் 2,700 காலியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்பவிருக்கிறது. இதில், சென்னை டெலிபோன்ஸ் வட்டத்தில் 80 காலியிடங்களும், தமிழ்நாடு வட்டத்தில் 198 காலியிடங்களும் உள்ளன. இளநிலைப் பொறியாளர் பதவியானது முன்பு தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் என்று அழைக்கப்பட்டது.
தேவையான தகுதி
விண்ணப்பதாரர்கள் தொலைத்தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், ரேடியோ, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமா அல்லது பட்டம் (பி.இ., பி.டெக்.) பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பி.எஸ்சி. (எலெக்ட்ரானிக்ஸ்), பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) எம்எஸ்சி (எலெக்ட்ரானிக்ஸ்) பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வயது வரம்பில் உரிய தளர்வு அளிக்கப்படும். அதன்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.
தேர்வு விதிகள்
தகுதியான நபர்கள் ஆன்லைன்வழி போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்யப் படுவார்கள். இதில், பொது விழிப்புத் திறன், அடிப்படை பொறியியல், சம்பந்தப் பட்ட பொறியியல் பிரிவு ஆகியவற்றில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். தேர்வு நேரம் 3 மணி நேரம். ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க வேண்டும்.
செப்டம்பர் மாதம் 25-ம் தேதி அன்று ஆன்லைன் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும். தேர்வுக்கு ஜூலை 10-ம் தேதி முதல் ஆன்லைனில் (wwww.externalexam.bsnl.co.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 10-ம் தேதி ஆகும். தேர்வுக்கான பாடம், பணி நியமன விதிமுறைகள், சம்பளம் மற்றும் பல்வேறு படிகள் உள்ளிட்ட இதர விவரங்களை பி.எஸ்.என்.எல். இணையதளத்தில் (www.bsnl.co.in) விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்
நிறுவனம்:
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)
பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
தமிழ்நாடு மட்டும் - 198
மற்ற மாநிலங்கள் - 2532
பணிகள்:
இளநிலை பெறியாளர் (JE)
தகுதி:
Three years Engineering Diploma/B. Tech/B.E. in any of the following disciplines : 1. Telecommunications 2. Electronic 3. Electrical 4. Radio 5. Computer 6. Instrumentation 7. Information Technology From a Central Govt. or State Govt. recognized Institution
Or
B. Sc. (Electronics) /B. Sc. (Computer Science)
Or
M. Sc. (Electronics)
வயது வரம்பு :
18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
ரூ.13,600 - 25,420
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
For General/OBC Candidates Application Fee is - Rs.1000
For All Other Candidates (ST/SC/Ex-s) Application Fee is - Rs.500
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.extemalexam.bsnl.co.in என்ற இணையதளம் மூலம் 10.08.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
25.09.2016
ஆன்லைனில் பதிவு செய்ய தொடங்கும் தேதி:
10.07.2016
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
10.08.2016

Tuesday, 28 June 2016

சமூக வலைத்தளங்களில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரனுக்கு குவியும் கண்டனங்கள்!


சுவாதி கொலை சம்பவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிவந்த சுவாதி என்ற இளம்பெண் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது.
கொலை சம்பவம் நிகழ்ந்து 4 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் காவல்துறையினரால் இன்னமும் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை, இவ்வழக்கில் சிசிடிவி கேமிராவில் சிக்கிய மர்ம நபரை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
இந்நிலையில், சுவாதி மரணம் குறித்து சமூக வளைத்தளங்களில் பரபரப்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்ற வேளையில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் நேற்றைய தினம் கருத்து ஒன்றினை பதிவிட்டிருந்தார். 
மத மோதல்களை உருவாக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறி நடிகர்
ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.   
இதனிடையே, சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியைத் தெரியும் எனக் கூறிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய  லீக் கட்சித் தலைவர் அப்துல் ரஹீம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
 இதன் மூலம், சுவாதி கொலை சம்பவம் மத சாயம் பூசப்பட்டு வேறு பாதையில் பயணிப்பதாகவும், வேதனை அளிப்பதாகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு! திடீர் இயந்திர கோளாதால் 151 பயணிகளுடன் இரண்டு மணி நேரம் வானில் வட்டமிட்ட விமானம்: தவித்த பயணிகள்!


திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை இரண்டு மணி நேரம் தரையிறக்க முடியாமல் விமானி தவித்துள்ளார். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்று மாலை 5.35 மணியளவில் கோலாலம்பூர் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலே விமானத்தில் திடீரென்று கோலாராறு ஏற்பட்டுள்ளது. 
இதனால் விமானி மீண்டும் திருச்சி விமான நிலையத்திலே விமானத்தை தரையிறக்க முடிவு செயதார். ஆனால் திட்டமிட்டபடி தரையிறக்க முடியாததால், விமானம் சுமார் இரண்டு மணி நேரம் வானில் வட்டமடித்து கொண்டே இருந்தது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர் இரவு 7.35 மணி அளவில் விமானம் தரையிறக்கப்பட்டது.
இதனிடையே ஏராளமான பொது மக்கள் திருச்சி விமான நிலையத்தில் குவிந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் திருச்சி விமான நிலையம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. 
திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர்ஏசியா விமானம் நேற்று மாலை 5.20க்கு புறப்பட்டது. இதில், மொத்தம் 151 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட 6வது நிமிடத்தில் திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானிகள், ‘மானிட்டரில் கோளாறு ஏற்பட்டு செயல்படவில்லை’ என கூறியுள்ளார். இதன்பிறகு, எரிபொருளை குறைக்கும் வகையில் வானில் வட்டமிட விமானிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், 7.15 மணி வரை விமான நிலையத்தையே சுமார் 20 முறை சுற்றி சுற்றி வட்டமடித்தது. இதையறிந்ததும் பயணிகள் அலறினர். 
இரவு 7.20 மணிக்கு ரன்வேயில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, உயிர் பிழைத்த சந்தோசத்தில் பயணிகள் கூச்சலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நொறுங்கி விழும் அபாயம்: இதுகுறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ‘விமான என்ஜினுக்கு காற்றழுத்தம்  (பிரஷர்) தரும்  கேபின் பின் பகுதியில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. பிரஷர் குறைந்தால்  என்ஜினின் வேகம் குறைந்து நடுவானில் பறக்கும்போது கீழே விழும் ஆபத்து  உள்ளது. இந்த கோளாறு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும்  அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது’ என்றனர்.

சவுதியில் கொடுமைக்குள்ளான தமிழக உறவுகள் பத்திரமாக மீட்பு:

சவுதி:

