Saturday, 5 March 2016

வங்கி அதிகாரி போல நடித்து பாலிடெக்னிக் முதல்வரிடம் ரூ. 25 ஆயிரம் மோசடி.


மதுரை அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரிடம் வங்கி அதிகாரி போல பேசி, ஏடிஎம் ரகசிய எண்ணைப் பெற்று ரூ. 25 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை சிலைமான் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் வைரமணிகண்டன் (36). இவர் மதுரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், அரசு வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி, இவரது செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர், இவர் கணக்கு வைத்துள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளார்.
அப்போது, வைரமணிகண்டனின், ஏடிஎம் அட்டையை 2040-ஆம் ஆண்டு வரை கால நீட்டிப்பு செய்யவுள்ளதாகக் கூறி, ரகசிய குறியீட்டு எண்ணைக் கேட்டார். இதை நம்பி வைரமணிகண்டன், குறியீட்டு எண்ணைத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சில நிமிஷங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து வைரமணிகண்டன் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் 1.7 பில்லியன் சவுதி ரியால் மோசடி: வெளிநாட்டவர் கைது.!


தங்க அகல்வில் ஈடுபடப் போவதாகத் தெரிலித்து சவுதிப் நாட்டவர் பலரை ஏமாற்றி 1.7 பில்லியன் சவுதி ரியால்கள் வசூலித்த வெளிநாட்டுப் வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபிரிக்காவைச் சேர்ந்த 59 வயதுடைய குறித்த நபர், மதீனா, ஜித்தா, அம்லஜ் மற்றும் யன்பு போன்ற பகுதிகளிலேயே பலரை ஏமாற்றியுள்ளதாகவும் கண்கட்டு வித்தைகளைப் புரிந்து பலரை நம்பவைத்துள்ளதாகவும் போலிசார்
தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

“அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..”!


“அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..” என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கச்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்:
இதில் இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்துக் காட்டியுள்ளார் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள்.


