Thursday, 25 February 2016

அமீரக அமைச்சரவையில் 22 வயதேயான இளம் பெண் அமைச்சர்

துபாய் பிப்ரவரி 25 (2016)

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அமீரக மந்திரி சபை கூட்டத்தில் 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதில் 22 வயதேயான Shamma Al Mazrui இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இவர் 2014 - ல் பட்ட படிப்பை NYUAD கல்லூரியில் முடித்தார். படித்து முடித்த 2 வருடத்திலேயே அமீரக மந்திரி சபையில் முக்கிய இடம் பெற்றது,மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பல்வேறு தரப்பு மக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
அபுதாபியில் பிறந்து வளர்ந்து பொது சமூக சேவையில் அக்கறையுள்ள Shamma Al Mazrui மென் மேலும் வெற்றி பெற நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, 24 February 2016

கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தி ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் : ஆய்வில் தகவல்.


லண்டன்: ஆண்களிடையே மலட்டுத்தன்மையும் அதிகரித்துவருவது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கைபேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தியானது ஆண்களின் விந்தணுக்களை பாதித்து, அவற்றை செயலிழக்க செய்துவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி புதிய வாரிசை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்களில் கைபேசிகளை வைக்காமல் இருப்பதும், பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வேளைகளில் செல்போன்களை அணைத்து வைத்திருப்பதும் பாதுகாப்பானது என இந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்யாண கனவு நிறைவேற தமிழ் மேட்ரிமோனியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்!

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:


அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
தவசிக்கீரை- இருமலை போக்கும்.
சாணக்கீரை- காயம் ஆற்றும்.
வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்

ஸ்மார்ட்போன் ஆன் ஆகவில்லையா? இதோ வழிமுறைகள்.


உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை எப்பொழுதும் ஒரு பொத்தானை அழுத்திதானே திறப்பீர்கள். அந்த பொத்தான் செயல் பட வில்லையென்றால் அதற்கு வழி இருக்கின்றது. இந்த பிரச்சனை வன்பொருள் அல்லது மென்பொருள் செயல்படாமல் போனதால் நிகழ்ந்திருக்கலாம். வன்பொருள் பிரச்சனை என்றால் தானாகவே சரியாகிவிடும். அதுவே மென்பொருள் பிரச்சனை என்றால் அதற்கு தீர்வுகள் இங்கே.
உங்கள் போன் பேட்டரி சார்ஜ் இல்லாமல் இருந்தால் 'empty battery' என்ற வாசகம் வரும். பேட்டரி சுத்தமாக தீர்ந்து போய் விட்டால் எந்த அறிவிப்பும் வராது. 10-15 நிமிடத்திற்கு உங்கள் டிவைஸை சார்ஜ் செய்தால் பிரச்சனை தீர்ந்தது. சார்ஜ் ஏறியவுடனேயே போன் ஆன் செய்து விடலாம். அதற்கு பிறகும் ஆன் ஆக வில்லையென்றால் வேறு கேபிள் அல்லது சார்ஜரை பயன்படுத்தி பார்க்கவும்.
ஆண்ட்ராய்டும் சில நேரங்களில் செயல் இழந்து போகும். உங்கள் டிவைஸ் ஸ்தம்பித்து நின்றால் இயங்குதளம் ஸ்தம்பித்து இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் 'hard reset' அல்லது power cycle செய்யலாம். இதனால் போன் இயல்பு நிலைக்கு மாறும்.
உங்கள் போனின் பேட்டரியை வெளியே எடுக்க முடியாத வடிவமைப்பாக இருந்தால், பவர் பொத்தானை நீண்ட நேரம் அழுத்த வேண்டும். இதானால் போனுக்கான பவர் துண்டிக்க பட்டு மறுபடியும் பவரை வழங்கி போனை செயல்படுத்தும்.
உங்கள் போன் திடிரென செயல் இழந்து போனால் ஃபேக்ட்ரி மோடு சென்று ஃபேக்ட்ரி ரீசெட் செய்யவும். ஆண்ட்ராய்டு மொபைலை பவர் டவுன் செய்து பல பொத்தான்களை ஒன்றாக ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். நீங்கள் அழுத்தும் போனின் பொத்தான், போனை பொருத்து வேறுபட்டிருக்கும். ஒவ்வொரு கருவிக்கு ஒவ்வொரு விதத்தில் பொத்தான் இருக்கும். சில நேரங்களில் போனின் மூன்று பொத்தான்களை சேர்ந்திருக்கும்.
கருவியின் மென்பொருள் பழுதடைந்தால் ஃபேக்ட்ரி ரீசெட் ஒத்துவராது. அப்படியென்றால் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை நிறுவ வேண்டும் என்று அர்த்தம். ஆண்ட்ராய்டின் வெர்ஷன் ஒவ்வொரு கருவிக்கும் மாறுபட்டிருக்கும். உங்கள் போன் தயாரிப்பாளர்களின் இணையதளம் சென்று firmwareஐ அதிலிருந்து மேனுவலாக நிறுவவும். அதில் இல்லை என்றால் சர்வீஸ் கடைக்கு எடுத்து சென்று நிறுவிக்கொள்ளலாம்.

நேபாளத்தில் காணாமல் போன விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிப்பு : பயணம் செய்த 23 பேர் பலி.