சவுதியில் கொடுமைக்குள்ளான தமிழக உறவுகள் பத்திரமாக மீட்பு:
    கடந்த சிலமாதங்களாக வாட்ஸ்-அப் மற்றும் முகநூல்களில் கலைவாணன் என்ற ஒரு தமிழர் அவருடன் சேர்ந்து 3 தமிழர்களை காப்பாற்றும்படி உதவிகேட்டு மன்றாடினார், அதனை பலரும் பார்த்திருப்பீர்கள்.
    இது இந்தியத்தூதரகத்திற்கு பலராலும் அனுப்பிவைக்கப் பட்டமையால் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் திரு. அனில்நோட்டியால் அவர்கள் என்னையும், சமூகசேவகர் திரு. ஜமால் அவர்களையும் தொடர்பு கொண்டு எப்படியாவது இவர்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்குமாறும் அவர்களை மீட்பதற்குண்டான வாய்ப்புகளை கண்டறியுமாறும் வேண்டுகோள் விடுத்தார்கள்.
     அவர் உதவிகோரியிருந்த வீடியோவில் அவர் இருக்குமிடம் தெரியவில்லை என்றவர் அவரின் தொலைபேசியைத் தரவில்லை, ஆனால் பாஸ்போர்ட் நம்பரைத் தெரிவித்திருந்தார் அதன்படி அவரின் பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியைத் தொடர்புகொண்டு கலைவாணனின் தொலைபேசியைப் பெற்று நேரடியாக அவரிடம் பேசியதில் குமார் என்ற ஒரு தமிழர் டிரைவர் விஷா என்று அழைத்துவந்து பாலைவனத்தில் ஆடுமேய்க்க அனுப்பிவிட்டார், அவரிடம் கேட்டதற்கு உங்களை ஆடுமேய்க்கத்தான் அழைத்துவந்தேன் என்றுகூறி அரபிகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்.
   கலைவாணன் காசிநாதன், ராமன் முனுசாமி, எபிநேஷ்வரன் லூக்காஸ் என்ற இந்த மூன்றுதமிழர்களையும் பாலைவனத்தில் ஆடுமேய்க்க அனுப்பப்பட்டு கடந்த ஆறு மாதமாக மிகவும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
   மூவரில் ஒருவரிடமிருந்த தொலைபேசியில் வாட்ஸ்-அப் இருந்ததால் அவர்களுக்கு இங்கிருந்து தொலைபேசியில் ரீசார்ஜ் செய்துகொடுத்து கூகுல் லோக்கசேன் அனுப்பிவைத்து ரியாத்திலிருந்து திரு. ஜமால் அவர்களின் வழிகாட்டலில் நிசார் என்ற ஒரு தமிழரின் துணையுடனும், ஹப்ருல்பாத்தினில் உள்ள ஜலீல் என்ற கேரள சகோதரரின் துணையுடனும் மூன்றுநாட்கள் அந்த ஏரியாவில் தங்கியிருந்து அங்கிருந்த கிராமத்தினரின் கண்களில் புலப்படாமல் இரவு 2 மணிக்கு பாலைவனத்திலிருந்து மீட்டுவந்து இந்தியத்தூதரகத்தில் ஒப்படைத்துவிட்டோம்.
     அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்த காரணத்தினால் இந்தியத்தூதரகத்தின் செலவில் அவர்களுக்குண்டான மருந்துவ உதவிகள் நடைபெற்று வருகின்றது. இவர்களை ஏமாற்றிக்கொண்டுவந்த குமார் என்பவரின் விபரங்களை விசாரித்து அவர்மேல் தக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றது.
     இவர்களை மீட்பதற்குண்டான உதவிகள் செய்த அனைவருக்கும், இந்தியத்தூதரக அதிகாரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Ahmed Imthias
சவூதி தமிழ்ச்சங்கம்.
மனித நேயம் என்ன என்பதை நிரூபித்துக் காட்டிய இந்த நல் உள்ளங்களை நாமும் பாராட்டுவோம்!

Monday, 27 June 2016

உடல் வியாதிகளை குணமாக்கும் மூலிகை குடிநீர்.


ஒரு லிட்டர் தண்ணீரில் கையளவு ஆவரம்பூவை போட்டு சூடாக்கி வடிகட்டி குடித்துவந்தால் கை, கால் பாதங்களில் சேற்றுப்புண், நகச்சொத்தை, உடல் அரிப்பு போன்றவை குணமாகும்.!
ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.
‪‎ஒருலிட்டர்‬ தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!
ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,முகத்தில் ஏற்படும் கருவளையம்,தொண்டைக்கட்டு குணமாகும்.!
ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!
ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!
ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.!
ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து வடிகட்டி அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!
ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!
இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு. ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது. ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான். ஒருமுறை தயாரித்த நீரை அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்..


கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்..
சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.
இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி
. சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்.
“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி. உடல் இயக்கத்தை சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது.
பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்:
1.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.
4.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
5.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.
6.கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.
7.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்...
8.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்.
9.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்
10. மேனிபளபளப்பை பெறும்.
11.கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்
12.சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்
13.ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
14.கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்
15.நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.
17.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது
18.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது.
19.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்
20.அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்.
21.தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி என்னும் ஊரில் தயாரிக்கப்படும் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்.
22.இந்த ஒரிஜினல் உடன்குடி பனைவெல்லம் உங்கள்
பெண்ணாடம் ஆண்டவர் மளிகை கடையில் சுத்தமாகவும் சுகாதரமாகவும் கிடைக்கும் .

