Monday, 17 October 2016

நாம ருசித்து சாப்பிடும் ஹோட்டல்களில் இப்படிதான் சாம்பார் தயார் செய்கின்றனர்..!?


சிலர் வீட்டில் சாப்பிடுவதை விட ஹோட்டல் சாப்பாடுகளை விரும்பி சாப்பிடுவர்.
அவர்களை கவர்ந்து இழுப்பது ஹோட்டல் சாம்பார் தான். அந்த சாம்பார் எப்படி தயார் செய்கின்றனர் என பார்ப்போமா..!
1.துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.
2.வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
3.பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி+தக்காளி+பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4.பின் அரைத்த விழுது +உப்பு+1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
5.பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
6.தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி சேர்க்கவும்.
7.இந்த சாம்பார்இ ட்லி,தோசை,வெண்பொங்கல்,ஊத்தாப்பம் என அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.
குறிப்பு..!
1.சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
2.சாம்பார் இன்னும் வாசனையாக இருக்க தாளிப்பில் சீரகத்தை மறக்காமல் சேர்க்கவும்….! இவ்வளவுதாங்க..

உடல் எடை குறைய சீரகத் தண்ணீர் குடியுங்கள்!

நாள்தோறும் சீரகத் தண்ணீர் குடித்தால், உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும்.

உடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவும்.
அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சீரகத் தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சீரகத்தில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
இங்கு சீரகத் தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சீரகத் தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும்.
ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து, தினமும் குடித்து வர வேண்டும்.
சீரக தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.
சீரகத் தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
நவீன வாழ்க்கை சூழலில் முறையற்ற உணவுப் பொருள் பழக்கம், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்கள் நம் உடலில் எளிதாக நுழைகின்றன. ஆனால் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.
தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
சீரகத் தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாகும்.
சீரகத் தண்ணீரின் மருத்துவ குணம் அறிந்த கேரளத்து மக்களின் அன்றாட குடிநீரே சீரகத் தண்ணீர் தான். இதன் மகத்துவம் அறிந்த நாமும் இன்றிலிருந்து சீரகத் தண்ணீர் குடிப்போம். சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக வாழ்வோம்.

Friday, 14 October 2016

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!


    இலங்கையில் காலநிலையில் இன்று தொடக்கம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை வரட்சியை தோற்றுவித்த காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இடைப்பருவ பெயர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நாட்டில் பரவலாக மழைபெய்யக்கூடும் என்றும் திடீரென காற்று வீசி இடி, மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.
இவ்வாறு ஏற்பட்டுள்ள திடீர் மற்றத்தினால் பொதுமக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் பொதுமக்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வீடுகளுக்கு அருகில் இருக்கும் பெரியமரங்களில் உள்ள பட்ட மரக்கொப்புகளை அகற்றுவதன் மூலமும் பாதுகாப்பை உறுதிப்படுத்திகொள்ள முடியும் என்றும் இடிமின்னல் தாக்கத்தின் வெற்று பிரதேசங்களில் நிற்பதை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடும் வரட்சிக்குப் பின்னர் நேற்று பொலநறுவையில் கன மழை பெய்துள்ளது. அதேவேளை இன்று அதிகாலையிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, 13 October 2016

திருமண சட்டத்தில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொதுசட்டமாக அமல்படுத்த வேண்டும் - விஜயதரணி MLA கோரிக்கை.....!!

திருமண சட்டத்தில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொதுசட்டமாக அமல்படுத்த வேண்டும் - விஜயதரணி MLA கோரிக்கை.....!!

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவானாக மகிளா காங்கிரஸின் அகில இந்திய பொதுச்செயலாளர் விஜயதரணி எம்.எல்.ஏ திருமண சட்டத்தில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொதுசட்டமாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது...
இஸ்லாமிய இளம் பெண்களின் மணவாழ்க்கை பிடிக்காதபோது விரைவில் தலாக் பெற்று மறுமணம் செய்து கொள்ள முடிகிறது.
இந்து இளம் பெண்களின் மணவாழ்க்கை பிடிக்காதபோது விவாகரத்திற்காக நீதிமன்றம் அலைந்தே சீரழிந்து போய்விடுகிறது.
எனவே திருமண சட்டத்தில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொதுசட்டமாக அமல்படுத்த வேண்டும்.

சவுதி - ரியாத்தில் சாராயம் கட்சி விற்ற ஐந்து பேர் அதிரடி படையரானால் கைது !!!