காத்மாண்டு : நேபாளத்தில் 23 பேருடன் சென்ற சிறிய ரக விமான விபத்துக்குள்ளானது. விமானத்தில் சென்ற 23 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  தாரா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 20 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் நேபாளத்தில் உள்ள பொஹாராவில் இருந்து ஜாம்சன் என்ற இடத்தை நோக்கி இன்று புறப்பட்டு சென்றது.
அந்த விமானம் சிறுது நேரத்திலேயே  விமான நிலையம் உடனான தொடர்பை இழந்தது. விமானம் புறப்பட்ட காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் 3 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது அந்த விமானம் வெடித்து சிதறியதாகவும், அதில் பயணம் செய்த 23 பேரும் உயிரிழந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேபாள விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tuesday, 23 February 2016

நடுவானில் பறந்த போது விமானத்தில் சிறுநீர் கழித்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்


ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த மாதம் 19-ந் தேதி இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகருக்கு சென்றது. இந்த விமானத்தில் ஜினு ஆபிரகாம் (வயது 39) என்பவர் தனது 10 வயது மகனுடன் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ஜினு ஆபிரகாம் திடீரென எழுந்து நின்று விமானத்தின் மையப்பகுதியில் சிறுநீர் கழித்தார். இதனை கண்டதும் சக பயணிகளும், விமான ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பிடித்து விசாரித்த போது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.
 இதையடுத்து விமான ஊழியர்கள் அவரது கைகளை கட்டி இருக்கையில் அமர வைத்தனர். விமானம் பிர்மிங்காமில் தரையிறங்கியதும் போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு பிர்மிங்காம் நகர கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 1,000 பவுண்டு (சுமார் ரூ.1 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

5 நிமிடத்தில்ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..


ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோ
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3,ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்

சவுதியிலிருந்து ஊருக்கு செல்லும்போது விமான நிலையங்களுக்குகுறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் செல்லவேண்டும்.:

               
    சவுதி வாழ் மக்களுக்கு ஒரு செய்தி
சவுதியிலிருந்து ஊருக்கு செல்லும்போது விமான நிலையங்களுக்குகுறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் செல்வது நல்லது.
காரணம் இப்போது போகும்போதும் நீங்கள் உங்கள் விரல் அடையாளம் Finger Print கொடுக்கவேண்டியுள்ளது பரிசோதனைக்காக. ஏற்கெனவே நமது பாசத்திற்குரிய சவுதிகள் எவ்வளவு வேகமாக வேலை செய்வார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரியும்.
   குறைந்தது 2 மணிநேரத்திற்கு முன்னதாக போர்டிங், எமிக்ரேஷன் போன்ற கவுண்டர்களின் சேவை நிறுத்தப்படுகிறதாம்.
   இதைவிட முக்கியமான விஷயம்
    எந்த நிறுவனத்தின் ஃபிளைட்டுக்கு டிக்கெட் எடுத்தாலும் டிக்கெட் எடு்க்கும் டிராவல்ஸில் உங்கள் பேக்கேஜ் எத்தனை கிலோ அணுமதி என்பதை சரியாக ஒவ்வொருமுறையும் கேட்டு தெழிவு பெற்றுக்கொள்ளுங்கள்.
   காரணம் திடீரென ஜெட் விமானம் 5 நாட்களுக்கு மட்டும் 30 Kg + 7kg என்று கழிந்த இரண்டு மாதங்களில் 3 முறை மாற்றியது.
   அன்றைய நாட்களில் நமது பல சகோதரர்கள் விஷயம் தெரியாமல் 40+ மற்றும் கையில் 7+ கொண்டுபோய் திருப்பி கொண்டுவர முடியாமல் தர்ம சங்கடத்திற்கு உள்ளானதை பார்த்தபோது மனதுக்கு வருத்தமாகவே இருந்தது…
  இந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

குவைத்தின் நேற்று நடந்த சோதனையில் 1170 பேர் கைது:

குவைத்:பிப்ரவரி 22:2016
      

   குவைத்தின் திரும்பவும் திக் திக் தினங்கள்  இன்று காலை முதல் திரும்பவும் சட்டத்தை மீறிய மற்றும் சட்பத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்களை கைது செய்யும் சோதனை Khaitan பகுதியில் இன்று அதிகாலை முதல் நடந்தது. அனைத்தும் பகுதியில் உள்ள பாதைகள் அடைக்கபட்டு தப்பிக்க முடியாத படி இந்த சோதனை நடந்தது.
     இதில் 3548 நபர்கள் பிடிபட்டனர். பின்னர் ஆவணங்கள் சரிபார்க்கபட்டு 1170 நபர்களை தவிர மறற அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இன்று இரவு மீண்டும். சோதனை
தொடங்கும்.
இனி குவைத் முழுக்க கடுமையான சோதனைகள் நடைபெற போகிறது
எனவே நண்பர்கள் எங்கு சென்றாலும் குடியுரிமை சம்மந்தப்பட்ட ஆவணங்களுடன் செல்லவும்

Monday, 22 February 2016

துபாய் ஏர்போர்டில் தவறவிட்ட நகை, பணங்களை தேடிப் பிடித்து ஒப்படைத்த முத்துப்பேட்டை வாலிபர்



முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியைச் சேர்ந்த பகுருதீன் மகன் யாசர் அரபாத்(27). இவர் துபாய் நாட்டில் பணி பரிந்து வருகிறார். விடுமுறையில் ஊர் திரும்புவதற்காக கடந்த 3-ம் தேதி துபாய் ஏர்போர்டிலிருந்து புறப்பட்ட அவர் 4-ம் தேதி அதிகாலை சென்னை வந்து சேர்ந்தார். அப்பொழுது தனது பேக்கை பரிசோதித்த போது மனிபர்சு ஒன்று இருந்தது. இதில் 2 பவுன் தங்க பிஸ்கட், 20 ஆயிரம் மதிப்புள்ள துபாய் நாட்டின் பணங்கள் மற்றும் சம்மந்தப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம் கார்டு, அவர் பணி புரிவதற்கான அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் இருந்தது.
இதனைக் கண்ட யாசர் அரபாத் அதிர்ச்சி அடைந்து உரியவரிடம் சேர்க்க முயற்சித்து வீடு திரும்பினார். பின்னர் விட்டுசென்ற தொழிலாளி பணிப்புரியும் துபாயில் உள்ள கம்பெனிக்கு அவரது நண்பர் நவாஸ்கானை அனுப்பி வைத்து  அவர் மூலம் தொடர்புக்கொண்டு விட்டு சென்றவரின் செல்நம்பர் பெற்றார். பின்னர் பொருளை விட்டு சென்றவர் ஹைதராபாத், நிஜாம்பாத் மாவட்டம், ஆர்மூர் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயராம் மகன் சதாநாந்த்(50) என்று தெரியவந்தது. பின்னர் அவரை தொடர்பு கொண்டு யாசர் அரபாத் தன்னிடம் அந்த பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார்.
மகிழ்ச்சி அடைந்த சதாநாந்த் அவரின் உறவினர் ராகேசுடன் நேற்று தஞ்சாவூர், படடுக்கோட்டை வழியாக முத்துப்பேட்டைக்கு வந்து பின்னர் யாசர் அரபாத் வீட்டிற்கு வந்தார். அவரிடம் யாசர் அரபாத் தான் கண்டெடுத்த பொருட்களை சதாநாந்திடம் வழங்கினார். அப்பொழுது அவரின் தந்தை பகுருதீன,; நண்பர்கள் ஆதம் மாலிக், புரோஸ்கான், வர்த்தகக்கழக பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். பொருட்களைப் மகிழ்ச்சியுடன் பெற்ற சதாநாந்த் கூறுகையில்: நான் 18 வருடங்களாக துபாயில் ஒரு கம்பெனியில் கார் கழுவும் கூலித்தொழில் செய்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நான் மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வருகிறேன்.
எனது பொருட்கள் காணாமல் போனதும் கவலை அடைந்தேன். இன்றைக்கு எனது உழைப்பு வீண்போகாமல் மனித நேயத்துடன் கடவுள் போன்று இந்த சகோதரர் எனக்கு மீட்டுத்தந்துள்ளார். அவரை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்றார். இந்த நிலையில் பொருட்களை விட்டு சென்றவரை மனித நேயத்துடன் மிகவும் சிரமம்பட்டு கண்டுபிடித்து அவரிடம் சேர்த்த வாலிபர் யாசர் அரபாத்தை முத்துப்பேட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.

சவுதிக்கு செல்ல இருக்கும் அனைவருக்கும் முக்கியமான செய்தி!


நீங்கள் புதியதாக விசா கிடைத்து சவுதி செல்ல உள்ளீர்ளா? உங்கள் விசா பற்றிய முழு விபரம் தெரிய வேண்டுமா? விசாவில் என்ன வேலை குறிப்பிட்டுள்ளது? யார் பெயரில் விசா வழங்கப்பட்டுள்ளது? எந்த தேதியில் விசா வழங்கப்பட்டது? முகவரி மற்றும் முதாலாளியின் பெயர் போன்றவை பற்றி அறிய வேண்டுமா? சவுதி அரசின் விசா MOFA இணையத்தளத்திற்க்குச் சென்று விசாவிற்கான விபரத்தை அறியலாம். இதற்கு முக்கியமாகMOFA(Ministry of foreign Affairs) எண் அல்லது விண்ணப்ப எண் தேவை.
கீழ் காணும் இனணய முகவரிக்குச் சென்று உங்களது விசா எண் மற்றும் ID எண் கொடுத்தால் போதும் உங்களது விசா பற்றிய முழு விபரமும் அறியலாம்.

    
உங்களது விசா விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு விசா விற்க்கான பணம் மற்றும் மெடிக்கல் பணம் கட்டிய பிறகு registered agency மூலம் இணையத்தில் இந்த MOFA எண் பதிவேற்றம் செய்யப்படும். ஆகையால் மெடிக்கல் முடிந்த பிறகே இந்தMOFA எண் கிடைக்கும். நீங்கள் அந்த விசா எண்ணையும் ID எண்ணையும் கொடுத்தப் பின்னர் கீழே உள்ள படி விசா பற்றிய விபரம் கிடைக்கும்.
மேலும் விபரம் அறிய:
சவுதி “Ministry of foreign Affairs” Call center telephone: 9200 33334 அழைக்கவும்.
Mofa office at Riyadh Telephone 00966 114055 000 or 406 7777.
Mofa office at Jeddah Telephone 00966 12 6690 900.
Mofa office at Dammam Telephne 00966 13 868 3310. 