மக்கா நகரில் அணிந்திருந்த உடையால் சிக்கல் ! 50 பேரை கைதுசெய்த சவுதி பொலிஸார்!


சவுதி அரேபியாவின் மக்கா நகரில் நாகரீகம் என்ற பெயரில் கிழிந்த மற்றும் இருக்கமாக உடை அணிந்திருந்த 50 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களுள் வித்தியாசமான முறையில் தலை முடியை சிறைத்தவர்கள், நாகரீகம் என்ற பெயரில் கிழிந்த ஆடைகளை அணிந்தவர்கள், நெக்லஸ் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்தவர்கள் என 50 பேரை சவுதி அரேபிய மக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 Thanks by Madawala News

Sunday, 26 June 2016

சிறந்த பராமரிப்பு பணி;பயணிகளுக்கு சேவையில் தென் இந்தியாவில் முதல் இடம்!இந்திய அளவில் திருச்சி விமானநிலையம் 6-வது இடம் பிடித்தது விமானநிலைய இயக்குனர் பேட்டி.

திருச்சி:

சிறந்த பராமரிப்பு பணி;பயணிகளுக்கு சேவையில் தென் இந்தியாவில் முதல் இடம்!இந்திய அளவில் திருச்சி விமானநிலையம் 6-வது இடம் பிடித்தது விமானநிலைய இயக்குனர் பேட்டி:
    சிறந்த பராமரிப்பு பணிக்காக திருச்சி விமான நிலையம் இந்திய அளவில் 6-வது இடத்தை பிடித்துள்ளது என விமானநிலைய இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.
     திருச்சி விமானநிலைய இயக்குனர் குணசேகரன் விமானநிலைய அலுவலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
      இந்தியா முழுவதும் 53 சர்வதேச விமானநிலையங்கள் உள்ளன. விமானநிலையங்களில் சிறந்த பராமரிப்பு பணிகளை செய்துள்ளது குறித்து நொய்டாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் விமானநிலையத்தில் கழிப்பறையை சுத்தமாக வைத்தல், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் உள்பட 36 வகையான சாராம்சங்களை ஆராய்ந்து, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
     இதில் இந்திய அளவில் சண்டிகார் விமானநிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. திருச்சி விமானநிலையம் 4.66 புள்ளிகள் பெற்று இந்திய அளவில் 6-வது இடத்தையும், தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களை கொண்ட தென் மண்டல அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டில் 4.9 புள்ளிகள் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இந்திய அளவில் திருச்சி விமான நிலையம் முதல் இடத்தை பிடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருச்சி விமானநிலையத்திற்கு பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விமானநிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. விமானநிலைய முனையம் விரிவாக்கத்திற்கு ரூ.900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பணிகள் தொடங்கப்படும். திருச்சி விமானநிலைய ஓடுதள பாதை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். நிலம் கையகப்படுத்திய பின் பணிகள் தொடங்கும்.
     திருச்சியில் இருந்து பெங்களூரு, மும்பைக்கு விமானங்கள் இயக்க 2 தனியார் விமான நிறுவனங்களிடம் பேசப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் பெங்களூரு, மும்பைக்கு திருச்சியில் இருந்து விமானங்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, 25 June 2016

ஹஜ்-உம்ரா 'விசா'க்களுக்கு நாங்கள் யாரிடமிருந்தும் கட்டணம் வசூலிப்பதில்லை - சவூதி அரசு அறிவிப்பு..!

25.06.2016

Riyadh : 
Saudi Arabia’s Ministry of Hajj and Umrah on Saturday reiterated that the kingdom does not charge any fee for the issuance of Umrah or Hajj visas.
Al Riyadh Arabic newspaper quoted the ministry as saying via its Twitter account: “Important Notice: Saudi Arabia does not charge any fee for the issuance of Umrah or Hajj visas. They are issued for free by all the embassies of the Kingdom.”