சவுதி அரேபியா- ரியாத்தில் சாராயம் காச்சி விற்ற கேரளா மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பலை சவுதி அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டனர். அந் நாட்டில் மதுபானங்கள் தயாரிப்பதும் விற்பதும் குடிப்பதும் பயங்கர குற்றம் 
அந்த நாட்டு சட்டப்படி மூவருக்கு மரண தன்டனையும் (தலை வெட்டு) இருவருக்கு தலா 10 ஆன்டு சிறை தண்டனை. கிடைக்கும் என்று ஏத்தி பார்க்கப்படுகிறது
நண்பர்களே !!!
நாம் நாடு விட்டு நாடு வருவதற்க்கு காரணம் நம்மலுடைய குடும்பங்களின் சூழ்நிலை காரனமாகவும் குடும்ப கஷ்டத்தின் காரனமாகவும் வந்திருக்கிரோம். இருக்க கூடிய காலத்தில் நன்மக்களாக வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும் இது போல் தங்களுடைய நட்பு வட்டதில் யாராவது செய்தால் தடுத்து நிருத்துங்கள்.
நமக்காக நமது தாய்,தந்தை மனைவி. காத்து கொண்டு இருக்கின்றனர்

இஸ்லாமிய சாம்ராஜ்யமான சவூதி அரேபியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அதிகமானவர்கள் அறிந்த செய்தியே! அதற்கான காரணங்கள்!!


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கள்ளக் குழந்தையான ஈரான் நாட்டின் மீது விதிக்கப் பட்ட பொருளாதாரத்தடை அகற்றப்பட்ட காரணத்தினால் அவர்களும் சந்தையில் கச்சா எண்ணெய் விற்க ஆரம்பித்து விட்டார்கள் . சவூதி அரேபியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியா போன்ற நாடுகள் ஈரானிடம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஈராக் , லிபியா போன்ற நாடுகளில் பொய்யான காரணங்களை கூறி படையெடுத்து அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்த அமெரிக்காவிடமும் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது .
எமன் எல்லையில் ஈரான் ஹூசிஈன்களுக்கு ஆயுத உதவிகளை செய்து சவூதிக்கு எதிராக போரை தூண்டிய காரணத்தினால் நாட்டின் பாதுகாப்பு கருதி போருக்காக செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது . .......
இது போன்ற காரணங்களினால் இந்த நாடு நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது . இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக விசிட் விசா , பிஸினஸ் விசா , இக்காமா , போக்குவரத்து விதிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனை பலரும் மிக கடுமையாக விமர்சிக்கின்றனர் .
அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் வழி முறைகளை சரியாக புரிந்தவர்கள் இஸ்லாமிய ஆட்ச்சியாளர்களை விமர்சனம் செய்யமாட்டார்கள். இவ்வாறு விமர்சனம் செய்வது கவாரிஜ்களின் வழிமுறைக்கு ஒப்பானது.
இந்த நாட்டின் மூலம் தனிமனிதர்களும் , இஸ்லாமிய சமூகமும் மார்க்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எண்ணிலடங்கா பலன்களை அடைந்துள்ளனர்.
இன்பங்களை அனுபவித்தவர்கள் துன்பத்திலும் பங்கெடுக்க வேண்டும். குறைந்த பட்சம் விமர்சிக்காமல் அமைதி காக்கட்டும் . ஷேக் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ் ) கூறினார்கள் இந்த ந்நாட்டிற்கு எதிரானவர்கள் சத்தியத்திற்கு எதிரானவர்கள் , தவ்ஹீதுக்கு எதிரானவர்கள்.
பதிப்புரிமை: நன்றி: யசீர் ஹமீத்

ரேஷன் - புகார் எண் அறிவிப்பு!!!

ரேஷன்  - புகார் எண் அறிவிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உணவுத் துறையின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் பொது விநியோகத்திட்டத்திற்கு 3 தேவைக்கான அரிசி கையில் இருப்பதாகவும், தீபாவளி பண்டிகை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், தேவைப்படும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் நியாய விலை அங்காடிகளுக்கு உடனுக்குடன் நகர்வு செய்ய வேண்டுமெனவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
மேலும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் புகார் அளிக்க வேண்டிய எண்களையும்  அறிவித்துள்ளார்.
044 28592828 , 9445190660, 944519061, 944519062

விரைவில் உங்கள் செல்போன் எண் மாற உள்ளது?