பள்ளி மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை: மீறினால் ரூ.2100 அபராதம்!


குஜராத் மாநிலத்தில் உள்ள சுராஜ் கிராமத்தில், பள்ளி மாணவிகள் ’செல்போன்’ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி செல்போன் பயன்படுத்தினால் அவர்களுக்கு ரூ.2,100 அபராதம் விதிக்கப்பட உள்ளது.
குஜராத் மாநிலம் மெக்சானா மாவட்டம்,  காதி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமமான சுராஜில்,  மைனர் பெண்கள் செல்போன் பயன்படுத்த மற்றும் செல்போனுக்கு உரிமையாளர் ஆக தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்போனால் படிப்பில் இருந்து கவனம் திசைதிரும்பிவிடும். இந்த தடை உத்தரவை மீறி எந்த ஒரு மைனர் பெண்ணாவது செல்போன் பயன்படுத்தினாலோ, தனக்கென ஒரு செல்போன் வைத்திருந்தாலோ ரூ.2,100 அபராதம் விதிக்கப்படும் என்றும் அக்கிராம பஞ்சாயத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  மைனர் பெண்கள்,  வீட்டிற்கு உள்ளேயே பெற்றோர்களின் செல்போனில் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பஞ்சாயத்து கேட்டுக் கொண்டு உள்ளது.
இது குறித்து அந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவர் தேவ்ஷி வான்கார் கூறும்போது, ''எங்கள் பஞ்சாயத்தில் இந்த முடிவானது எந்தஒரு எதிர்ப்பும் இன்றி எடுக்கப்பட்டது.  மைனர் பெண்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு செல்போன் பெரிதும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. செல்போன்களை இளைஞர்கள் வீட்டைவிட்டு ஓடிப்போகும் ஒரு ’லவ்  டிராக்’காகவே கிராம பஞ்சாயத்து பார்க்கிறது.
18-வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கிராம மக்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர். படேல், தாகூர், தலித் என அனைவரும் தடைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். யாராவது இந்த தடை உத்தரவை மீறினால் ரூ.2,100 அபராதம் விதிக்கப்படும். தடை உத்தரவு பள்ளி மாணவிகளுக்கு மட்டுமே, கல்லூரி மாணவிகளுக்கு கிடையாது.
அவர்களுக்கு நல்லது மற்றும் கெட்டதுக்கு இடையே உள்ள வேறுபாடும் தெரியும். கல்லூரிகள் கிராமத்தில் இல்லை, நகரங்கள் அருகே உள்ளது. எனவே அவர்கள் பெற்றோர்களுடன் தொடர்பில் இருக்க செல்போன் அவசியமானது. மைனர் பெண்களை தொழில்நுட்பங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவையானது உள்ளது" என்று தெரிவித்தார்.
நன்றி:விகடன்

5G நெட்வொர்க்கை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது நோக்கியா; முதலீடுகளை அதிகரிக்கவும் திட்டம்


பார்சிலோனா, 
4G-ஐ விட பல மடங்கு அதிக வேகம் கொண்ட 5G தொழில்நுட்பத்தை 2018-க்குள் கொண்டு வர உலகம் முழுவதும் பல முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.  இதற்கு பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் வர்த்தக ரீதியாக இந்த தொழில்நுட்பத்தை வழங்க பல ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று முதல் பார்சிலோனாவில் துவங்கும் உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G தொழில்நுட்பத்தை விரைவில் கொண்டு வர முடியும் என நிரூபித்துக் காட்டவுள்ளதாக லண்டனின் சர்ரே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
நோக்கியா நெட்வோர்க்ஸ் ஏற்கனவே IoT-ready radio மற்றும் core networks தொழில்நுட்ப சேவைகளை இன்றைய கருவிகளுக்கு ஏற்றவாறு வழங்கி வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டிகளில் சிக்கலான IoT applications, செக்யூரிட்டி கணட்ரோல், மொபைல் கார்டு சொல்யூஷன்ஸ்-களை வழங்கி வருவதில் முன்னிலையில் உள்ளது. 
4G வேகத்தினை காட்டிலும் 1000 மடங்கு வேகமாக செல்லும் அலைகற்றையை உள்வாங்கும் ரேடியோ ரிசீவரை நோக்கியா நெட்வொர்க்ஸ் வடிவமைத்துள்ளது. இந்த கருவி மில்லிமீட்டர் மற்றும் சென்டிமீட்டர் அலைவரிசையை (single-digit millisecond latency) கையாளும் திறன் கொண்டது. 28 ஜிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த தொழில்நுட்பம் நொடிக்கு 1 ஜிகாபிட்ஸ் வேகத்தில் தகவல்களை கடத்தும் திறன் கொண்டது. இந்த 5G தொழில்நுட்பத்தை நேரடியாக ஆய்வாளர்கள் முன்னிலையில் ஏற்கனவே சென்ற ஆண்டில் நடந்த மாநாட்டில் செய்து காட்டியிருந்தது நோக்கியா. 
தற்போது வயர்லெஸ் நெட்வொர்க்கிங், நெட்வொர்க் பிளானிங் ஆகியவற்றில் நோக்கியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், 5G இண்டர்நெட் நெட்வொர்க் சேவையை கொண்டு வர தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பராமரிப்பு வசதிகள், மென்பொருள் சேவைகளை வழங்குவதில் இந்த ஆண்டு அதிக அளவில் முதலீடுகளை செய்ய உள்ளதாக நோக்கியாவின் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் சூரி தெரிவித்துள்ளார்.