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்கள் ரமலானின் இறுதி 10 நாட்களையும் மஸ்ஜிதுல் ஹரமில் கழிக்கும் விதமாக மக்கா நகருக்கு வருகை!!

மாமன்னரிடம் மன்னர்.   
                               
இரமலானில் சிறப்பு வாய்ந்த இறுதி பத்து தினங்களில் ஹரமைனில் இபாதத்தை நிறைவேற்றுவதற்காக மதீனா முனவ்வரா நகருக்கு மன்னர் அஷ்ஷெய்கு சல்மான் அவர்கள் வருகை புரிந்துள்ளார். மஸ்ஜிதுன்னபவிக்கு வருகை தந்த மன்னர் அஷ்ஷெய்கு சல்மான் அவர்கள் மாமன்னர் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லாவில் நின்று பணிவாக ஸலாமை எத்திவைத்து விட்டு சில மணித்துளிகள் முனாஜாத் செய்தார்கள்.பின்னர் ரவ்லதுல் ஜன்னாவில் தொழுகையை நிறைவேற்றினார்கள். அவர்களுடன் கண்ணியமான இமாம்கள் அஷ்ஷெய்கு அப்துல் ரஹ்மான் ஸுதைஸி அஷ்ஷெய்கு ஹுதைபி மற்றும் அஷ்ஷெய்கு அல் முஅன்னா. அஷ்ஷெய்கு ஸலாஹுல் பத்ரு حفظهم الله ஆகியோர் இருந்தார்கள். மதீனா முனவ்வரா நகரின் மேம்பாட்டு திட்டத்துக்கான வரைவுகளை காணொளி மூலம் துவக்கி வைத்தார்கள்.
ஆயிரம் மாதங்களை விட சிறந்த நாளான குர்ஆன் அருளப்பட்ட லைலத்துல் கத்ர் இரவை தேடிக்கொள்ளும் விதமாக ரமலானின் இறுதி 10 நாளும் மக்காவில் தங்குகிறார்.
81 வயதிலும் ஈமானில் உறுதியானவராகவும், தாம் ஓர் மன்னர் என்பதை விடவும் அல்லாஹ்வுடைய அடிமை என்பதையே பிரதிபலித்து வருகிறார்.

துபாய் மற்றும் அமீரகத்தில் கேன்சலில் நாட்டுக்கு போனால் யார்? யாருக்கு 6 மாதம் U.A.E வர தடை;யாருக்கு தடை இல்லை;முழு விபரம்:

துபாய்:

துபாய் மற்றும் அமீரகத்தில் கேன்சலில் நாட்டுக்கு போனால் யார்? யாருக்கு 6 மாதம் U.A.E வர தடை;யாருக்கு தடை இல்லை;முழு விபரம்:
    New UAE Ban Rule & Profession Categories (2016)
UAE Ban system 2016
Welcome to UAE LABOURS communityBlog
This Important Article is regarding the new LABOUR LAW for UAE Expats that was announced five months ago, on 1stJanuary 2016.
    We are receiving mails and messages from UAE lovers that how can we banned and the Government of UAE has already announced no more ban system for UAE expatriates?
Questions Mostly People Asked!
Explain us the Terms and Condition in easy way?
Which professions to be count and excluded from it?
    So we've decided to write few lines regarding our visitors queries.
    Before starting please note that this new Rule is based on MutualConcept/Agreement and the labour ban can be dismissed if the work permit and employment are terminated in mutual agreement between employee and employer.
What is Mutual Agreement?
Employees who deside to terminate or cancel job contract/visa with a permission from theiremployers(Companies) will be permitted to transfer to othercompanies (employers), even if they have not completed two years at the present company.
    Another Point to be noted that the NEW LABOUR BAN Rule is not for all Professions, there are categories that has been divided in skilled and unskilled Employees.
We have divided professions into 5 Categories and levels.
   Please check out below professions who are under NO LABOUR BAN RULE.
Category 1, 2 and 3 are under NO LABOUR BAN RULE with Mutual agreement while Category 4 and 5 Excluded from the New Labour Ban Rule.
Category 1 (Skilled Labours):
1. Manager
2. Engineer
3. Doctor
4. Teacher
5. Accountant
6. Accounts Clerk
7. Marketing Specialist
8. Quantity Survivor
9. Draftsman
10. Pharmacist
11. Administration Officer
12. Executive Secretary
13. Reservation Officer
14. Safety Officer
15. Public Relation Officer
16. Advertising or Graphics Designer etc
The minimum salary for above skilledlabours should be 12,000 AED with Attested University Degree.
Category 2 (Skilled Labours):
1. Technical workers
2. Technicians
3. Mechanical Related Professions etc
7000 AED minimum salary along with Post Secondary Education certificates required for Category 2 Labours.
Category 3 (Skilled Labours):
1. Sales Executive
2. Sales Representative
3. Sales Supervisor
4. Site Supervisor
5. Administration Clerk
6. Correspondence Clerk
7. Custom Clearance Clerk
8. Cash Desk Clerk
9. Ticketing Clerk
10. Cashier
11. Receptionist
12. Store Keeper
13. Tourist Guide etc
Secondary Education certificate with minimum 5000 AED salary.
Category 4 and 5 (Unskilled Labours):
1. General Labours
2. Housekeepers
3. Construction Labours
4. Helper
5. Cleaner
6. Loading & Unloading
7. Office Boy etc
IMPORTANT:
Category 4 and 5 is not included in NEW UAE BAN RULE , if category 4 and 5 (Unskilled Labours) have not completed 6 months with the first company/employer are exempted from this rule.
FAQ's:
Q: If someone is graduated but currently working in 4th or 5th Category, will he face Labour Ban ?
It Depends what's listed on your Ministry of Labour contract and residence visa.
Another option is that he/she should have Attested Certificates from Home Country, UAE Embassy and from MOFA UAE as-well.
Q: My visa printed in 2015, am I free ofLabour Ban in 2016?
No, Only applicable to Ministry ofLabour contracts that signed after 1stJanuary 2016.
For more FAQ’s please leave your comments below, we will answer youAsap.
Click here to Read "How to Check Visa Status Online"?
Do You Know you can Terminate without Notice? Click here to Read

ஷார்ஜாவில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி மற்றும் இலவச WI-FI யுடன் ஸ்மார்ட் குப்பை தொட்டி:

ஷார்ஜா:

குப்பை தொட்டியும் கோபுரமாகும்; ஷார்ஜாவில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி மற்றும் இலவச WI-FI யுடன் ஸ்மார்ட் குப்பை தொட்டி:
    குப்பையும் கோபுரமாகும் என்பார்கள் தற்போது குப்பை தொட்டியையும் மக்களுக்கு உதவும் கோபுரமாக்க முடியும் என சார்ஜாவில் ஸ்மார்ட் குப்பை தொட்டியை அறிமுகபடுத்தியுள்ளார்கள்.
    ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒரு பகுதியான சார்ஜா மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் துப்புரவு பணியை பீயா என்னும் அரசு சார்பு நிறுவனம் செய்து வருகிறது. குப்பைகளை அகற்றுவதில் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது.
     இதன் ஒரு பகுதியாக முதல் முறையாக ஷார்ஜாவில் ஸ்மார் குப்பை தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குப்பை தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள‌ சோலார் தகடுகள் மூல‌சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்து வை பை எனும் இணைய வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இலவசமாக வை பை வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த தொட்டியில் குப்பைகள் நிறைந்தவுடன் தானியங்கி கருவி மூலம் பீயா கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று விடும் இதன் மூலம் குப்பைகள் அகற்றும் பணி எளிதாகும்.
    இது படி படியாக பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. ஸ்மார்ட் குப்பை தொட்டிக்கள் சார்ஜா கடற்கரை பகுதியில் நிறுவபட்டுள்ளது. இதனை பீயா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் காலித் அல் ஹுரைமி தொடங்கி வைத்தார்

எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..? 