அனைத்து சமூகத்தாருக்கும் சரி 
சரிசமமாக உரிமை மற்றும் மதிப்பளிபதால் மட்டுமே இந்தியா வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும் என்பதை நரேந்திர மோடியை ஆரவாரமாய் வரவேற்று ஆதரிக்கும் மக்கள் முதலில் உணர வேண்டும்.
அடக்குமுறைகளுக்கும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகளுக்கும் உள்ளாகி மிகுந்த மன நோவினைகளுக்கு உள்ளான பெருவாரியான இந்திய மக்களுக்கு விடிவெள்ளியாகவும் தற்கால மோசேயாகவும் காட்சி அளிக்கிறவர் நரேந்திர மோடி. அடுத்த பிரதமராவதற்குரிய அனைத்து தகுதிகளையும் இவர் கொண்டுள்ளார் என்பதை போன்ற ஒரு தோற்றத்தில் இன்றைக்கு மோடியை இந்திய மக்களில் ஒரு பெரும்பான்மையான கூட்டம் சித்தரிகின்றது.
இதனை ஏதோ கும்ப மேளாவின் போது வெறும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மாத்திரம் கூறவில்லை , இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பகுதியான “கல்வி அறிவு பெற்றவர்கள் (?)” என்ற பெயரால் அழைக்கபடுபவர்களும் , “கல்வி அறிவு (?)” உள்ள இளைஞர்களும் கூட நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரத்தில் திசை திருப்ப பட்டு இவ்வாறு கூறுகின்றனர்.
ஒரு சில தினங்களுக்கு முன்பு நான் டில்லியில் இருந்து போபாளிற்கு விமானம் மூலம் பயணித்தேன் . எனக்கு அருகில் அமர்ந்திருதவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர். நான் அவரிடத்தில் மோடி அவர்களை குறித்து கருத்து கேட்டேன் . மோடியை பற்றி புகழ்ந்து தள்ளினார். அவர் பேச்சின் இடையில் நான் குறுக்கிட்டு ,சில கேள்விகளை முன் வைத்தேன் . நான் அவரிடத்தில் 2002 குஜராத் மாநிலத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை பற்றி கேட்டேன் . முஸ்லிம்கள் எப்போதும் குஜராத் மாநிலத்தில் பிரச்சனையை உருவாக்கி கொண்டே இருந்தனர் , ஆனால் 2002 ஆம் ஆண்டிற்கு பின்னர் முஸ்லிம்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க பட்டுள்ளனர் , இதற்க்கு பின்னரே குஜராத் மாநிலத்தில் அமைதியான சூழல் குடிகொண்டது என்று பதில் அளித்தார். அது மயானத்தில் நிலவும் அமைதிக்கு ஒப்பானது. அமைதியுடன் நீதியும் ஒன்று சேராத வரை , என்றைக்கும் அமைதி மாத்திரம் தனித்து நீடித்து நிலைத்துவிட முடியாது .இதை நான் கூறிமுடித்தது தான் தாமதம் , அவர் என்னிடத்தில் கோபித்தவராக என்னிடமிருந்து விலகி சென்று மற்ற்றொரு இருக்கையில் அமர்ந்துவிட்டார்.
ஆனால் இன்றைக்கு உண்மை நிலவரம் என்னவென்றால், 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் அரங்கேறிய கொடூர சம்பவத்திற்கு எதிராக குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் எதிர்த்து குரல் கொடுக்கவே அஞ்சுவதற்கு காரணம் அவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகிவிடலாம் , தாக்கபட்டுவிடலாம், என்கின்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதால் தான்.
இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் (200 மில்லியனுக்கும் அதிகமான சமுதாயம் ) மோடீ அவர்களை கடுமையாக எதிர்பவர்களே ( ஆனால் மிக சொற்ப அளவிற்க்கான முஸ்லிம்கள் மாத்திரம் ஏதோ காரணத்திற்க்காக இதை ஏற்பதில்லை )
சந்தேகம் கொள்ளத்தக்க ஏதேச்சையான செயல்கள் :
குஜாரத்தில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற அந்த கொடூர சம்பவம் , முன்னர் கோத்ரா ரயில் சம்பவத்தில் 59 இந்துக்கள் கொல்லப்பட்டதற்கான “ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத ” (ப்ராதிக்ரியா ) ஒரு பதிலடியே என்று மோடியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதை நானாக கற்பனை செய்து கூறவில்லை : முதலாவதாக கோத்ரா சம்பவத்தில் உண்மையில் நடைபெற்றது என்ன என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது . இரண்டாவதாக , யார் அந்த கோத்ரா சம்பவத்திற்கு காரணமோ அந்த குறிப்பிட்ட மனிதர்களை அடையாளம் கண்டு ,மிக கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் , ஆனால் இதற்காக எப்படி குஜராத்தில் வாழும் முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீது அரங்கேறிய அந்த கொடூர தாக்குதலை நியாய படுத்தமுடியும் ? .
குஜராத் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் வெறும் 9 சதவிகிதம் தான் , மீதம் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே . 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் சாரைசாரையாக படுகொலை செய்யப்பட்டனர் , வீடுகள் எரிக்கப்பட்டன , இன்னும் பல்வேறு விதமான கொடூர சம்பவங்களுக்கும் முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டனர்.
2002-ஆம் ஆண் டில் முஸ்லிம்கள் இன படுகொலையை செய்யப்பட்டதை ” ஏதேச்சையான- முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத (ப்ராதிக்ரியா ) ” ஒரு பதிலடியே என்று இவர்கள் கூறுவது எனக்கு ஜெர்மனி நாட்டில் நவம்பர் மாதம் 1938 ஆம் அண்டு நடந்த “கிரிஸ்டல்நாக்ட்” சம்பவத்தை நினைவூட்டுகிறது . ஜெர்மனி நாட்டு விரகர் ஒருவரை யூத இளைஞன் , நாஜிக்களால் தனது குடும்பத்தை சித்ரவதை செய்பட்ட காரனத்தால் சுட்டு கொன்றுவிடுகிறான்.இதற்காக ஜெர்மனியில் இருந்த முழு யூத சமூகத்தையும் நாஜிக்கள் தாக்கினர் , படுகொலை செய்தனர் , அவர்களின் தேவாலயங்களை எரித்தனர் , கடைகளை சூறையாடினர் . ஜேர்மானிய நாஜி அரசாங்கம் இதை குறித்து ” ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்டபடாத” சம்பவம் என்றே கூறியது , ஆனால் உண்மையில் இது முன்னரே திட்டம் தீட்டபட்டு , மூர்க்கமான ஒரு கும்பலை பயன்படுத்தி நாஜி அதிகாரிகளால் அரங்கேற்றபட்டதாகும்.
வரலாற்று சான்றுகளின் படி , இந்திய நாடு ,வெளிநாடுகளிலிருந்து குடியேறிவர்களுக்கு தஞ்சம் கொடுத்த ஒரு நாடாகும் , இதன் விளைவாக நம் நாடு பலதர பட்ட மனிதர்களையும் பெற்றது .எனவே அனைத்து வகை மனிதர்களையும் ஒன்றிணைக்கும் விதமாக மதச்சார்பின்மை கொள்கை உள்ளது – அதாவது அனைத்து சமூகங்களுக்கும் சரிசமமான உரிமையையும் , மரியாதையையும் வழங்குதல் என்ற கொள்கை.இந்த கொள்கையை கொண்டவர் தான் மன்னர் அக்பர் , இதை நம் மூதாதையர்களும் (பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரின் சகாக்கள் ) பின்பற்றி இந்த செக்யுலரிச (மதச்சார்பின்மை) கொள்கையின் அடிப்படையில் அரசியல் சாசனத்தை வகுத்து தந்தனர்.இதை நாம் பின்பற்றாத வரையில் நம் நாடு ஒரு நாள் கூட அமைதியாக இருக்க முடியாது ஏனெனில் நம் நாடு பலதரப்பட்ட மதங்கள் , ஜாதிகள், மொழிகள், இன குழுக்கள் என பல வேற்றுமைகளை கொண்டுள்ள ஒரு நாடு.ஆகவே இந்தியா இந்துக்களுக்கு மாத்திரம் உரித்தான ஒரு நாடு இல்லை. 
இந்நாடு முஸ்லிம்கள் , சீக்கியர்கள் , கிறித்தவர்கள் , பார்சிகள் , ஜைனர்கள் என மற்றுமுள்ள அனைத்து மக்களுக்கும் சரிசமமான அளவில் , சொந்தமான ஒரு நாடு .இங்கு இந்துக்கள் தான் முதல் தர குடிமக்களாக வாழ முடியும் , மற்றவர்கள் அனைவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர குடிமக்களாக தான் வாழ முடியும் என இல்லை .அனைவரும் முதல் தர குடிமக்களே !.குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அந்த கொடூர தாக்குதல்களும் , ஆயிரதிருக்கும் மேலான முஸ்லிம்களை கொன்று குவித்ததையும் எப்போதும் மறக்கவோ , மன்னிக்கவோ முடியாது . இதில் மோடி அவர்களுக்குள்ள தொடர்பை அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்களை வைத்து கழுவினாலும், கரையை கழுவவோ/நீக்கவோ முடியாது .
திரு மோடி அவர்களுக்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையென்றும் இது வரை அவரை எந்த நீதிமன்றமும் ஒரு குற்றவாளி என அறிவித்ததில்லை எனவும் மோடியின் ஆதரவாளர்கள் கூறிவருங்கின்றனர். இங்கு நான் இந்திய நீதி துறையை பற்றி கருத்து கூறவிரும்பவில்லை. ஆனால் மோடி அவர்களுக்கு இந்த படுகொலை சம்பவங்களில் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது . குஜாரத்தில் மிக பெரிய அளவில் ,அந்த கொடூர சம்பவங்கள் நடைபெற்ற போது முதலமைச்சராக இருந்தவர் மோடி .இதில் மோடி அவரகளுக்கு எந்த பங்கும் இருக்கவில்லை என கூறுவதை யார்தான் நம்ப முடியும் ?
என்னை பொறுத்த மட்டில் என்னால் நிச்சயமாக இதை நம்ப முடியாது.
இதற்க்கு ஒரு எடுத்துகாட்டை கூறுகிறேன் : எஹ்சான் ஜாப்ரி என்பவர் அதிகம் மதிக்கப்பட கூடியவர் , ஒரு வயது முதிர்ந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர். இவர் குஜராத்தில் உள்ள அஹ்மதாபாத்தின் சமன்பூரா என்னும் இடத்தில வசித்து வந்தவர் . இவர் வீடு முஸ்லிம்கள் அதிகம் வாழ கூடிய குல்பர்கா வீடுகள் சமூகத்தில் இருந்தது . எஹ்சான் ஜாப்ரிக்கு நடந்த சம்பவத்தை நேரில் கண்ட இவரின் வயது முதிர்ந்த மனைவி சக்கியா ஜஃப்ரி தெரிவித்தவை இன்றைக்கும் பதிவில் உள்ளது .பிப்ரவரி 28,ம் தேதி 2002 ஆம் ஆண்டில் , வெறிபிடித்த ஒரு கும்பல் இவர் வீட்டின் பாதுகாப்பு வலயத்தை கேஸ் சிலிண்டிரை வைத்து தகர்த்தெறிந்தன. உள்ளே நுழைந்து , அங்கிருந்த எஹ்சான் ஜாப்ரி அவர்களை தர தரவென வீட்டின் வெளியே இழுத்து , கை ,கால்களை வாழால் வெட்டினர், அதற்க்கு பின் இவரை உயிருடன் எரித்தே விட்டனர் 
இதே போல் பல முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர் ,அதிகமான முஸ்லிம்களின் வீடுகளை எரித்து நாசமாக்கினர்.இத்தனைக்கும் ,சமன்புரா என்னும் இடத்திலிரிந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு காவல் நிலையம் , 2 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் அஹ்மதாபாத்தின் போலிஸ் கமிஷனர் அலுவலகம். 
முதலமைச்சருக்கு இங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்றே தெரியவில்லை என்று கூறினால் அதை எப்படி நம்புவது ?. சம்பவம் நடைபெற்ற அன்றைய தினத்திலிருந்து சக்கியா ஜஃப்ரி தனது கணவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு எதிராக நீதி கிடைக்க போராடி வருகிறார் . சக்கியா ஜஃப்ரி அவர்கள் பதிவு செய்த மோடிக்கு எதிரான கிரிமினல் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளவும் மறுத்து விட்டது மாவட்ட நீதிமன்றம் .(இதற்க்கு காரணம் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது தான் )
10 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்கு பிறகு இப்போது தான் இந்த வழக்கை உச்சநீதி மன்றம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ஒதுக்கி , சக்கியா ஜஃப்ரியின் எதிர்ப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ளலாம் என கூறியுள்ளது .
இவ்வழக்கு தீர்ப்பு வழங்கபடாமல் இன்னமும் நிலுவையில் உள்ளதால் இவ்விஷயத்தை பற்றி இதற்க்கு மேல் நான் அதிகம் கூற விரும்பவில்லை.
மோடி அவர்கள் குஜராத்தை பெரிதும் முன்னேற்றி விட்டதாக கூறிகொள்கிறார் . ஆகவே ” முன்னேற்றம் ” என்றால் என்ன என்பதை சரி பார்ப்பது அவசியம்.என்னை பொறுத்தவரை “முன்னேற்றம் ” என்பதற்கு ஒரு பொருள் தான் இருக்கமுடியும் , அது ‘ பொது மக்களின் வாழ்க்கை தரம் உயர்வது ‘ என்பது தான். பொது மக்களின் வாழ்க்கை தரம் எந்த விதத்திலும் உயர்த்த படாமலிருக்கும் நிலையில், பெரிய தொழில்துறை முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்கி, அவர்களுக்கு மலிவான விலையில் நிலத்தையும் மின்சாரத்தையும் வழங்குதையெல்லாம் , முன்னேற்றம் ” என்று கூற முடியாது .
கேள்விக்கிடமான முன்னேற்றம்:
இன்றைய நிலவரப்படி , குஜராத்தில் 48 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் , இந்த எண்ணிக்கை ,நம் நாட்டின் சராசரி ஊட்டச்சத்து குறைவு விழுக்காட்டை காட்டிலும் அதிக விகிதமாகும் .மேலும் குஜராத் மாநிலத்தில் மழலை இறப்பு விகிதமும் அதிகம், பிரசவ பெண்களின் இறப்பு விகிதமும் அதிகம் , பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களில் ,வறுமை கோட்டில் உள்ளவர்கள் ,57 சதவிகிதம்.
திரு ராமச்சந்திரன் குஹா அவர்களின் “தி ஹிந்து ” பத்திரிக்கையில் (இந்தியாவை ஆட்சி செய்யவிருக்கும் மனிதர் , பிப்ரவரி 8 – என்ற தலைப்பில் ) வெளியிடப்பட்ட கட்டுரையில் குஜராத்தில் சுற்றுப்புற சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது , கல்வி தரம் வீழ்ந்து வருகிறது , ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விழுக்காடு மிகவும் அதிகரித்து கொண்டே உள்ளது .குஜராத்தில் உள்ள மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமான ஆண்களின் எடை உயர விகித குறியீடு 18.5 க்கும் விட குறைவு -( நம் நாட்டின் 7 வது மிக மோசமான மாநிலம் ) என தெளிவாக கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டின் யு.என்.டீ.பீ யின் (UNDP) அறிக்கை குஜராத்தை ஒவ்வரு மாநிலத்தின் பல பரிமாண வளர்சிகளான: சுகாதாரம், கல்வி, வருமான அளவு போன்றவற்றின் பட்டியலில் 8 வது மாநிலமாக குஜராத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.
பெரிய முதலீட்டாளர்கள் , தொழிலதிபர்கள் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் தொழில் செய்ய ஏதுவாக அனைத்து சூழல்களையும் உருவாக்கிதருபவர் என கூறிவருகின்றனர் , ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால் , இந்தியாவில் தொழிலதிபர்கள் மாத்திரம் தான் மக்கள் என்பவர்களா ?
உண்மையிலேயே நாட்டு வளர்ச்சியை பற்றி கவலை கொள்பவர்களாக இருப்பின் , நான் இங்கு கூறிய அனைத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு இந்திய நாட்டு மக்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
அல்லது நம் நாட்டு மக்களும் ஜெர்மனி மக்கள் 1933 ஆம் ஆண்டில் இழைத்த தவறை போல தவறு செய்தவர்களாக ஆகிவிடுவர் .
நன்றி : “தி ஹிந்து” நாளிதழ்
BY முக நூல் மீடியா

ஐ.நா. பொருளாதாரத் தடைக்குப் பதிலடி தயார் நிலையில் அணு ஆயுதங்கள்: வட கொரிய அதிபர் உத்தரவு.


வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் இதுவரை இல்லாத அளவு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததற்குப் பதிலடியாக, தங்களிடமுள்ள அணு ஆயுதங்களைத் தயார் நிலையில் வைக்குமாறு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் உத்தரவிட்டுள்ளார்.
 இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
 கிழக்குக் கடல் பகுதியில் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை ஏவியை வட கொரியா வியாழக்கிழமை பரிசோதித்தது.
 அதிபர் கிம் ஜோங்-உன் அந்தப் பரிசோதனையை நேரில் பார்வையிட்டார்.
 அப்போது அவர் பேசுகையில், “வட கொரியாவின் அணு ஆயுதங்களை எப்போது வேண்டுமானாலும் எதிரி நாடுகளின் மீது தாக்குதல் நிகழ்த்துவதற்குத் தயாரான நிலையில் வைத்திருக்க வேண்டும்.
 கொரியத் தீபகற்பத்தில் பதற்ற நிலை அபாயகரமான அளவை எட்டிவிட்டதால், நம் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக முன்கூட்டியே தாக்குதல் நிகழ்த்த வட கொரியா தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 பிற நாடுகளில் போரையும், பேரழிவையும் ஏற்படுத்த அமெரிக்கா துடித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வட கொரியாவின் இறையாண்மையையும், அந்த நாட்டு மக்களின் வாழும் உரிமையையும் நிலைநாட்ட, அணு ஆயுத பலமே உதவும்’ என்று கிம் ஜோங்-உன் கூறியதாக கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்தது.
 வட கொரியா வியாழக்கிழமை நிகழ்த்திய பரிசோதனையில் 100 முதல் 150 கி.மீ. தொலைவுக்கு 6 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
 ஐ.நா. தடையையும் மீறி ஹைட்ரஜன் அணுகுண்டு மற்றும் ராக்கெட் பரிசோதனையில் வட கொரியா ஈடுபட்டதற்குப் பதிலடியாக, அந்த நாட்டின் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
 வட கொரியாவிலிருந்து நிலக்கரி, இரும்பு மற்றும் இரும்புத் தாது, தங்கம், டைட்டேனியம் மற்றும் அரிய வகைக் கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கும், ராக்கெட் எரிபொருள் உள்ளிட்ட விமானங்களுக்குப் பயன்படும் எரிபொருள்களை வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்தத் தீர்மானத்தில் தடை விதிக்கப்பபட்டுள்ளது.
 வட கொரியாவின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தத் தடைக்குப் பதிலடியாகவே வட கொரியா மறைமுக அணு ஆயுத மிரட்டலை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்படும்போதெல்லாம் வட கொரியா இதுபோன்ற மிரட்டல்களை விடுப்பது வழக்கம் எனவும், வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும், அவற்றை ஏவுகணைகளில் பொருத்தி பிற நாடுகள் மீது ஏவும் தொழில்நுட்பம் அந்த நாட்டிடம் இல்லை எனவும் சில பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க வான் பாதுகாப்பு ஏவுகணைகள்: தென் கொரியா முடிவு
 சியோல், மார்ச் 4: வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலை எதிர்கொள்ளும் விதமாக, தங்கள் நாட்டில் அமெரிக்காவின் “தாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா முடிவு செய்துள்ளது.
 இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியதாவது:
 வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவின் “தாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை எந்த இடத்தில், எப்போது நிறுத்துவது, அதற்கான செலவுகள் போன்ற விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
 தென் கொரியாவில் அமெரிக்க வான் பாதுகாப்பு ஏவுகணைகளை நிறுத்துவதற்கு சீனாவும், ரஷியாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

சவுதி அரேபியாவில் காசு இல்லாதவர்களுக்கு இலவச உணவு வழங்கும் உணவகம்.!


நேற்று சவூதி அரேபியா ரியாத் ஓலையா சாலையில் இருக்கும் டர்கி உணவகத்தில் சாப்பிடம் போகும்போது என் கண்ணில் பட்டது.
காசு இல்லாமல் பசித்தோருக்கு உணவு இங்ஙனம் இலவசமாக வழங்கப்படும், அதற்க்கு இங்குஇருக்கும் பெல்லை அமுக்கினால் போதும் நேரடியாக உணவு எடுத்து வந்து கொடுப்பார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
 கடந்த 2013 ஆம் ஆண்டு துபாயில் இதே போல் பார்த்தேன், இப்போது ரியாத்தில் பார்த்ததும் மகிழ்ச்சி
விருந்தினரை உபசரிப்பது இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு வணக்கமாகும். விருந்தோம்பல் ஈமானின் ஒரு அங்கம் என்று இஸ்லாம் கூறுகிறது.
“யார்” அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
மகத்தான இறைவனின் வேதம் கூறும் வசனம் :
அவர்கள் தங்களை விட பிறருக்கே முன்னுரிமை அளிப்பார்கள். தமக்கு தேவை இருப்பினும் சரியே! (அல்குர்ஆன் 59:9)
அல்ஹம்துலில்லாஹ் என்ன ஒரு மகத்தனா செயல் .

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;


சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பார்கள். அந்தளவுக்கு போற்றப்பட்ட சுக்கின் மருத்துவ பலன்கள் பற்றி சில துளிகள் அறிவோம்..!
* இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
* தலைவலிக்கு சுக்கை நீர் விட்டு அரைத்தோ, உரசியோ (இழைத்து) நெற்றியில் பூசினால், அடுத்த சில நிமிடங்களில் கைமேல் பலன் கிடைக்கும். தண்ணீருக்குப் பதிலாக பால் விட்டு அரைத்தும் பயன்படுத்தலாம். எந்த விதமான தலைவலி வந்தாலும் இந்த சுக்கை நெற்றியில் பற்று (பத்து) போட்டால் அடுத்த சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும். வலி இருக்கும் இடங்களில் சுக்கை தேய்த்தால் இதமாக இருக்கும். வலி விலகியதும் எரிச்சலை ஏற்படுத்தும். அப்படியானால் தலைவலி சரியாயிற்று என்று அர்த்தம். உடனே ஒரு துணியால் நெற்றிப் பற்றை துடைத்தோ, கழுவியோ விடலாம்.


* வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல், குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, மார்பில் எரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் குத்தல் வலி, நாக்கு சுவையின்மை மற்றும் மூட்டுக்களில் வலி ஏற்படும் நேரங்களிலும் இந்த சுக்கு கைகொடுக்கும். 100 மில்லி கொதிக்கும் நீரில் 5 கிராம் சுக்குப்பொடியை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி கால் மணி நேரம் மூடி வைத்து எடுத்து தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். இந்த சுக்கு கஷாயத்தை காலையில் குடித்தது போலவே மாலையிலும் குடிக்க வேண்டும். இப்படி 20 முதல் 40 நாட்கள் வரை செய்து வந்தால் மேலே சொன்ன பிரச்னைகள் எல்லாம் விலகும். சுக்குக் கஷாயத்துடன் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம். பனிக்காலங்களில் கிராம்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
* சாப்பாடு, தூக்கமின்மை, அதிக உடல் உழைப்பு போன்ற காரணங்களால் சிலருக்கு திடீரென வாய்வுப்பிடிப்பு ஏற்படும். இன்னும் சிலருக்கு நெஞ்சுப்பகுதியை உள்ளுக்குள் அழுத்துவது போன்ற உணர்வு, புளியேப்பம் ஏற்படும். அந்தச் சமயங்களில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
* வாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்த வத்தக்குழம்பு சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம். முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் கீல் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.
* கிராமப்புறங்களில் சுக்கு காபி குடிப்பது வழக்கம். சுக்கு காபி என்றதும் பலர் சுக்குப் பொடியை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பார்கள். இன்னும் சிலர் தேயிலை, பாலுடன் சேர்த்து அருந்துவார்கள். இது சரியான முறையல்ல. சுக்கு காபி என்றால் அதனுடன் மிளகு, கொத்தமல்லி, ஏலக்காய் சேர்க்க வேண்டும். ஒரு மடங்கு மிளகு என்றால் அதைவிட 2 மடங்கு சுக்கு, 4 மடங்கு கொத்தமல்லி (தனியா), 10, 12 ஏலக்காய் சேர்த்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் நம் தேவைக்கேற்றார்போல ஒன்றிரண்டு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, பனைவெல்லம் சேர்த்து வடிகட்டி அருந்தலாம். இதில் பால் சேர்க்கக்கூடாது. இதுதான் சுக்கு காபி.
* தினமும் பகல் வேளை உணவின்போது ஒரு ஸ்பூன் சுக்குப் பொடியுடன் கால் ஸ்பூன் நெய் விட்டு பிசைந்து சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கோளாறுகள் வராமல் இருக்கும் என்பதோடு முதுமையை தள்ளிப்போடலாம்.
தேரையர் என்ற சித்தர், தன் பாடலில் சொல்லியிருக்கிறார்... ‘சுக்கு வீட்டில் இருந்தால், சுகம் உடம்பில் இருக்கும்!’