விரைவில் உங்கள் செல்போன் எண் மாற உள்ளது?
➖➖➖➖➖➖➖➖➖➖➖
இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்கங்களைக் கொண்ட செல்போன் எண்கள், விரைவில் 11 இலக்கங்களைக் கொண்டதாக மாற்ற மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் செல்போன் சேவை அறிமுகம் செய்யப்பட்ட போது, 2003ம் ஆண்டில் 10 இலக்க எண்களைக் கொண்ட செல்போன் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
செல்போன் வாடிக்கையாளர்களின் அடிப்படையில் அப்போதைய கணிப்பின்படி இந்த 10 இலக்க எண் என்பதை அடுத்து 30 ஆண்டுகளுக்கு பராமரிக்க முடிவும் செய்யப்பட்டது.
ஆனால், இந்தியாவில் செல்போன்  சேவையின் அசுர வளர்ச்சியும், வாடிக்கையாளர்களின் அதீத பயன்பாடு காரணமாக, பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் மீறி செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதோடு, ஒருவரே பல எண்களைப் பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது.
இதனால், செல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாக உள்ளது. இந்த சிக்கலுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்போன் எண்களை 11 இலக்கங்கள் கொண்டதாக மாற்ற தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
➖தினமனி

Wednesday, 12 October 2016

அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு !

அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு !

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் மீது  IPC153 (a) மத வேற்றுமை உணர்வை தூண்டும் விதத்தில் செயல்படுதல் , 25(1)(a) ஆயுத சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு...
துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பூஜை நடத்திய படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் அளித்த புகாரில் கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை..

ஹிஜாப் பெண்களின் முன்னேற்றத்தை தடுத்ததா ?

ஹிஜாப் பெண்களின் முன்னேற்றத்தை தடுத்ததா ?

முகம், கைகளை தவிர உடலின் மற்ற பாகங்களை மறைக்க வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டத்தின்படி ஆடை அணிந்துள்ள இந்த சகோதரி நீதித்துறையில் முதல் தரத்தில் வெற்றிப்பெற்று தெலுங்கானா மாநில நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் அணிந்துள்ள ஹிஜாப் இவருடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததா ?
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தன்னுடைய வீட்டில் இருக்கும்போது என்ன மாதிரியான ஆடை அணிய வேண்டும் என்பதில் அவர்களின் விருப்பம் ஆகும்.
ஆண் வீட்டை விட்டு வெளியில் வந்து சமூகத்துடன் கலக்கும் போது அடையாளம் காண்பதற்காக அந்த ஆணின் முகம் வெளியில் தெரியவேண்டியது அவசியமான ஒன்றாகும்.
முகம் வெளியில் தெரிய வேண்டும் என்பது அவசியமான ஒன்று என்பதால் ஆண்கள் அனைவரும் முகம் தெரியும் விதமாகவே வெளியில் வருகிறார்கள்.
அதே அந்த ஆணின் வயிறு வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொடை வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
வயிறு, தொடை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அனைத்து மத ஆண்களும் அந்த பகுதிகளை மறைத்தே வெளியில் வருகிறார்கள்.
ஆண்கள் வயிறு, தொடை, தொப்புள் தெரியும் விதமாக வெளியில் வந்தால் அவர்களை சமூகம் பைத்தியக்காரர்கள் என்று அழைக்கும்.
ஒருவேளை ஆண்கள் அந்த பகுதிகளை வெளியில் தெரியும் விதமாக வந்தால் கூட ஆண்களுக்கு வன்புணர்வு போன்ற கொடுமைகள் நிகழாது.
அதேப்போல் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியில் வந்து சமூகத்துடன் கலக்கும் போது அவரை அடையாளம் காண்பதற்காக அவருடைய முகம் தெரியவேண்டியது  அவசியமான ஒன்று...
முகம் வெளியில் தெரிய வேண்டியது அவசியம் என்பதால் முகம் தெரியும் விதமாக வெளியில் வரலாம். இஸ்லாம் அதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை.
அதே பெண்ணின் வயிறு வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொடை வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை,
வயிறு, தொடை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை எனும்போது அதை மூடி வருவது தானே சரியான ஒன்றாக இருக்க முடியும் ?
சரியான ஒன்றை முஸ்லிம் பெண்கள் செய்யும்போது அவர்களை ஊக்குவிக்க வேண்டிய சமூகம் இழிவாக பேசுகிறது.
ஆண்கள் அரைகுறையாக வந்தால் பைத்தியக்காரர்கள் எனும் சமூகம் பெண்கள் அரைகுறையாக வந்தால் சூப்பர் என்கிறது. மேலும் பெண்கள் பாலியல் ரீதியாக எண்ணற்ற துன்பங்களை சந்திப்பதையும் காண முடிகிறது.
அதுமட்டுமில்லாமல் பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால் அது அவர்களுக்கான சுதந்திரம் என்று வக்காலத்து வாங்குபவர்கள் முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து வெளியில் வருவதும் அது அவர்களுக்கான சுதந்திரம் என்று வக்காலத்து வாங்க மறுப்பது ஏன் ?
முஸ்லிம் ஆண்களாகிய நாங்கள் முஸ்லிம் பெண்களை ஹிஜாப் அணிய வேண்டும் என்று அடிமைப்படுத்துவதாக சில பெண்ணிய அமைப்புகள் கூறுகிறார்கள்.
நாங்கள் எங்களுடைய குடும்ப பெண்களை ஹிஜாப் இல்லாமல் வெளியில் வாருங்கள் என்றாலும் அவர்கள் ஹிஜாப்புடன் தான் வெளியில் வருவார்களே தவிர ஹிஜாப்  இல்லாமல் வெளியில் வரமாட்டார்கள்.
ஏனென்றால் ஹிஜாப் அணியாத பெண்களை விட ஹிஜாப் அணிந்த பெண்கள் சமூகத்தில் கலக்கும்போது 100 சதவீதம் பாதுகாப்பாகவும், சௌகரியமாக கருதுகிறார்கள்.
அதனால் தான் சில ஐரோப்பிய நாடுகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டவுடன் முஸ்லிம் பெண்கள் பிரம்மாண்டமான தொடர் போராட்டங்களை நடத்தி தடையை ரத்து செய்ய வைத்தனர்.
முகம் தெரியும் அளவுக்கு வெளியில் வரும் ஒரு ஆணால் வெற்றியும், சாதனையும் படைக்க முடியும் என்றால் அதே முகம் தெரியும் அளவுக்கு வெளியில் வரும் ஒரு பெண்ணால் ஏன் வெற்றியும் சாதனையும் படைக்க முடியாது ?
வெற்றி, சாதனை என்பது அறிவு, திறமை, உழைப்பை வைத்து கிடைக்கக்கூடியது. இதற்கும் தொப்புளுக்கும் என்ன சம்பந்தம் ? பைத்தியக்காரத்தனமாக ஆடை அணியக்கூடியவர்கள் முஸ்லிம்களை பார்த்து பைத்தியக்காரர்கள் என்கிறார்கள்.
ஹிஜாப் எந்த வகையிலும் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கவில்லை. மாறாக பெண்களின் பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது.
நல்லவர்களுக்கு நல்லுபதேசம் பயனளிக்கும்.