*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?
*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*
*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது
*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் Facebook-ல் share செய்யுங்கள்.
நன்றி.

இந்த உணவுகள் ஏன் இந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டன என்று உங்களுக்கு தெரியுமா?


நாம் விரும்பி உண்ணும், பருகும் சிலபல உணவுகள் உலகின் பல நாடுகளில் ஆரோக்கிய நலன் குறித்து தடைசெய்யப்பட்ட பொருள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்! முக்கியமாக சமோசா, கெட்சப், சூயிங்கம், பாதாம், ஜெல்லி ஸ்வீட்ஸ் என இந்த பட்டியல் நீள்கிறது.
பெரும்பாலும் இந்த உணவு பண்டங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதால் தான் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல், எந்தெந்த நாடுகளில் எந்தெந்த உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளன என பார்ப்போம்...
இந்தியாவில் மிக சாதாரணமாக கருதப்படும் சமோசா, சோமாலியாவில் தடைசெய்யப்பட்ட உணவாகும். முக்கோண வடிவம் கிறிஸ்துவ மதத்தை குடிப்பது போன்று இருப்பதாலும், இஸ்லாம் மதத்திற்கு இது இணக்கமற்றதாக கருதப்படுவதாலும், சமோசா தடைசெய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் ஆரம்ப பள்ளிகளில் கெட்சப் தடைசெய்யப்பட்ட பொருளாகும். இது குழந்தைகள் மத்தியில் ஓர் அடிக்ஷனாக இருக்கிறது. அனைத்திற்கும் இதை சேர்த்துக் கொள்கின்றனர். இதை கலாச்சார அபாயமாக கருதி தடை செய்துள்ளனர்.
அமெரிக்காவில் கிண்டர் எக் தடைசெய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருளாக திகழும் இதில் பொம்மைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த உண்ணக் கூடாத பொருள் உள்ளே இருப்பதால் தான் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் தவறுதலாக பிளாஸ்டிக் பொருளை உண்டுவிடக் கூடாது என்பதற்காக அமேரிக்கா இதை தடை செய்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து சூயிங்கம் மெல்வது சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்படாமல் யாரும் சூயிங்கம் மெல்லக் கூடாது. மீறினால், 500 டாலர் அபராதம். சிங்கப்பூரின் அடையலாமே சுத்தம் தான், அதை இது கெடுக்கிறது என்பதற்காக தான் இந்த தடை.
கஞ்சா கலந்து விற்கப்படும் பாங்கு இந்தியா மட்டுமின்றி, உலகின் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் பச்சை பாதாம் விற்க தடை. சால்மோனெல்லா (salmonella) எனும் பாக்டீரியா பாதிப்பு உண்டாக இது காரணமாக இருப்பதாலும், இதனால், அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்படுகிறது என்பதாலும் பச்சை பாதாம் விற்பதை தடை செய்துள்னர்.
பெரும்பாலான காற்றோட்டமுள்ள சிட்ரஸ் ட்ரிங்க்ஸ்களான மவுண்டன் டியூ போன்றவற்றில் சேர்க்கப்படும் மூலப்பொருளான பி.வி.ஓ நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருளாகும். பி.வி.ஓ அதிகளவில் சேர்வது, ஞாபக சக்தி இழப்பு, மயக்கம், கவன குறைபாடு போன்ற பக்கவிளைவுகள் உண்டாக்க கூடியது ஆகும்.
Source
பச்சை பால் அமெரிக்காவின் 22 மாகணங்களில் தடை செய்ப்பட்டுள்ளது. ஆனால், இது ஐரோப்பிய, ஆப்ரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் பொருளாகும்.
ஜெல்லி ஸ்வீட்ஸ் ஐரோப்பிய கண்டங்களில் தடை செய்யப்பட்ட பொருளாகும். இவற்றில் சேர்க்கப்படும் மூலப்பொருள், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.

Friday, 24 June 2016

ரமலான் ஸ்பெஷல் : காஷ்மீரி மிர்ச்சி குருமா.

