திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை இரண்டு மணி நேரம் தரையிறக்க முடியாமல் விமானி தவித்துள்ளார். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்று மாலை 5.35 மணியளவில் கோலாலம்பூர் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலே விமானத்தில் திடீரென்று கோலாராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விமானி மீண்டும் திருச்சி விமான நிலையத்திலே விமானத்தை தரையிறக்க முடிவு செயதார். ஆனால் திட்டமிட்டபடி தரையிறக்க முடியாததால், விமானம் சுமார் இரண்டு மணி நேரம் வானில் வட்டமடித்து கொண்டே இருந்தது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர் இரவு 7.35 மணி அளவில் விமானம் தரையிறக்கப்பட்டது.
இதனிடையே ஏராளமான பொது மக்கள் திருச்சி விமான நிலையத்தில் குவிந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் திருச்சி விமான நிலையம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர்ஏசியா விமானம் நேற்று மாலை 5.20க்கு புறப்பட்டது. இதில், மொத்தம் 151 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட 6வது நிமிடத்தில் திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானிகள், ‘மானிட்டரில் கோளாறு ஏற்பட்டு செயல்படவில்லை’ என கூறியுள்ளார். இதன்பிறகு, எரிபொருளை குறைக்கும் வகையில் வானில் வட்டமிட விமானிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், 7.15 மணி வரை விமான நிலையத்தையே சுமார் 20 முறை சுற்றி சுற்றி வட்டமடித்தது. இதையறிந்ததும் பயணிகள் அலறினர்.
இரவு 7.20 மணிக்கு ரன்வேயில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, உயிர் பிழைத்த சந்தோசத்தில் பயணிகள் கூச்சலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நொறுங்கி விழும் அபாயம்: இதுகுறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ‘விமான என்ஜினுக்கு காற்றழுத்தம் (பிரஷர்) தரும் கேபின் பின் பகுதியில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. பிரஷர் குறைந்தால் என்ஜினின் வேகம் குறைந்து நடுவானில் பறக்கும்போது கீழே விழும் ஆபத்து உள்ளது. இந்த கோளாறு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது’ என்றனர்.
No comments:
Post a Comment