Tuesday, 11 October 2016

ஆண்களே இளநரை என்று கவலையா? இதச் செய்யுங்க மறைந்துவிடும்!


நரைமுடி இன்றைய தலைமுறைகளில் சர்வ சாதரணமாகிவிட்டது. நமது பாட்டிகளுக்கு 60 வயதுகளிலுமே ஒன்றிரண்டு முடிகள்தான் நரைத்தது. இப்போதும் பல முதியவ்ர்களுக்கு முடி கருமையாக இருப்பதை காணலாம்.
இதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஷாம்பு உபயோகித்தது இல்லை. இன்று பதினெட்டு ப்ளஸ்களிலேயே நரைமுடியை மறைக்க கலரிங் செய்து கொள்கிறார்கள்.
இவை எத்தகைய அபாயத்தை உண்டு பண்ணும். பலவித நோய்களை தருவதோடு கூந்தல் வளர்ச்சியும் 30 க்கு மேல் மோசமாக இருக்கும்.
இள நரையை தடுக்க கலரிங்க் செய்யத் தேவையில்லை. இந்த நெல்லிகாய் சிரப்பை வாரம் ஒருமுறைஉபயோகியுங்கள். நரை முடி காணாமல் போய்விடும்.
புதிதான நெல்லிக்காயை சுத்தம் செய்து அதனை துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.

நெல்லிக்காயை இடித்து அல்லது மிக்ஸியில் போட்டு சாறை எடுத்துக் கொள்ளவும்.

அந்த நெல்லிக்காய் சாறை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நீரில் தேயிலைப் பொடியை போட்டு கொதிக்க வைத்து, வரத் தேநீர் தயார் செய்து, அதனை நெல்லிக்காய்சாறுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

உங்கள் கூந்தலை தனித்தனியான பிரித்து இந்த் சாறினை தடவவும்.. தலையில் ஸ்கால்ப்பில் தடவுங்கள். மிச்சமிருந்தால் நுனிவரை தடவலாம்.