“தினமும் தேநீர் அருந்தினால் மாரடைப்பு அபாயம் குறையும்’


தினமும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால், மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறைவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
 அந்த நாட்டின் “ஜான் ஹாப்கின்ஸ்’ மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
 இதுகுறித்து அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், மாரடைப்பை ஏற்படுத்தும் கால்சியம் ரத்தக் குழாய்களில் தங்குவதை தேநீர் கட்டுப்படுத்துவதால், தேநீர் அருந்தாதவர்களைவிட தினமும் தேநீர் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 35 சதவீதம் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

Friday, 4 March 2016

தமிழகம், புதுச்சேரியில் மே 16ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை!


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 16ம் தேதி நடைபெறும் என்றும், மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று அறிவித்தார். 
அஸ்ஸாம்
அதன்படி, அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 4ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதியும் நடைபெறும்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தல் 6 கட்டமாக நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 4ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 11ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 17ம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 
தமிழ்நாடு- புதுச்சேரி
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16ம் தேதி நடைபெறும். வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ம் தேதி முடிவடையும். ஏப்ரல் 30ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் 5.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 65,616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி முன்புவரை போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். வாக்காளர் பட்டியலிலும் பெயர் இடம் பெற்றிருப்பது கட்டாயம். 5 நாட்களுக்கு முன்பே புகைப்பட வாக்காளர் அடையாள சீட்டு விநியோகிக்கப்படும். வாக்காளர் அடையாள சீட்டு விநியோகத்தை மத்திய பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்.
தரைத்தளத்திலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்து மகளிர் வாக்குச்சாவடி அமைக்கப்படும். 
'நோட்டா'வுக்கு தனி சின்னம்
'நோட்டா'வுக்கு தனி சின்னம் வழங்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். பணப்பட்டுவாடாவை தடுக்க ஜிபிஎஸ் உடன் நடமாடும், பறக்கும் படைகள் அமைக்கப்படும்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது என்று கூறினார்.

Thursday, 3 March 2016

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு.

விடுதலை அரசியல்!

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு.
(சில நாட்களாக அதிமுகவின் பல அறிவிப்புகள் பார்க்கும் போது, அவர்களின் தோல்வி பயம் நன்றாக தெரிகிறது)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.
7 பேரும் ஏற்கனவே 24 வருடம் சிறையில் கழித்துள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை நடந்த போது இறந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? அவர்கள் குடும்பம் மற்றும் குழந்தைகள் நிலை உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா??
_______________________________________
கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முனைப்பு காட்டும் தமிழக அரசு மற்றும் சில தமிழக கட்சிகளுக்கு "இஸ்லாமிய சகோதர்கள் சிலர் #விசாரணை_கைதிகளாக 10 முதல் 20 ஆண்டுகள் உள்ளவர்களை விடுதலை செய்ய முனைப்பு காட்டாதது ஏன்?
இஸ்லாமியர்கள் ஓட்டும் பணமும் தேவை படுகிறது, ஆனால் அவர்களுக்கு கருணைக்காட்ட மனம் இல்லை.
நீங்கள் எல்லாம் நல்லா வருவீங்கடா...

எச்சரிக்கை! சவுதியில் பீப் மற்றும் மட்டன் சாப்பிட்டு நபர்கள் கவனத்திற்கு:

மார்ச் 03:2016

சவுதியில் நகராட்சி முக்கிய
இடங்களில் கடைகளில் இரு தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது. அப்போது உணவு விடுதிகளுக்கு அனுப்பிவைக்க தயார் நிலையில் வைத்திருந்த நாய் இறச்சியை பீப் மற்றும் மட்டன் இறச்சிக்கு பதிலாக
வழங்கி வந்தது கண்டுபிடித்துள்ளது.
பெரும் அளவில் நாய் இறச்சி மற்றும் 50-க்கு மேற்பட்ட நாய்யினை உயிருடனும் மீட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு வருடத்திற்கு முன்னர் இதேபோல்
குவைத்திலும் நாய் இறச்சி விற்பனை செய்த நான்கு நபர்களை போலீஸ் கைது செய்து பெருமளவிலான நாய் இறச்சி கைப்பற்றியது நினைவிருக்கலாம்.
News source:KEPG &KWCTNEWS

IMO வின் ஆபத்து...! imo உபயோகிப்போர் கவனத்திற்கு...!


தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சில தீய செயல்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன...
அந்த வரிசையில் உள்ள ஒன்று தான் imo இதன் மூலம் நாம் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்ய முடியும்...
இதில் என்ன ஆபத்து உள்ளது என்றால் நாம் நம்முடைய சொந்த உறவினர்களுடன் பேசுவதற்கே இது போன்ற அப்ளிகேசன்களை பயன்படுத்துகின்றோம் ஆனால் நம்முடைய நம்பர் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கும் நாம் imo வில் உள்ளோம் என்பதை தெளிவாக காட்டிவிடும்...
உதாரணமாக நாம் சவாரிக்கு உபயோகிக்கும் ஆட்டோ டிரைவர்களின் நம்பர்களை நம் குடும்ப பெண்கள் மொபைல் ஃபோனில் save செய்து வைத்திருந்தால் நம்முடைய தகவல்கள் அனைத்தும் எதிர் தரப்பில் உள்ள நபருக்கு தெரியும் அதாவது நாம் imo உபயோகிக்கின்றோம் என்பதை தெளிவாக அவர்களுக்கு காட்டிவிடும் இதன் மூலம் சில தவறான நபர்கள் இதை தவறான முறைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் ...
எப்படி என்றால் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் கையில் மொபைல் ஃபோன்களை கொடுப்பது என்பது இப்போது சர்வ சாதாரணமாக உள்ளது...
குழந்தைகள் தெரியாமல் imo open செய்து அதில் உள்ள ஃபோன் சிம்பலை தவறுதலாக இலேசாக கையை வைத்தாலே போதும் உடனே கால் சென்றுவிடும் இது எதிர்தரப்பில் உள்ளவருக்கு தெரியாது குழந்தை தான் தவறாக கால் செய்துவிட்டது என்று மீண்டும் அதே நம்பருக்கு இந்த நபர் கால் செய்ய முயற்ச்சிக்க பிரச்சனை இங்கு தான் தொடங்குகின்றது ...
எனவே உங்கள்வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் ஃபோன்களில் தேவையற்ற நம்பர்களை save செய்ய வேண்டாம் என வழியுறுத்துங்கள்...
சவாரிக்கு எடுக்கும் ஆட்டோ,கார் டிரைவர்களின் நம்பர்களை வீட்டில் உள்ள ஆண்களின் மொபைல் ஃபோனில் மட்டும் save செய்து கொள்ளுங்கள்...
சைத்தான் எவர் மூலமாகவும் வழிகெடுப்பான் எனவே பெண்கள் தங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத நம்பர்களை உடனே அழித்துவிடுங்கள்...
இன்னொரு விஷயம் imo வில் invite friends என்ற ஒரு option உள்ளது இதன் மூலம் imo வில் இல்லாத சில நபர்களை நாம் மெசேஜ் மூலம் imo விற்கு அழைப்பதே இதன் பொருள் விவரம் தெரியாத சிலர் இதனை தவறுதலாக உபயோகிக்கின்றனர் invite friends சென்று select all கொடுத்தால் போதும் நமது மொபைலில் உள்ள அனைத்து நம்பருக்கும் அதாவது அவர் Nokia 1100 உபயோகித்தாலும் சரி அவருக்கும் நம்முடைய invite msg சென்று விடும் இதற்கு imo ஒன்றும் Free option ஒன்றும் கொடுக்கவில்லை நாம் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்க்கும் நமது இருப்புத் தொகையிலிருந்தே
(BALANCE) பணம் வசூலிக்கப்படும் விவரம் தெரியாத சிலர் இதனை தவறாக உபயோகித்து தனது மொபைலில் உள்ள அனைத்து பேலன்சையும் இழப்பதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம் எனவே இந்த விஷயத்தை ஆண் பெண் இருபாலரும் கவனமாக கையாள வேண்டும் என்பதே நமது கோரிக்கை ...!!!