தேமுதிக  தனது முதல் பகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது


சென்னை
   தேர்தல் அறிக்கை விவரம் வருமாறு:-விவசாயம்:
நம்மாழ்வார் விவசாய திட்டம்;
1.நாத்து நடுவதற்குரிய கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும்.
2.இயற்கை உரம் மானிய விலையில் வழங்கப்படும்.
3.மூன்று மடங்கு உற்பத்தி தரும் வித்துக்கள் தரப்படும்.
4.பிறநாட்டு விவசாய முறைகளை கற்றுக்கொள்ள வளர்ந்த நாடுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஐந்தாயிரம் விவசாயிகள் அழைத்து செல்லப்படுவார்கள். இதனால் ஐந்து வருடங்களில் 25 ஆயிரம் விவசாயிகள் பலன்பெறுவார்கள்.உணவு உற்பத்தி
5.அரசி, எண்ணெய், உணவு தானியங்கள் முதல் காய்கறி, பால் போன்ற அனைத்தும், தமிழக மக்களின் தேவையை கணக்கிட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடைவது மட்டுமல்லாமல், ஏற்றுமதி செய்து விலையை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.பால்உற்பத்தி;6.தமிழகத்தில் ஏழுகோடி மக்களுக்கு பால் தேவை. நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு நபருக்கு 150 மில்லிலிட்டர் எனக்கணக்கிட்டால்,  1.25கோடி லிட்டர் பால் தேவைப்படும். பிற தேவைக்கேற்ப அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படும். பொதுமக்கள் குறைந்தவிலையில் வாங்க விலை நிர்ணயம் செய்யப்படும்.கீழ்வெண்மணி ஓய்வூதிய திட்டம்:
நிலம் இல்லாத 60 வயது நிரம்பிய ஆண், பெண் விவசாயிகள்அனைவருக்கும் மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும். அதனால் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.சிங்காரவேலர் மீனவர் ஓய்வூதிய திட்டம்:
60 வயது நிரம்பிய ஆண், பெண் மீனவர்களுக்கு மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும். இதனால் பத்துலட்சம் மீனவர்கள் பயன்பெறுவார்கள்.
கக்கன் கைத்தறி நெசவாளர் ஓய்வூதிய திட்டம்:
 60 வயது நிரம்பிய ஆண், பெண் நெசவாளர்களுக்கு மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும். இதனால் பத்துலட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுவார்கள்.அப்துல்கலாம் கிராம பொலிவுத் திட்டம்;
தமிழகத்திலுள்ள 12,620 கிராமங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கிராமத்தில் வசிக்கும் தனி நபரின் குடும்ப வருமானம் குறைந்தது மாதம் ரூபாய் 25 ஆயிரம் என்ற அளவிற்கு வழிவகை செய்யப்படும். 
விவசாயம், ஆடு, மாடு, மீன், கோழி, பட்டுப்பூச்சி, தேனீமற்றும் பழமரம் வளர்த்தல் ஊக்குவிக்கப்படும். கைத்தொழில் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை அரசே கொள்முதல் செய்துகொள்ளும். பழங்கள் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும். குடிசைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு கல்வீடுகள் கட்டித்தரப்படும்.கல்விசிறப்பு குழந்தைகள்:
இவர்கள் தங்கிப்படிக்க பிரத்தியேக வசதியுடன் தனிப்பள்ளிக்கூடம், கல்லூரிகள் உருவாக்கப்படும்.
மூன்றாம் பாலினம்:
இவர்கள் தங்கிப்படிக்க அனைத்து வசதியுடன் தனிப்பள்ளிக்கூடம், கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.பள்ளி கல்லூரியில் பாடப்புத்தகம்:
மாணவர்களிடம் நாட்டுப்பற்றும் மற்றும் மொழிபற்றும் வளரவேண்டும். அதற்காக உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் எண்சரிதம், காந்திஜியின் சத்தியசோதனை, மதன் அவர்களின் வந்தார்கள், வென்றார்கள், ம.பொ.சி அவர்களின் விடுதலைப்போரில் தமிழகம், எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் எனது இந்தியா போன்ற நூல்கள், பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.மாணவர்களுடன் கலந்துரையாடல்:
கவிஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஓவியர்கள்,சமூகத்தில் பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் என, அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களின் அறிவு வளர்ச்சி, உலக நடப்பு, ரசனை மேம்பாடு என பாடத்திட்டம் தவிர்த்து, பிற உலக விஷயங்களை கலந்துரையாடல் பாணியில் நடத்துவார்கள்.
மனிதவள ஆலோசகர்:
பள்ளிகளில் மனித வள ஆலோசகர் நியமிக்கப்படுவார். அவர்கள் மாணவர்களின் கற்கும் திறன்,அவர்களின் தனித்திறமை, குடும்ப சூழ்நிலை, பள்ளியில் கற்கும் சூழ்நிலை என அனைத்து விஷயங்களிலும் தனிகவனம் செலுத்துவார். அவர் ஒவ்வொரு மாணவருக்கும் தனிக்கோப்பு உருவாக்கி அரசுக்கு அனுப்புவார்.காலை பசியாற உணவு வழங்கும் திட்டம்:
குடும்ப சூழ்நிலையின் காரணமாக காலை உணவு கிடைக்காமல் பள்ளிக்கூடத்திற்கு வருவதால், அவர்கள் பசியாற எளிமையான உணவு வழங்கப்படும். பால், முட்டை, சுண்டல், சத்துமாவு கஞ்சி என விதவிதமாக எளிமையான உணவு வழங்கப்படும். 
பள்ளி, கல்லூரி மாணவர்கள்மாவட்டம், மாநிலம் வெளிநாடு செல்லும் பயணத்திட்டம்:
பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளமையிலேயே கிணற்று தவளையாக இல்லாமல், கல்வியில் பல விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த பயணம் உதவும்.மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கும், மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திற்கும், பிற நாடுகளுக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சலுகை கட்டணத்தில் அழைத்து செல்லப்படுவார்கள். 1000பெண்கள் பள்ளிக்கூடங்கள்
மாலை நேர மகளிர் கல்லூரிகளாக மாற்றப்படும்;
மாநிலத்தில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடங்கள் மகளிர் கல்லூரிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் ஒரு லட்சம் மகளிர்க்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். மேலும் ஆண்டுக்கு 10 லட்சம் பெண்கள் பட்டதாரிகளாக உருவாக்க வழிவகை செய்யப்படும்.சுகாதாரம்:தரமான மருத்துவமனைகள்:
தமிழகத்தில் அனைத்து தாலுக்காவிலும் அதிநவீன வசதியில் 24 மணிநேரமும்மருத்துவ சேவை வழங்க, மருத்துவமனைகள் புதியதாக கட்டப்படும். குறைந்த விலையில் தரமான மருத்துவ வசதி வழங்கப்படும். இதன் மூலம் 1 லட்சம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.வேலைவாய்ப்பு:சமூக வளர்ச்சி மேம்பாடு:
தமிழகத்தில் அனைத்து தாலுக்காவிலும் வணிகவளாகம் தனியாருடன் இணைந்து உருவாக்கப்படும். அதில் 200 முதல் 500 கடைகள் வரை அமைக்கப்படும். அதை வாடகை அல்லது சொந்தமாகவும் வாங்கிகொள்ளலாம். ஒவ்வொரு வளாகத்திலும் மூன்று முதல் ஐந்து திரையரங்குகள் நிறுவப்படும். இதன்மூலம் 2 லட்சம் பேர் பலன் பெறுவார்கள்.சுற்றுலா விடுதிகள்:
தமிழகத்தின் அனைத்து சுற்றுலா தளங்களிலும் நிறைவான வசதிகளுடன் தங்கும் விடுதிகள் கட்டப்படும். எல்லாத் தரப்பினரும் பயன்படுத்து வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 10லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.தனியாருடன் இணைந்து நடத்தப்படும் நிறுவனங்கள்:
கூரியர் சேவை, கிராம மக்கள் தயாரிக்கும் பொருட்கள், எண்ணெய் உற்பத்தி நிறுவனம், பெண்களுக்கான சுகாதார பொருட்கள் தயாரித்தல், சிறு தின்பண்டங்கள் தயாரித்தல், பிஸ்கட், ரொட்டி தயாரித்தல், கால்நடை தீவனங்கள், செங்கல் தயாரிப்பு, இரும்பு கம்பிகள் தயாரிப்பு, சிமெண்ட், மென்பொருள் தயாரிப்பு இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். தனியாரின் நிர்வாகம் இருந்தாலும்,இறுதியாக அரசுதான் விலையை நிர்ணயம் செய்யும்.அதன் மூலம் குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும். தமிழகமெங்கும் உள்ள ஜவுளி கடைகளுக்கு கைத்தறி பொருட்கள் விநியோகம் செய்யப்படும். உதாரணமாக நல்லி, போத்தீஸ் போன்ற ஜவுளி கடைகளுக்கு பிற மாநிலங்களில், பிற நாடுகளில் விற்பனை செய்யும் உரிமம் வழங்ககப்படும்.சமூக பாதுகாப்பு திட்டம்:அனைவருக்கும் வீடு:
அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான குடியிருப்புகள், குறைந்த முன்பணம், குறைந்த வட்டி, எளிய தவணை முறையில், எல்&டி. போன்ற கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து, ஆதிதிராவிடர், மலைவாழ் மக்களுக்கு தரமான குடியிருப்புகள், சலுகை விலையில் கட்டித்தரப்படும். ஒரு சதுரஅடி 2 ஆயிரம் ரூபாய் முதல் அதிக பட்சமாக 5 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் வகையில் குடியிருப்பிகள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்கள்:ழகத்தில் உள்ள மணல், தாதுமணல், கிராணைட் போன்ற அனைத்து இயற்கை கனிம வளங்களும் தேசிய மயமாக்கப்படும். அதன்மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். எரிசக்தி:பெட்ரோல் - டீசல்:
தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய்45க்கும்,டீசல்ஒரு லிட்டர் ரூபாய் 35க்கும்விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்யப்படும். சுங்கவரி:
தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரிகள் இனிமேல் பாதியாக குறைக்கப்படும். தேவைப்படுமெனில் தமிழக அரசு அந்த நிறுவனத்தை தேசிய மயமாக்கும்.தமிழகத்தில் உள்ள ஆறுகள்:
தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைப்பதன் மூலம் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
அடித்தட்டு மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லம்தேடி கொடுத்தல்:
தமிழக மக்கள் ரேஷன் கடைகளில் கால்கடுக்க நிற்கும் காலம் இனி மலையேறிவிடும். அவர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் அவர்களின் இல்லத்திற்கே கொண்டுவந்து சேர்க்கப்படும். இதற்காக அவர்களிடம் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.
என கூறப்பட்டு உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை, டோக்கன் 42 இடங்களில் கிடைக்கும் மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு


சென்னை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை மற்றும் டோக்கன் 42 இடங்களில் வழங்கப்படுகிறது என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த, மூத்த குடிமக்கள், சென்னை மாநகர பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் வரும் 24–ந்தேதி (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயணம் செய்ய மாநகரப் போக்குவரத்துக் கழக வலைதள முகவரியில் (www.mtcbus.org) விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையங்கள் மற்றும் பணிபனைகளில் இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள் உள்பட 42 இடங்களில் விண்ணப்பதாரர்கள் நேரில் சென்று அளித்து கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் மாதம் ஒன்றுக்கு தலா 10 டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டம் முதல்–அமைச்சரால் கடந்த 20–ந்தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது.கட்டணமில்லா டோக்கன்
பஸ்சில் பயணம் செய்யும் போது புகைப்படத்துடன் கூடிய அசல் பயண அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பித்து அசல் கட்டணமில்லா பயண டோக்கனை பேருந்து நடத்துனரிடம் அளித்து அதற்குரிய கட்டணமில்லா பயணச்சீட்டு பெற்றுக் கொண்டு பயணம் செய்ய வேண்டும். பரிசோதகர்கள் பரிசோதனையின் போது பயண அடையாள அட்டை மற்றும் கட்டணமில்லா பயணச்சீட்டு ஆகியவற்றை கேட்கும் போது காண்பிக்க வேண்டும்.கட்டணமில்லா டோக்கன்களில் அச்சடித்துள்ள மாதத்திற்கு மட்டுமே அந்தந்த டோக்கன்கள் செல்லுபடியாகும். குறிப்பிட்ட மாதம் கடந்துவிட்டால் அந்த டோக்கன்கள் காலாவதியானதாக கருதப்படும்.சான்றிதழ் நகல்
கட்டணமில்லா பயண அட்டை மற்றும் டோக்கன்கள் குறிப்பிட்ட பஸ் நிலையங்கள் மற்றும் மாநகர பேருந்து பணிமனைகள் உள்பட 42 இடங்களில் அனைத்து நாட்களிலும் காலை 8½ மணி முதல் மதியம் 1½ விரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் விண்ணப்பதாரர்களுக்கு நேரில் வழங்கப்படும்.விண்ணப்பம் அளிக்கும் போது வயது மற்றும் இருப்பிட சான்றுக்காக ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் அல்லது ரேஷன் கார்டு அல்லது பள்ளி சான்றிதழ் இதுபோன்ற சான்றின் நகலை இணைக்கப்பட வேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படங்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பஸ் வசதியை சென்னை மாநகர் பேருந்துகளில், இரவு நேரப்பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளிலும் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) பயணம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

வளைகுடா வாழ் இந்தியர்களின் குறைகளை முறையிட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புதிய இணையத்தளம்!


வளைகுடாவாழ் இந்தியர்களின் குறைகளை முறையிட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய இணையத்தளம் ஒன்றை நிறுவியுள்ளது,
இதில் வளைகுடாவாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் இழப்பீடு நீதிமன்ற பிரச்னைகள் வீட்டுவேலையாட்கள் எதிர்கொள்ளும் பிரச்னை வெளிநாட்டில் சிறைபடுதல் திருமண முறிவு
இறந்தவர்களின் உடல் குடியரசு வெளியேற்றம் சம்பளம் மற்றும் இதர பாக்கிகள்
காணாமல்போனவர்கள் மற்றும் இன்னபிற பிரச்னைகள் குறித்து முறையிட்டால் அதனை உயரதிகாரிகள் பார்வைக்கு கொண்டுசென்று தீர்த்துவைப்பதற்குண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான இணையதளம்.
http://madad.gov.in/
குறைகளை பதிவுசெய்ய கொடுக்கப்பட்டுள்ள சுட்டி
https://org1.passportindia.gov.in/AppConsularPr…/welcomeLink
Ministry of External Affairs launched an e-portal to address complaints prompty with a high degree of ” accoutability” which supports Indian citizens living in GCC nations – Saudi Arabia, Oman, Bahrain, Kuwait, Qatar, and the UAE.
website address:
http://madad.gov.in/