1 மணி நேரம் பிறகு தலை அலசவும். இப்படி வாரம் 1 அல்லது 2 முறை செய்தால் உங்கள் கூந்தலின் நரை போக்கி இளமையாக மிளிரும்.

முதலமைச்சராக ஜெயலலிதா நீடிப்பார்..துறைகள் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாற்றம் !


முதலமைச்சர் #ஜெயலலிதா பொறுப்பில் இருந்த துறைகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கீடு செய்து ஆளுநர் அறிவிப்பு..
மேலும், ஜெயலலிதா முதலமைச்சராக நீடிப்பார் என்றும், அவர் பொறுப்பில் இருந்த காவல்துறை, உள்துறை உள்ளிட்டவைகள் கூடுதலாக ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடுகள் தொடரும் என்றும், முதலமைச்சரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அமைச்சரவை கூட்டங்களுக்கு இனி ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்   என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Jayalalithaa | #OPanneerselvam

ஆப்பிளில் பாயாசம் செய்யலாம். உங்களுக்கு தெரியுமா?


பாயாசத்தில் பழம் போட்டு செய்தால் சுவையாக இருக்கும். ஆப்பிள் கொண்டு பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 
ஆப்பிள் - 2
பால் - 4 கப்,
சர்க்கரை - ஒரு கப்,
கோவா - கால் கப் (உதிர்த்துக் கொள்ளவும்),
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
மில்க்மெய்ட் - கால் கப்,
முந்திரி -  தேவைக்கு
வெனிலா எசன்ஸ் -  ஒரு துளி.
செய்முறை : 
* ஆப்பிளை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
* வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய ஆப்பிளை லேசாக வதக்கி வைக்கவும். 
* பாலை நன்கு காய்ச்சி அதனுடன் உதிர்த்த கோவா, மில்க்மெய்ட், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். 
* நன்கு கொதித்ததும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு... பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
* இனிப்பான ஆப்பிள் பாயாசம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களைsamayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

சூயிங்கம் விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும்.


குழந்தையாக இருக்கும் போது சூயிங்கம் விழுங்கிவிட்டால் வயிறு ஒட்டிக்கொள்ளும், அது சரியாக 7 வருடம் ஆகும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். செரிமானம் ஆகாது என பல விஷயங்கள் கூறுவார்கள். இன்றும் கூட ஒருசிலர் சூயிங்கம் விழுங்கிவிட்டு பயப்படுவதுண்டு. ஆனால், உண்மையில் சூயிங்கம்மை விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும் என்பதை பற்றி பார்ப்போம்…
நீண்ட நாட்களாக ஒரு புரளியை நீங்கள் கேள்விப்பட்டு வந்திருப்பீர்கள். சிறு வயது முதலே சூயிங்கம்மை விழுங்கினால் அது செரிமானம் ஆகாது, ஒருசில வருடங்கள் அது வயிற்றில் தங்கிவிடும் என்றெல்லாம் கூறுவார்கள். இது முற்றிலுமான பொய். இனிப்பூட்டிகள் மற்றும் ஃப்ளேவர்கள் கொண்ட சூயிங்கம் வயிற்றில் செரித்து விடும்.
சூயிங்கமில் இருக்கும் அந்த கம் போன்ற மூலப்பொருள் எளிதாக கரையாது. அது வயிற்றிலேயே ஒட்டிக்கொள்ளும் என கூறுவார்கள். அப்படி இல்லை. மற்ற உணவுகளை காட்டிலும் இது முழுமையாக செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளுமே தவிர வயிற்றிலேயே தங்கிவிடாது.
வயிற்று கோளாறு போன்ற சில உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் சூயிங்கம் விழுங்கினால் பாதகமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. வயிற்று வலி, பிடிப்பு போன்றவை ஏற்படலாம். பெரிய அளவில்… பெரிய அளவில் சூயிங்கம்மை விழுங்கினால் அது பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் சில சமையம் சூயிங்கம்மை விழுங்கும் போது தொண்டையில் அது சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
உணவு சாப்பிட்ட பிறகு ஓரிரு நிமிடங்கள் சூயிங்கம் மென்றால் வாய் துர்நாற்றம் குறையும் வாய்ப்புகள் உண்டு. ஆயினும் அதிகம் சூயிங்கம் பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் அறிவுரைக்கின்றனர்.
தினமும் அதிக நேரம் சூயிங்கம் மெல்வது தாடை எலும்பில் கோளாறுகள் உண்டாக்கலாம். 