வாட்ஸ் அப்பில் இனி ஆவணங்களையும் அனுப்பலாம்!


வாட்ஸ் அப்பில் இனிமேல் ஆவணங்களையும் அனுப்பும் வசதி புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. 
வாட்ஸ் அப் புதிய வெர்சன் - v 2.12.453 ஆண்ட்ராயிட் போன்களிலும்,  v 2.12.14 ஆப்பிள்  ஐஓஎஸ் போன்களிலும் இனிமேல் ஆவணங்களை அனுப்ப வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்குமெண்ட்டுகளை அனுப்ப தனி ஐகானும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ் அப் வெர்சன்களை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கம்பெனி ஆப்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதற்கு முன் பி.டி.எப். பைல்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது வாட்ஸ் அப்பில் 6 ஐகான்கள் உள்ளன. புதிய வெர்சனில்  வீடியோ,புகைப்படங்கள் ஒன்றாக  இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப்பட்டுள்ளது.
அதே வேளையில் ஆவணங்களை யாருக்கு அனுப்புகிறமோ, அவரும் வாட்ஸ் அப் அப்டேட் செய்திருக்க வேண்டும்; அப்போதுதான் அவர் ஆவணங்களை பெற முடியும்.

Wednesday, 2 March 2016

நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி.


சென்னை கோட்டையில் கால்நடைத்துறை அமைச்சர் அலுவலகத்தில் எப்போதும் போல வருகைப் பதிவேடு இன்றும் (மார்ச் - 3, 2016) களை கட்டிக் கொண்டிருந்தது. தேடி வந்தவர்களைப் பார்த்து பேசி அனுப்பி விட்டு சாப்பிட மேசை முன் மந்திரி டி.கே.எம். சின்னையா அமர்ந்த போது பகல் 2.30 மணி.
செய்தித் துறையிலிருந்து பேசிய ஒரு குரல், "சார், சானலை மாத்தாமல், 'அம்மா', டி.வி. சானலை பாருங்க" என்றது. அப்போதுதான் மந்திரி சின்னையாவுக்கு முதல் கவளம் உணவு உள்ளே போய் இருந்தது. முதல் செய்தியாக, 'மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து மந்திரி சின்னையா விடுவிப்பு' என்றது டி.வி. அறிவிப்பு. 
அடுத்த கவளத்துக்கு இடைவெளி விட்டு விட்டு டி.வி.யையே பார்த்துக் கொண்டிருந்த சின்னையா, கலக்கத்துடன் எழுந்து கையைக் கழுவ, அதே நிமிடத்தில் அவரை மந்திரி பதவியிலிருந்தும் நீக்கி தலைமை 'கை' கழுவியிருந்த செய்தி டி.வி.யில் திரும்பத் திரும்ப கேட்க ஆரம்பித்தது. 
சாப்பாட்டை ஓரந்தள்ளி விட்டு, அறையை விட்டு எழுந்த முன்னாள் மந்திரியாகிப்போன சின்னையா,  அரசுக் கார் சாவியை உதவியாளரிடம் ஒப்படைத்து விட்டு, வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட  இன்னொரு காரில் அங்கிருந்து உடனடியாகக் கிளம்பி விட்டார். சின்னையாவைப் பார்க்க அங்கிருந்த செய்தியாளர்கள் வருவதற்குள் அவரது கார் பட்டினப் பாக்கத்தை தொட்டு விட்டது.
யார், இந்த சின்னையா ? அதிமுக மந்திரி சபையில் அசைக்க முடியாத (அதாவது மாற்ற முடியாத) சக்தியாக கடைசி வரை இருந்த 11 மந்திரிகளில் ஒருவர். இப்போது அந்த எண்ணிக்கை 11-ல் இருந்து 10 ஆக சுருங்கி விட்டது... (முதன்முதலில் காலி செய்யப்பட்ட மந்திரி சீட் இசக்கிப் பாண்டியனுக்குரியது, இப்போது கடைசி (?!) மந்திரி 'சீட்' டாக காலியாகியிருப்பது சின்னையாவுக்குரியது) .
இன்னும் மந்திரிகளின் பட்டியல் சுருங்கலாம், அல்லது ஒரு நாள் என்றளவிலாவது யாராவது திடீர் மந்திரி ஆகலாம் அது தனிக்கதை. அதிமுகவின் முன்னோடிகளில் ஒருவரான முனு ஆதியை தெரியாத கட்சிக்காரர்கள் இருக்க முடியாது. அவருடைய அக்கா மகன்தான் டி.கே.எம். சின்னையா. 1988-89 களில் பெரிதாய் கட்சியில் வெடித்த ஜா. அணி, ஜெ. அணி என்ற போராட்ட காலங்களில் ஜெ.வுக்கு ஆதரவாக களம் இறங்கியவர் முனுஆதி. அவருடைய அக்கா மகன் என்ற அடையாளமும், அதே அளவு விசுவாசத்தையும் காட்டக் கூடிய வாய்ப்பும் ஒருநாள் சின்னையாவுக்கு வந்தது.
மாவட்டச் செயலாளராக இருந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி.யிடம் வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரும் கட்சியில் சீனியர் என்ற முறையில் சின்னையா பெயரோடு மூவர் பெயரை தலைமைக்கு அனுப்பி வைத்தார். அதில் கடைசியாக இருந்த பெயரான டி.கே.எம்.சின்னையாவை வேட்பாளராக 'டிக்' அடித்தார் ஜெயலலிதா.
தேர்தலும் வந்தது, சின்னையாவும் வென்றார். வெற்றி அறிவிப்புக்கு முன்னதாக, தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தில் செலவிட்டது போக, எஞ்சியதை அப்படியே கொண்டுபோய் ஜெயலலிதாவிடம் கொடுத்தார்.
"ஓட்டு வீட்டில் இருந்தாலும், உங்கள் நேர்மை மாளிகை போல் பிரமாண்டமாக இருக்கிறது" என்று வாழ்த்தி அனுப்பிய ஜெயலலிதா முதல்வரானார், சின்னையாவும் மந்திரியானார். சின்னையாவின் மனமென்னும் அந்த மாளிகைதான் வாழ்த்தி மகிழ்ந்த அதே ஜெயலலிதாவால் இப்போது இடிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவு
காஞ்சி மாவட்டம் என்றால் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் எம்.பி.யாக இருந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன். இவருடைய உதவியாளர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வெளியான வீடியோ இவரைக் கட்சிப் பதவியிலிருந்து காலி செய்தது. கடந்த ஐந்தாண்டில் 'சிட்லப்பாக்கம்' என்ற பெயரே காஞ்சி மாவட்ட அதிமுகவில் இல்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட சிட்லப்பாக்கத்தாரை பிப்ரவரி 29- ம்தேதி சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருந்தார் ஜெயலலிதா.
அன்றே சிட்லப்பாக்கத்துக்கு ரீ- என்ட்ரீ இருக்கும் என்று கோட்டை ஏரியாவில் சலசலப்பு ஓடியது. ஜெ.வின் எண்ணவோட்டம் பைபாசில் போனதால் அது சின்னையாவின் பொறுப்பையும் காலி செய்து, அவரது கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் காலி செய்துள்ளது. அத்தோடும் நிற்கவில்லை, வேகம்... காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் தண்டரை மனோகரன் எம்.எல்.ஏ. பதவியையும் காலி செய்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஜெ சந்திப்பின்போதே காஞ்சி மாவட்டத்துக்கான புதிய நிர்வாகிகள் லிஸ்டை ஜெ. கேட்டு வாங்கிக் கொண்டு விட்டார். அதில், தன்னுடைய கட்சி பொறுப்பு போனபோது, பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தண்டரை மனோகரன் இடத்துக்கு வேறு பெயரை எழுதிக் கொடுத்திருந்தார் ராஜேந்திரன். இது மொத்தமும் ஒன்றாக, ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக தற்காலிக நியமனத்தில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனை உட்கார வைத்திருக்கிறது.
திருப்பத்தை விதைத்த காஞ்சி. மகளிர் மாநாடு
நால்வர் அணியில் முக்கியமான ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகிய மந்திரிகளை,  காஞ்சி மகளிரணி மாநாட்டில் பங்கேற்க தலைமையில் இருந்து சிக்னல் கொடுக்க வில்லை. மந்திரிகள் எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருக்குத்தான் அங்கு போகும்படி உத்தரவு. அதிலும், வேண்டா வெறுப்பாக அங்கே அனுப்பி வைக்கப்பட்டவர் மந்திரி வைத்திலிங்கம்.
முதல்வர் ஜெயலலிதாவின் "குட்-புக்" கிலிருந்தவர் மந்திரி வைத்திலிங்கம். ஓ.பி.எஸ். மீதான கோபம்தான், மீனவரணி ரமேஷ், வேளச்சேரி அசோக் எம்.எல்.ஏ. மற்றும் தேனி, திண்டுக்கல் நகர செயலாளர்கள் இருவர் நீக்கமும் என்பது நேற்றைய தகவல். இன்றும் அதன் தொடர்ச்சியாகத்தான் தாம்பரம் நகரச் செயலாளர் கரிகாலன் நீக்கமும் நடந்திருக்கிறது.
சின்னையாவை ஏன் காலி செய்தார் ஜெ. ?
 'அதெல்லாம் சரி, டி.கே.எம். சின்னையா யாருடைய ஆதரவாளரும் இல்லையே... அவரை ஏன் நீக்கினார்கள்?' என்றால், 'அவரும்,  தாம்பரம் நகரச் செயலாளர் கரிகாலனும் நகமும், சதையுமாக இருக்கிறவர்கள். இங்கே அடிச்சா, அங்கே வலிக்கும் என்ற ஸ்டைல் நீக்கம் இது' என்று பதில் வருகிறது. அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் எம். கூத்தன் அந்த இடத்துக்கு போஸ்டிங் செய்யப்பட்டிருக்கிறார்.
புதுக்கோட்டை விஜயபாஸ்கர் நீக்கம் ஏன் ?
மந்திரி வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பவர், புதுக்கோட்டை விஜயபாஸ்கர். ஏற்கனவே பதவி பறிப்புக்கு ஆளாகி ரீ- என்ட்ரீ ஆனவர் மந்திரி விஜயபாஸ்கர். தற்போது இவரை லேசாக 'டச்' செய்வது போல் புதுக்கோட்டை மா.செ. பதவியை மட்டும் பறித்து அங்கே பி.கே.வைரமணியை மா.செ.வாக போஸ்டிங் போட்டிருக்கிறார்கள்.
விஜயபாஸ்கர் நீக்கத்துக்கு கட்சி வட்டாரத்தில், இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. "டி.கே.வைரமணி சார்ந்த சமூகத்தை குறிப்பிட்டு விஜயபாஸ்கர் ஏளனம் பேசியதாக சில மாதங்களுக்கு முன்பு மாவட்டத்தில் பிரச்னை வெடித்தது. அப்போது, விஜயபாஸ்கரை எதிர்த்து குறிப்பிட்ட சமூகத்தினர் சாலை மறியல், போராட்டம் என்று நடத்தினர். அந்தநேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விஜயபாஸ்கர், இது சிலரின் திட்டமிட்ட சூழ்ச்சி, அதில் என்னை சிக்க வைக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார். அமைச்சர் பதவியில் ரி-என்ட்ரியாகி இருந்த புதிதில் மறுபடியும் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து தூக்காமல் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. தற்போது, வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியாக இருந்ததாலேயே விஜயபாஸ்கர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை கட்சிக்கான மாவட்டச் செயலாளர்கள் உள்ள கணக்கில் 50 மாவட்டங்கள் உள்ளன. அதில், திருவள்ளூர், வேலூர், காஞ்சி, விழுப்புரம், தேனி, சென்னை மற்றும் கடலூர் உள்பட பத்து மண்டலங்களுக்கு ஓ.பி.எஸ். பொறுப்பில் இருக்கிறார். தொடர்ந்து நீக்கப்படுகிறவர்களும் அவருடைய பொறுப்பு எல்லைக்குள் இருப்பவர்களே. 
ஓ.பி.எஸ்.சை அடுத்து வைத்திலிங்கமும் முதல்வரின் களையெடுப்பு பட்டியலில் இருக்கிறவர் என்பது நேற்றுவரை அரசல் புரசலாக இருந்தது, இன்று வெளிப்படையாக  வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. 
அதாவது இந்த களையெடுப்பின் ஸ்டைலே அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்... அவர்கள் ஆதரவாளர்கள்தான் காலியாவார்கள். அந்த வகையில் 16 மந்திரிகள் இவர்கள் லைனில் இருப்பதாக தகவல். ஒருவரை இன்று பகல் முழுமையாக 'ஸ்கேன்' செய்து முடித்து விட்டுதான் லேசாக 'டச்' கொடுத்திருக்கிறார்களாம்.
இன்னைக்கு ராத்திரி யாருக்கெல்லாம் தூக்கம் போகப்போகுதோ....?