ரமலான் ஸ்பெஷல் : காஷ்மீரி மிர்ச்சி குருமா.


தேவையான பொருட்கள்: மட்டன் - 1 கிலோ வரமிளகாய் - 10 வெங்காயம் - 3 பட்டை - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் சோம்பு பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
செய்முறை: முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வாக்கி, பின் மட்டனை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் பட்டை, ஏலக்காய், சோம்பு பொடி, சீரகப் பொடி மற்றும் மட்டன் மசாலா சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி, அதில் விதைகளை நீக்கிய வரமிளகாய்களை போட்டு, மென்மையாக வேக வைத்து இறக்கி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, பின் மிளகாயை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பிறகு மிளகாய் பேஸ்ட் உடன் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, அதனை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து பிரட்டி, பச்சை வாசனை நீங்கி, மட்டனுடன் மசாலா அனைத்து ஒன்று சேர நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், காஷ்மீரி மிர்ச்சி குருமா ரெடி!!

முதுகு நலமாயிருக்க 10 வழிகள்

முதுகு நலமாயிருக்க 10 வழிகள்.

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.
2. அமரும்போது வளையாதீர்கள்.
3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்
4. சுருண்டு படுக்காதீர்கள்।
5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.
6. தினம் இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.
7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.
8. டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.
9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.
10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்

புதுப்பட்டினம் பைத்துல்மால் ( துபாய் மண்டலம் ) இப்தார் நிகழ்ச்சி



அஸ்ஸலாமு அலைக்கும் ,

புதுப்பட்டினம் பைத்துல்மால் ( துபாய் மண்டலம் ) இப்தார் நிகழ்ச்சி.

இன்று 24/06/2016 வெள்ளி கிழமை மாலை இப்தார் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது .இதில் நமது ஊர் சகோதர்கள் அனைவரும் கலந்துகொண்டனர் .
நமது ஊர் சகோதர்கள் அனைவருக்கும் புதுப்பட்டினம் எஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களும் ! நன்றிகளும் ! 










ஏழு நாட்கள் ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸ் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?


அனைவருக்குமே இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது என்று தெரியும். இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
உங்களுக்கு இஞ்சியின் துண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட பிடிக்காது என்றால், அதனை ஜூஸ் போன்று செய்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இங்கு இஞ்சி ஜூஸை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
இஞ்சியில் உள்ள ஆன்டி-டயாபடிக் தன்மை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவ சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸைப் பருகி வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள், நரம்பு மண்டலத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். முக்கியமாக இஞ்சி ஜூஸைக் குடித்து வந்தால், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் மேம்படும். இப்படி புரோட்டீன் அளவு அதிகரித்தால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
இஞ்சியில் உள்ள காரமான உட்பொருட்களான ஜின்ஜெரால்கள், பாராடோல்கள், ஷோகோல்கள் மற்றும் ஜின்ஜெரான்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவற்றை அழிக்கவும் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், இஞ்சியை ஜூஸ் செய்து குடித்து வாருங்கள். குறிப்பாக ஆண்கள் பருகினால், புரோஸ்டேட் புற்றுநோய் வராது.
இஞ்சி வயிற்றுப் பிரச்சனைகளான செரிமானமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தருவதால், இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து அடிக்கடி பருகி வந்தால், இரைப்பைக் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதோடு, வராமலும் தடுக்கப்படும்.
இஞ்சி இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.
இஞ்சியில் உள்ள நிவாரணிப் பொருட்கள், நாள்பட்ட மூட்டு வலிகளில் இருந்து விடுபட உதவும். மேலும் இது ஆய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மூட்டு வலி பிரச்சனைகள் இருப்பவர்கள், இஞ்சி ஜூஸை அடிக்கடி பருகி வருவது நல்லது.
இஞ்சியை சுத்தமாக நீரில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி, பாதி எலுமிச்சை சாறு மற்று தேவையான அளவு தேன் கலந்தால், இஞ்சி ஜூஸ் தயார்.