Monday, 10 October 2016

குடும்ப வன்முறை - உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.


குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், 'வயதுக்கு வந்த ஆண்கள்' மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற சொல் உள்ளதால், பெண்களும், வயதுக்கு வராதவர்களும் தப்பித்து  வருவதாகவும், எனவே  குடும்ப வன்முறை தொடர்பாக யார் யார் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் இடம் பெற்றுள்ள, 'வயதுக்கு வந்த ஆண்கள்' என்ற வார்த்தை நீக்கப்படுவதாக  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பெண்களை, அவர்களுடைய கணவர் வீட்டில் உள்ள பெண்களும், வயதுக்கு வராதவர்களும் கொடுமைப்படுத்தினால், இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இதுவரை ஆண்கள் தண்டிக்கப்பட்டு வந்த நிலையில் மருமகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.
பெண்களை குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் அறிவாளிகளாக வளர்வதற்கு தாயின் மரபணு தான் காரணம்: ஆய்வில் தகவல்.


குழந்தைகள் பிறந்தது முதல் அறிவாளிகளாக வளர்வதும் அல்லது அறிவு குறைந்தவர்களாக மாறுவதும் அவர்களுடைய தாயாரின் மரபணுவை பொருத்துள்ளதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாயாருக்கு X வகை குரோமோசோம் இரண்டு உள்ளதால் அவர்கள் எளிதில் அறிவை உற்பத்தி செய்யும் மரபணுக்களை தங்களுடைய குழந்தைகளுக்கு அனுப்புகின்றனர்.
ஆனால், இந்த X வகை குரோமோசோம் தந்தைக்கு ஒன்று மட்டுமே இருப்பதால் அவர்களால் அறிவை உற்பத்தி செய்யும் மரபணுக்களை குழந்தைகளுக்கு அனுப்ப முடியாது.
அதாவது, குழந்தை அறிவாளியாக வளர்வதும் அல்லது அறிவு குறைந்தவர்களாக வளர்வதும் தாயின் மரபணுவை பொருத்து தான் உள்ளது.
இதில், தந்தை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.
எனினும், தந்தை மூலம் அறிவு மரபணுக்கள் குழந்தைகளுக்கு அனுப்பப்பட்டாலும் அவை குழந்தைகள் வளர்ச்சி அடையும்போது தானாக செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதேசமயம், குழந்தைகள் அறிவாளிகளாக வளர்வதற்கு சுமார் 60 சதவிகிதம் தாயாரின் மரபணு காரணமாக இருந்தாலும் கூட, எஞ்சிய 40 சதவிகிதம் குழந்தை எந்த சூழலில் வளர்கிறது என்பது பொருத்து அமையும் எனவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நீதிபதிகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள பிரத்யேக அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு !


நீதிபதிகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள பிரத்யேக அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு !
நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளின் தீர்ப்பு, விசாரணை குறித்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக அவர்களுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், நீதிபதிகளின் தீர்ப்புகள், ஒத்திவைப்புகள், வழக்குகளை விசாரிக்கும் காலம், உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.
இது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கும் பொருந்தும்.

கொசுக்களை ஒழிக்க வழி இருக்கு!


இன்றளவில் பெருகி வரும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். இந்த நோயின் தாக்கம் மரணம் வரைகூட கொண்டு செல்லும். கொசுக்களை தவிர்க்க கெமிக்கல் கலந்த கொசுவிரட்டிகளை பயன்படுத்தும்போது பாதிப்புகளும் அதிகம். இதற்கு மாற்றாக இயற்கை முறையில் கொசுக்களை விரட்டும் வழிகளைப் பற்றி பார்க்கலாம்.
*கொசுக்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க தேங்காய் எண்ணெய் தடவினால் போதுமானது என்று வாட்ஸஅப் வதந்திகள் பரவி வருகின்றன. தேங்காய் எண்ணெயால் ஒரளவு மட்டுமே தாக்குபிடிக்க முடியும்.  மருந்து கடைகளில் கிடைக்கும் நொச்சி எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தடவினால் கொசுக்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். 
*இதேபோல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டு கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வீசுவது மட்டுமல்ல... கொசுக்களும் நெருங்காது.
*புதினாவை சிறிது நீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளித்தால், இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்து விடும்.
*வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளை கைப்பிடியளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் பச்சிலை தைலத்தை கொசுவிரட்டியாக பயன்படுத்தலாம். கை, கால், பாதங்களிலும் சிறிதளவு தடவினால், பச்சிலை தைலத்தின் நெடி தாங்காமல் கொசு ஓடிவிடும். மேற்சொன்ன பச்சிலையை உலர வைத்து, அதில் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை என இருவேளைகளிலும் வீட்டுக்கு சாம்பிராணி புகை காட்டலாம். 
*பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் 1:5 என்ற கணக்கில் கலந்து துணியில் தோய்த்து, ஜன்னல், கதவு மற்றும் வீட்டில் துளையுள்ள இடங்களில் தொங்கவிட்டால் கொசுக்கள் உள்ளே வராது.
*கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து எரித்து வீடு முழுக்க காட்டலாம் அல்லது தண்ணீரில் கற்பூரத்தைப் போட்டு வைக்கலாம். இதனால் ஈக்கள் முழுவதும் கட்டுப்படுத்தப்படும். ஆனால் கொசுக்களை ஓரளவே கட்டுப்படுத்தலாம்.
*யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது. ஆஸ்துமா நோயாளிகள் கொசுவினை விரட்ட புகைபோடுவதை தவிர்ப்பது நல்லது.