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை; இந்தியாவுக்கு ஆபத்தில்லை!

Posted Date :  (02/03/2016)

சுமத்ரா:இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது இந்தியாவுக்கு ஆபத்தில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்ராவுக்கு தென்மேற்கே உள்ள படாங்கில் இருந்து 808 கி.மீ. தூரமுள்ள பகுதியை மையமாகக் கொண்டு, இந்திய நேரப்படி மால 6.20 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
சுனாமி எச்சரிக்கை
இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுமத்ராவை ஒட்டிய மேற்கு, வடக்கு பகுதிகள் மற்றும் அசெக் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஆபத்தில்லை
இதற்கிடையே, இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுகத்தால் இந்தியாவை சுனாமி தாக்க தற்போது வாய்ப்பில்லை எனவும், நிலநடுக்கத்தால் ஏற்படும் விளைவை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஹைதராபாத்தில் உள்ள சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தகவல் கூறியுள்ளது.

திமுக - தேமுதிக கூட்டணி: உண்மையா... உதாரா?


திமுக தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இடம் பிடித்துள்ளது என்றும் அக்கட்சிக்கு 59 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக  வெளியாகி உள்ள செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளபோதிலும், அதனை அதிகாரப்பூர்வமாக இருகட்சிகள் தரப்பிலும் யாரும் உறுதிப்படுத்தவில்லை. 
2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள்,  கூட்டணிக்கு வலைவிரித்து பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.ஆளும் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து எந்த இறுதி செய்யப்பட்ட தகவலும் இல்லாத நிலையில்,  234 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நிற்கும் என்றே அக்கட்சியின் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்,  இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி என்று சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பாஜகவின் மேலிட பொறுப்பாளர் ஜவடேகர் சில நாட்களுக்கு முந்தைய தனது சென்னை வருகையின்போது உறுதி செய்தார்.
அதே போல  விஜயகாந்த் தலைமையிலான  தேமுதிக,  பாஜக கூட்டணியில் இடம்பெறும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை வலுவாக நடைபெற்று வருகிறது என்றும்  செய்திகள் வெளியாகி,  அதை உறுதிப்படுத்தும் வகையில், பிரகாஷ் ஜவடேகர் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில்,  அவரை நேரில் சந்தித்து பாஜக கூட்டணிக்கு அழைத்தார். ஆனாலும் விஜயகாந்த்  பிடிகொடுக்கவில்லை என்று அவரே தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார். மேலும் அவர்  இந்த வார இறுதியில் மீண்டும் விஜயகாந்தை சந்திக்க உள்ளதாகவும்,  அப்போது இறுதியான  முடிவு தெரியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தச் சந்திப்புக் குறித்து விளக்கமளித்த தேமுதிக, ஜவடேகர் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறியது. 
இந்நிலையில், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,விடுதலைச் சிறுத்தைகள் அமைத்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கு கண்டிப்பாக  தேமுதிக வரும் என்று அக்கட்சித் தலைவர்கள் மேடைகள் தோறும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜயகாந்த் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று (புதன்) இணையதளங்களில் தேமுதிக-திமுக கூட்டணி உறுதியானது என்றும், 59 சீட் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது  என்றும் செய்திகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆனால் இது குறித்து  இரு கட்சிகளின் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக யாரும் இது குறித்து உறுதிப்படுத்தவில்லை.
இது குறித்து வேட்பாளர் நேர் காணலில் பங்கேற்க வந்திருந்த தேமுதிக இரண்டாம் மட்ட தலைவர்  ஒருவரை தொலைபேசியில் பிடித்து கேட்டபோது, "இந்தச் செய்தி வதந்தி. திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேராது.  தேமுதிக வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது.  அதில் விஜயகாந்த் பிஸியாக இருக்கிறார். கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க இன்னும் நாட்கள் இருக்கின்றன" என்றும் தெரிவித்தார். 
மேலும் தங்கள் கூட்டணிக்கு தேமுதிகவை மிகவும் எதிர்பார்க்கும் திமுகதான், இத்தகைய செய்தியை பரப்பி வருவதாகவும் தேமுதிக தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
கேப்டன்....சீக்கிரம் க்ளைமேக்ஸ ஓட்டு

பாலஸ்தீனியர்களுக்காக 252 மில்லியன் யுரோவை நிதியாக அளித்தது ஐரோப்பியன் யூனியன் !