வளைகுடாவில் வசிக்கும் சகோதர்களே உங்கள் ரூமில் மூட்டைப் பூச்சி தொல்லையா? கவலையை விடுங்கள்! அழிக்க இதோ வழி! வீடியோ இணைப்பு


வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அவர்களுடைய நண்பர்கள் தாங்கும் இடத்திற்கு செல்லும் போது மூட்டைப் பூச்சி இருக்கா என்று கேட்டுக் கொண்டு தான் நண்பர்கள் ரூமின் இருக்கையில் உட்காரும் அளவுக்கு ஆகிப் போனது.
துபாய் ,வளைகுடா, மற்றும் இதர வெளிநாடுகளில் வாழும் பேச்சிலர்ஸ் முதல் ஃபேமிலி மெம்பர்ஸ் வரை மூட்டைப் பூச்சி தொல்லையினை அனுபவித்திருப்பார்கள். அவர்களுக்கு இந்த வீடியோ.

Sunday, 21 February 2016

உலகில் ஒரே தீவிரவாத நாடு இஸ்ரேல் : யூத மதத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் அலோனி ஆவேசம்…..!!


இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீவிரவாதத்தோடு தொடர்புப்படுத்தி உலகளாவிய ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேலை சார்ந்த பிரபல தயாரிப்பாளர் அலோனி இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கனை முன்வைத்துள்ளார். 
ஜெர்மனியில் நடைபெற்ற சினிமா தொடர்பான நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அவர் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை பற்றி பேசி வருகின்றனர். உலகில் ஒரே ஒரு தீவரவாத நாடு என்றால் அது இஸ்ரேல் மட்டுமே என கடுமையாக விமர்சித்துள்ளார். 
இஸ்ரேல் தீவிரவாதத்தை வளர்க்கும் நாடு என்பதை உலகம் அறிந்திருந்தாலும் அந்த உண்மையை இஸ்ரேலை சேர்ந்த ஒரு பிரபல யூதரே அம்பலப்படுத்தி இருப்பது இஸ்ரேலை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார்.

பா.ஜா.க அரசு என்னை தீவிரவாதியாக்க பார்கிறது நான் தீவிரவாதி அல்ல : ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்


புதுடெல்லி, ’நான் தீவிரவாதி கிடையாது,’ என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் கூறிஉள்ளார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9–ந் தேதி, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பியதில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவரான உமர் காலித். ’நான் தீவிரவாதி கிடையாது, வளாகத்தை குறிவைப்பதை பாரதீய ஜனதா அரசு தவிர்ப்பது அவசியமாகிறது,” என்று கூறிஉள்ளார். பல்கலைக்கழக மாணவர் இயக்க தலைவர் கான்யா குமாரை தேசவிரோத வழக்கில் போலீஸ் கைது செய்ததும் கடந்த 12-ம் தேதி தலைமறைவு ஆன உமர் காலித்,  ‘என்னுடைய பெயர் உமர் காலித், நான் தீவிரவாதி கிடையாது.’ என்று கூறிஉள்ளார்.
ஊடக விசாரணைகள் தன்னை தீவிரவாதியாக முத்திரை குத்துகிறது என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பல்கலைக்கழக மாணவர் இயக்க தலைவர் கான்யா குமாரை போலீஸ் கைது செய்ததும் கடந்த 12-ம் தேதி தலைமறைவு ஆன மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா, ராம நாகா, அசுதோஷ் குமார் மற்றும் ஆனந்த் பிரகாஷ் ஆகியோர் பல்கலைக்கழகத்திற்கு திரும்பிஉள்ளனர். இதற்கிடையே அவர்களை கைதுசெய்ய பல்கலைக்கழகத்திற்கு வெளியே போலீஸ் நிற்கிறது. போலீஸ் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை.
மாணவர்கள் இன்று கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் தெற்கு கரோலினாவில் டிரம்ப், நெவாடாவில் ஹிலாரி வெற்றி ஜெப் புஷ் விலகல்..


வாஷிங்டன்அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல்வேறு மாகாணங்களில் நடந்து வருகிறது.தெற்கு கரோலினா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு நடந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
நியூஹாம்சயர் மாகாணத்தை தொடர்ந்து தெற்கு கரோலினா மாகாணத்திலும் வெற்றி பெற்றிருப்பது, டிரம்பிற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.நெவாடா மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு நடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார்.
தனது எதிரியான பெர்னி சாண்டர்சை அவர் வீழ்த்தினார். நியூஹாம்சயர் மாகாணத்தில் தன்னை வீழ்த்திய சாண்டர்சை அவர் பழி தீர்த்துக்கொண்டார். ஹிலாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாண்டர்ஸ் பாராட்டு தெரிவித்தார்.தெற்கு கரோலினாவில் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சின் சகோதரர் ஜெப் புஷ் 4–வது இடத்தையே பிடித்தார்.
இதனால் விரக்தி அடைந்த அவர் போட்டியில் இருந்து விலகினார். இது தொடர்பாக அவர் பேட்டி அளித்தபோது, ‘‘ஜனாதிபதி பதவி எந்த ஒரு தனிநபரைவிடவும் மேலானது. தன்னை ஒரு எஜமானாக கருதாமல், ஊழியராக கருதுகிற ஒருவர் மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்’’ என கூறினார்.