Saturday, 8 October 2016

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்மாநில தலைமையின் முக்கிய அறிவிப்பு:


தனியார் சட்டத்திற்குள் தலையிட வேண்டாம்!
பாஜகவுக்கு முஸ்லிம்கள் எச்சரிக்கை!!
சிறுபான்மை சமுதாயத்தில் பெரும்பான்மை சமூகமாக முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மதச்சார்பற்ற நம் நாட்டில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுமானவையாக உள்ளன. ஆயினும் சில சட்டங்கள் மட்டும் மத நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால் அனைத்து மதத்தினருக்கும் விதி விலக்காக அவர்களின் மத நம்பிக்கை படி செய்து கொள்ள மிகச்சில சட்டங்களில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிவிலக்கின் படி முஸ்லிம்கள் தங்களின் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை போன்ற விஷயங்களில் இஸ்லாமியச் சட்டத்தின் படி செய்து கொள்ள அனுமதிப்பது தான் முஸ்லிம் தனியார் சட்டமாகும்.
முஸ்லிம்கள் தங்களின் மத நம்பிக்கைப் படி இதனைச் செய்வதில் மற்ற எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இருப்பினும் முஸ்லிம்களின் இந்த உரிமையைப் பறித்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பாஜக, ஆர்.எஸ்.எஸ்  போன்ற சங்பரிவார அமைப்புகள் துடித்து கொண்டிருக்கின்றன.
சங்பரிவாரத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் உச்சநீதிமன்றத்தில் தலாக் (விவாகரத்து) வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இஸ்லாமியச் சட்டத்திற்குள் நுழைவது முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பதாக ஆகுமா? என்ற கேள்வியோடு மத்திய அரசின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
உடனே பரிந்துரை என்கிற பெயரில் பாஜக அரசு முஸ்லிம் விரோதப் போக்கைக் காட்டும் விதமான அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையைப் பார்க்கின்ற போது  ‘ஆடு நனையுதே என்று ஓநாய் அழுகின்ற” பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
முத்தலாக் என்பது சமத்துவத்திற்கு எதிரானது, பெண்களின் சுயமரியாதையைப் பாதிக்கக்கூடியது என்பதாக தனது அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமியப் பெண்களின் நலனில் பாஜகவிற்கு உதித்திருக்கிற அக்கறையை இங்கு கவனிக்க வேண்டும்.
குஜராத், முஸாஃபர்  நகர் உட்பட பல்வேறு கலவரங்களில் ஆயிரக்கணக்கான பெண்களைக் கருவறுத்தவர்கள், அகதிகளாக ஊரை விட்டே ஓட ஓட விரட்டியவர்கள் இன்று தலாக் பற்றி கவலை கொள்வது அப்பட்டமான அயோக்கியத்தனாமாகும்.
ஒரு நேரத்தில் முத்தலாக என்பது இல்லை என்பது உண்மைதான். சவூதி எகிப்து உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்ல அனுமதியில்லை. நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய வழியிலும் இதற்கு அனுமதி இல்லை. முஸ்லிம் தனியார் சட்டத்தில் தவறுதலாக இடம்பெற்ற இச்சட்டத்தை முஸ்லிம் சமுதாயத்தின் ஒப்புதலோடு மாற்றியமைத்தால் அதில் முஸ்லிம்களுக்கு மறுப்பு இல்லை.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள விவாகரத்து உரிமையை ஒட்டு மொத்தமாகப் பறிக்க பாஜக அரசும் நீதிமன்றமும் முயல்வதை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது. இது அரசியல் சாசனம் வழங்கிய உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்பதுதான் முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தாகும்.
மற்ற சமுதாயம் போல் விவாகரத்து வழக்குக்கு ஐந்து பத்து ஆண்டுகள் அலைவது போல் முஸ்லிம்கள் அலைய தயாரில்லை.
விவாகரத்து தாமதம் ஆவதால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதையும், தவறான செயல்களில் ஈடுபடுவதையும் சிந்திக்கும் யாரும் இஸ்லாம் கூறும் விவாகரத்து முறைதான் சரியானது என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.
மேலும் போகிற போக்கில் தலாக் சொல்வது இஸ்லாத்தில் இல்லை.
கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை எனில் இரு வீட்டாரும் இணைந்து அவர்களை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களால் முடியாத நிலையில் ஜமாத்தார்கள் தலையிட்டு இணைத்து வைக்க முயற்சி செய்ய வேண்டும். அதுவும் பயனளிக்கவில்லை எனில் நல்ல முறையில் பிரிந்து விட வேண்டும்.
இருவரும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டால் இரு சாட்சிகள் முன்னிலையில் விவாக ரத்து செய்ய வேண்டும். அதன் பின்னர் ஜமாஅத்தார்கள் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு கணவனிடமிருந்து கணவனின் வசதிக்கு ஏற்ப பாதுகாப்புத் தொகை பெற்றுத்தர வேண்டும்.
குழந்தைகள் இருந்தால் அதன் பராமரிப்புச் செலவு முழுவதும் கணவனைச் சேர்ந்ததாகும். குழந்தைக்கு பாலூட்டுவதற்காகக் கூட மனைவிக்கு தக்க சன்மானம் வழங்க வேண்டும். இன்னும் பல விஷயங்கள் இதன் பின்னணியில் உள்ளன.
இது தான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டமாகும்.
இவற்றில் எதையும் கவனிக்காமல் முஸ்லிம்களிடம் கருத்தும் கேட்காமல் அவசர அவசரமாக இந்த அறிக்கையைச் சமர்ப்பித்து பாஜக தனது ஃபாஸிச சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக முஸ்லிம்களின் மத உரிமையைப் பறித்து பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவை நிறைவேற்ற பாஜக முயல்கிறது என்பது தான் உண்மை.
எனவே பாஜக தனது அத்துமீறலை நிறுத்திக் கொள்ள வேண்டும், அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளில் கைவைக்கக் கூடாது என இஸ்லாமிய சமுதாயம் எச்சரிக்கிறது.
முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தைப் பெற்று முத்தலாக் முறையை நீக்க முன்வந்தால், நபிகள் நாயகத்தின் வழிமுறைக்கு மாற்றமான இந்த முத்தலாக்கை நீக்குவதை முஸ்லிம்கள் மறுக்க மாட்டார்கள்   என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவண்,
M.முஹம்மது யூசுப்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Thursday, 6 October 2016