புருசெல்ஸ், மார்ச். 02-

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்த அகதிகளின் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக ஐரோப்பியன் யூனியன் 252.5 மில்லியன் யூரோவை நிதியாக அளித்துள்ளது. 
”இந்த நிதியின் மூலம், பாலஸ்தீனியம் மக்களின் கல்வி, சுகாதாரம், வறுமையில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஐரோப்பியன் யூனியன் உதவுகிறது.” என்று ஐரோப்பியன் யூனியன் வெளியுறவுக் கொள்கை தலைவர் மோஹிரினி தெரிவித்தார். 
இதன் மூலம் பாலஸ்தீன அகதிகளின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றும் ஆனால் இந்த நடவடிக்கைகள் போதுமானது அல்ல என்றும் கூறினார். 
மேலும், ”பாலஸ்தீன நிறுவனங்கள் நிச்சயம் வலிமையானதாகவும், ஜனநாயக தன்மையோடும், பொறுப்புடனும் வளர வேண்டும்” என்றும் மோஹிரினி தெரிவித்தார்.
2016-ம் ஆண்டு வழங்கப்படும் நிதியின் முதல் பகுதி என்று ஐரோப்பியன் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெடித்த வன்முறையில் 178 பாலஸ்தீனியர்கள் மற்றும் 28 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 1 March 2016

தமிழக அரசின் ” இல்லந்தோறும் குறைந்த கட்டணத்தில் "இன்டர்நெட் “சேவை முதல்வர் ஜெ தொடங்கி வைத்தார் ! : டாரிப் பட்டியல் வெளியீடு!


சென்னை : அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய இணைப்புகள் வழங்கவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். இதன் மூலம் ,தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு ,பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை பெற்று பயன்பெற முடியும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் , தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தைச் சேர்ந்த "அரசு ஃபைபர் "(இல்லந்தோறும் இணையம் ) தனது டாரிப் பட்டியல் விவரங்களை அறிவித்துள்ளது.இந்த டாரிப் பட்டியல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 6 பிளான்களை வழங்குகிறது.
அதன்படி குறைந்தபட்சம் ,மாதம் கட்டணமாக 299 ரூபாய் செலுத்தி, 2 ஜிபி டேட்டாவை 2 எம்பிபிஎஸ் வேகத்தில் பெறலாம் என்றும் அதிகபட்சமாக மாதம் 899 ரூபாய் செலுத்தி, 40 ஜிபி டேட்டாவை 4 எம்பிபிஎஸ் வேகத்தில் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் , மாதத்திற்கு பதிவிறக்கும் அளவுக்கு மேல் உபயோகித்தால் கூடுதலாக , 5 ஜிபி க்கு 99 ரூபாயும், 10 ஜிபிக்கு 149 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (அரசு ஃபைபர் )தெரிவித்துள்ளது.
மேலும் பிற சந்தேகங்களுக்கு "1800 425 2911" என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

டேய் ! நீதாண்டா லூஸு – சீமான் , அருனன் சண்டை.


பெரியாரைப் பின்பற்றாத சீமான் பெரியார் பேரைச் சொல்லி மக்களை ஏமாற்றுவதாக அருணன் குற்றம் சாட்ட அருணனை திருப்பித் திட்டவந்த சீமான் புலோவுல லூஸுன்னு சொல்ல அதற்கு திருப்பி அருணன் சீமானை நோக்கி நீதாண்டா லூசுன்னு திட்ட சபையே கலேபரக்காட்சியானது.
மொத்ததில் சண்டையை நிறுத்தவேண்டிய பாண்டே அண்ணன் trp ரேட்டிங் கிடைச்சிடுச்சுன்னு மகிழ்ச்சியில் ஒரு பக்கம். நல்லா அடிச்சுக்கிங்கடானு பாஜக மறுபக்கம் இருக்கு. ஊரு ரெண்டாயிட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் தானே !
இனிமேலாவது சீமான் வயது பக்குவத்தையும் மேடை நாகரீகத்தையும் கொஞ்சம் கற்றுக்கொள்ளவேண்டும்.
Heated Word Exchange Between Seeman & CPM’s Arunan | Sensational Video

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 127 பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.


இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எண்.REP/83-1/DR/2016 தேதி: 29.02.2016
பணி: பல்வினைப் பணி
காலியிடங்கள்: 127
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800 மற்றும் ரூ.1,900
வயதுவரம்பு: 27.03.2016 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிற்துறை பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2016
 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கதி கலங்க வைத்த சவூதி மன்னர்..!

உலகிலேயே ராணுவத்தில் சக்தி வாய்ந்த முதல் நாடு அமெரிக்கா, அமெரிக்காவுக்கும் அடுத்த இடத்தில் இரண்டாவது சக்தி வாய்ந்த நாடு ரஷ்யா,
ரஷ்யா ஆப்கானிஸ்தானை பிடித்த போது ரஷ்யாவை நிலைகுலைய ஒசாமா பின்லேடன் அவர்களை வைத்து ஆப்கானிஸ்தானை மீட்டது அமெரிக்கா, பின்னர் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆட்டிப்படைத்ததால் அமெரிக்காவுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் யுத்தம் தொடங்கியது.
அதேப்போல் சோவியத் ரஷ்யன் தகர்க்கப்பட்டு 6 முஸ்லிம் நாடுகள் தனித்தனியாக உருவானது.
மேற்கண்ட சம்பவங்களையும், ரஷ்யா கம்யூனிஸ நாடு என்பதால் கம்யூனிஸ்ட் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கை என்பதையும் கூறி ரஷ்யாவோடு முஸ்லிம் நாடுகள் நெருங்காதவாறு செல்வ செழிப்புள்ள முஸ்லிம் நாடுகளை தன் வசம் வைத்துக்கொண்டது அமெரிக்கா,
முஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்கா ஒருபுறம் நேச நாடுகளாக இருந்து கொண்டாலும் முஸ்லிம்களின் எதிரி நாடான இஸ்ரேலும் அமெரிக்காவின் கள்ள குழந்தையாகும்.
மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டுவது போல் அமெரிக்கா முஸ்லிம் நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இரட்டை வேடத்தையே போட்டு வருகிறது.
இதேநிலையில் தான் இத்தனை ஆண்டுகள் ஓடியது.
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த 10 மாதத்தில் அவர் சவூதி அரேபியாவை மட்டும் முன்னேற்றவில்லை,
உலக அரசியலையே புரட்டிபோட்டு அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கதி கலங்க வைத்து விட்டார்.
நீண்டகால வரலாற்றை மாற்றி எழுதும் விதமாக சவூதி அரேபியா ரஷ்யாவுடன் கூட்டணி வைத்து அமெரிக்காவுக்கு முதல் பாடத்தை கற்று கொடுத்தார்.
இதனால் ஆத்திரம் கொண்ட அமெரிக்கா சவூதி அரேபியாவையும், ரஷ்யாவையும் ஒன்றினையாதவாறு ரஷ்யாவுக்கு கூடுதலாக 6 மாதம் பொருளாதார தடையை நீட்டித்துள்ளது.
இருப்பினும் சவூதி அரேபியா ரஷ்யாவுடன் கூட்டணி வைப்பதில் உறுதியாகவே இருக்கிறது. சவூதி அரேபியாவை பின் தொடர்ந்து பல்வேறு அரபு நாடுகளும் ரஷ்யாவுடன் கூட்டணி வைக்க தொடங்கி விட்டது.
இஸ்ரேலை சுற்றியுள்ள அண்டை நாடுகளான பாலஸ்தீன், ஈரான், ஈராக், சிரியா, துருக்கி, சவூதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகளை ரஷ்யா நேச நாடுகளாக ஒன்றிணைத்து கொண்டிருக்கிறது அல்லது இந்த ஒன்றிணைப்பை சவூதி அரேபியா மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறது.
இதனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் கதி கலங்கியுள்ளன.
எது எப்படியோ 60 ஆண்டுகால வெறியை தீர்க்கும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.
இதனால் பதறி போன அமெரிக்கா முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் பல்வேறு சலுகைகளை வாரி வாரி கொட்டுகிறது,
ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கியது, பாலஸ்தீன் கொடியை ஐநாவில் ஏற்றியது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடான இந்தியாவில் முஹம்மது அக்லாக் படுகொலைக்காக இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது, இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதம் பெருகி விட்டதாக குற்றம் சுமத்தியது,
அமெரிக்காவில் பக்ரீத்துக்கு விடுமுறை அறிவித்தது, வாட்ச் பையன் அஹமதுவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து உபசரித்தது, அமெரிக்காவில் ஹிஜாபுக்கு எதிராக யாரேனும் வாய் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒபாமா பேசியது, அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலைகளில் பன்றி கறிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, ஹலாலான உணவுக்கு மட்டுமே அனுமதி அளித்து ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இப்படி தொடர்ச்சியாக அமெரிக்காவும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கிறது,

அரசு இ-சேவை மையம் மூலம் பாடநூல்கள் பெறும் வசதி அறிமுகம்.