நாடு முழுவதும் வரும் ஜனவரி முதல் பிறப்பு, இறப்பு சான்றுகள் ஆன்லைனில் பெறலாம்: அதிகாரிகள் தகவல்.


நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உள்ளது. இதில் தினமும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்காக  அலைந்து திரிகின்றனர். இதற்கென்று விடுமுறை எடுத்து வந்து காத்துகிடக்கின்றனர். இந்த சான்றுகள் பெறுவதற்குள் மாதங்கள் ஆகிவிடுவதாக பல்வேறு புகார்கள் உள்ளது. இதில் விதிவிலக்காக சென்னையில் மட்டும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மற்ற மாநகராட்சிகளில் ஆன்லைன் மயமாக்கப்பட்டாலும் சான்றுகள் பெறுவதற்கான விண்ணப்பங்களை நேரில் சென்றுதான் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றுகள் கணினி மூலமாகவும், தட்டச்சு செய்யப்பட்டும் வழங்கப்படுகிறது. இப்படி பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்த சிக்கல்களை போக்க மத்திய அரசு சார்பில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் சென்னையில் மட்டும் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவது ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மத்திய அரசு சார்பில் நாடுமுழுவதுமாக ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்கு டெல்லியை தலைமையிடமாகக்கொண்டு ஒரே கணினி மென்பொருள் மூலம் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும். இவ்வாறு கூறினர்