             
  முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களுக்கு மாணவர்கள் அரசு இ-சேவை மையத்தில் பணம் செலுத்தி பதிவு செய்தால், வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
”மாணவர்களுக்கு தேவையான முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணையவழி மூலமாக (www.textbookcorp.in) விற்று வருகிறது. மேலும், இணையவழியாக பணம் செலுத்த இயலாததால், பாடநூல்களை பெற முடியாத மாணவர்களுக்கும் எளிதில் பாடநூல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், தாலுகா அளவிலான அரசு பொது இ-சேவை மையம் மூலமாகவும் பணம் செலுத்தி பாடநூல்கள் பெற தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாடநூல்களின் விவரம் மற்றும் விலை ஆகியவற்றை அரசு பொது இ-சேவை மையத்திலேயே, பாடநூல் நிறுவன இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பாடநூல்கள் தேவைப்படும் மாணவர்கள் அருகில் உள்ள அரசு பொது இ-சேவை மையத்தை அணுகி தேவையான பாடநூல்களை தேர்வு செய்து அதற்கான பணத்தை செலுத்தி, பதிவு செய்யலாம். அதற்கான ரசீதும் வழங்கப்படும்.
இதற்கு கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லை. அவ்வாறு பதிவு செய்யும் மாணவர்களுக்கு, பாடநூல்கள் அவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

நமது மாவட்டம் முழுவதும் 19,170 வாக்காளர்களை இறுதி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ::


நமது மாவட்டம் முழுவதும் 19,170 வாக்காளர்களை இறுதி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு :: இரட்டிப்பு பதிவு, இறந்தவர்களின் பெயர்களே நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் விளக்கம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்த இறந்தவர்கள் பெயர், இரட்டிப்பு பெயர்கள் என 19,170 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன்.
மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் பின்னர் தெரிவித்தது:
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஜன. 20-ம் தேதி நிலவரப்படி ஆண் வாக்காளர்கள் 9,32,791-ம் பெண் வாக்காளர்கள் 9,56,339-ம், இதரர் 39-ம் என மொத்தம் 18,89,169 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் இறந்த வாக்காளர்களின் பெயர், இரு இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர் என மொத்தம் 19,170 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நீக்கம் செய்யப்பட்ட பட்டியல் மாவட்ட ஆட்சியரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பட்டியல் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக 333 பேர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கள விசாரணை நடைபெறுகிறது. மேலும், ஆட்சேபனை உள்ளவர்கள் படிவம் 6 அல்லது 8-ல் நிறைவு செய்து அளிக்கலாம். இறந்த வாக்காளர்கள் குறித்து படிவம் 7 கொடுக்கலாம் என்றார் ஆட்சியர்.

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க!!


தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர போகாது அப்படியே இருக்கும்.
அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி முடிக்கு தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்று யோசியுங்கள். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது என்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
ஹென்னா
ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
வெந்தயம்
வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.
நெய்
நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்க முடியும்.
மிளகு
தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.
ப்ளாக் டீ
1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

எந்நேரமும் மொபைல், கம்ப்யூட்டர் 'நோண்டுபவரா' நீங்கள்..? உஷார்..!


டிஜிட்டல் ஸ்க்ரீன்களுக்கு முன்னால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் வரை செலவு செய்யும் போது கண்களுக்கு ஏற்படும் சிரமம் ஆனது உடல்ரீதியான வசதியின்மையை உண்டாக்கும், அதைத்தான் 'டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன்' (Digital Eye Strain) என்கிறார்கள்..! 
டெஸ்க்டாப், லாப்டாப், டேப்ளெட், ஸ்மார்ட்போன் என எல்லாமுமே டிஜிட்டல் திரைகள் தான். அதற்காக அவைகளையெல்லாம் பயன்படுத்தாமலும் இருக்க முடியாது. அதே சமயம் 'டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன்'தனை தவிர்க்கும் வாய்ப்பும் மிக குறைவு தான். அப்போது என்ன செய்யலாம்..??
'டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன்' ஏற்படும் போது அதை உடனடியாக சரிசெய்து கொள்ளும்படியான 5 டிப்ஸ்களை தான், கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். கண்கள் 'ரொம்ப ரொம்ப' முக்கியம், பத்திரமா பாத்துக்கோங்க..! 
டிப்ஸ் 01 : 
கம்ப்யூட்டர் ஐவேர் அல்லது கிளாசஸ்களை அணிந்து கொள்ளலாம். 
பார்வை மேம்பாடு : 
அதாவது உங்கள் கண்களுக்கு ஏற்றமுறையில், பாதிக்கக்கூடிய நீள நிறத்தை தடுத்து பார்வையை மேம்படுத்தும் கண்கண்ணாடிகளை பயன் படுத்தலாம்.
டிப்ஸ் 02 :
கண்களுக்கும் பார்வைக்கும் மிகவும் உதவும் 20 - 20 - 20 விதியை நடைமுறைப்படுத்தலாம். 
20 நொடி : 
அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு இடையிலும், 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகளுக்கு பார்க்க வேண்டும். 
டிப்ஸ் 03 : 
ஒளிவழிக்கு உகந்தவாறு வேலை செய்யும் இடத்தை அமைத்துக்கொள்ளுதல். 
குறைவான ஒளி :
எடுத்துக்காட்டுக்கு தலைக்கு மேல் இருக்கும் மின்விளக்கின் ஒளி குறைவாக இருப்பின் கண்கள் கூசுவதை தவிர்க்கலாம். 
டிப்ஸ் 04 : 
கருவிகளுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஹை-ஃபைவ் டிஸ்டன்ஸ். 
சரியான நிலை : 
அதாவது, மொபைல் அல்லது கம்ப்யூட்டருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி ஆனது நெருக்கமான பார்வையிலோ அல்லது மிக தொலைவான பார்வையிலோ இல்லாமல் சரியான நிலையில் இருக்கும்படியாக அமைத்துக் கொள்ளுதல். 
டிப்ஸ் 05 : 
ஸ்க்ரீன் டெக்ஸ்ட் ஸைஸ்'தனை அதிகரித்தல்.
உள்ளடக்கம் :
ஸ்க்ரீனின் உள்ளடக்கம் நம் கண்களுக்கு தெளிவாக இருக்கும்படியான, பொதுவான ஒரு டெக்ஸ்ட் சைஸ் வைத்துக்கொள்ளுவது மிகவும் நல்லது.
Posted: 29 Feb 2016 01:38 AM PST
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் வியாபராங்களில் ஒன்று தான் மொபைல் போன் வியாபாரம். மொபைல் போன் என்றால் முன்பு நாம் பயன்படுத்திய நோக்கியா போன் மட்டும் கிடையாது. அன்றை மொபைல் போன்கள் அழைப்பு, குறுந்தகவல், மற்றும் ஒரே ஒரு கேம் மட்டுமே கொண்டிருந்தன.
இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது, இன்றைய ஸ்மார்ட்போன்களில் பல்வேறு அம்சங்கள் நமது பணிகளை சிறப்பாக செய்து முடிக்க வழி செய்கின்றன. ஆனால் ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்து மொபைல் போன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் விரிவாக இங்கு தொகுத்திருக்கின்றோம். 
ஃபிளெக்சிபில் கான்செப்ட் போன் 
இது முற்றிலும் வளையும் திறன் கொண்ட ஓஎல்இடி திரை கொண்ட கான்செப்ட் போன். பார்க்க பணம் வைக்கும் பர்ஸ் போன்றே காட்சியளிக்கின்றது.
பிக்கோலோ கான்செப்ட் போன் 
பெண்களை கவரும் விதமாக இந்த கான்செப்ட் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. 
கான்செப்ட் போன்
ஸ்லைடிங் டச் திரை மற்ரும் க்வர்டி கீபோர்டு இந்த கருவியில் 4.3 எம்பி ஆட்டோஃபோகஸ் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 
டிராவெல்லர் கான்செப்ட் போன் 
ஆன்ட்ரியூ செங் வடிவமைத்த இந்த கருவியில் கீபோர்டு மற்றும் தொடு திரை வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி கையில் இருந்து எளிதாக நழுவாத படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்டியூட் போன்
எடீ ஜோ வடிவமைத்த இந்த கான்செப்ட் கருவியில் 5 எம்பி ப்ரைமரி கேமரா, புகைப்படங்களை நேரடியாக பதிவேற்றம் செய்யும் மென்பொருள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி கையில் வைத்திருந்தால் எவ்வித வெளிச்சத்தையும் பயன்படுத்தி பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளும். 
தி கம்பாலா இயர்போன் 
இந்த மொபைல் போன் இயர் போனாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். பிரதியேக வடிவமைப்பு மற்றும் ஃபிளக்ஸி திரை மற்றும் பல்வேறு சென்சார்கள் கொண்டிருக்கின்றது.
ஃப்ளட்டர் கான்செப்ட் போன்
வளையும் திறன் கொண்ட ஓஎல்இடி திரை கொண்ட இந்த கருவி எதிர்கால திரைப்படங்களில் காண முடியும். 
நனோக்கியா
மேக் ஃபுனாமிசு வடிவமைத்த இந்த கருவியில் அதிநவீன தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 
மொபைல் ஸ்க்ரிப்ட் 
சிறிய தொடு திரை கொண்ட இந்த கருவியை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இந்த கருவி தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும்.