கீழக்கரை மக்களின் ஓட்டுக்களை எப்படியாவது பெற்று விடவேண்டும் என்ற நோக்கத்தில் கீழக்கரை நகராட்சி பகுதியில் செய்யாத வேலைகளை எல்லாம் நான் செய்தேன் என்று பொய் பிரச்சாரம் செய்தும் அறிக்கை வெளியிட்டு வருவதாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் தி.மு.க கூட்டணி ம.ம.க வேட்பாளர் ஜவாஹிருல்லாவை அதிமுகவை சேர்ந்த கீழக்கர நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட உரக்கிடங்கில் நமக்கு நாமே திட்டம் (2009&2010) மூலம் 20லட்சம் மதிப்பீட்டில் டென்டர் விடப்பட்டு சுற்றுசுவர் கட்டப்பட்டது, ஆனால் அதை 41லட்சத்தில் தான் முயற்சி மேற்கொண்டு கட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கீழக்கரையை தலைமையிடமாக கொண்டு தனிதாலுகா அமைவதற்கு ராமநாதபுரம் அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் அன்வாராஜா, மாவட்ட செயலாளர் மற்றும் என்னுடைய தொடர் முயற்சியால்தான் கீழக்கரையை தனி தாலுகாவாக முதல்வர் அம்மா அவர்கள் செயல்படுத்தினார், இதற்காக ஜவாஹிருல்லாஹ் எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
ராமநாதபுரம்&கீழக்கரை சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்ததாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் பொய்யான பிரச்சாரம் செய்கின்றார், தமிழக முதல்வர் தமிழகத்தில் பல இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைத்துவருகின்றார் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவும் முடிந்து விட்டது அடுத்து ராமநாதபுரம்&கீழக்கரை சாலையிலும், உச்சிப்புளி& ராமேஸ்வரம் சாலையிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க போவதாக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். ஆகவே இதுவும் உண்மைக்கு புறம்பானது.
கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள் உட்பட அனைத்து பணிகளும் நகராட்சி பொது நிதியிலிருந்துதான் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஜவாஹிருல்லா தன்னுடைய நிதியிலிருந்து செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
ஆகவே அ.தி.மு.க தலைமையிலான தமிழக அரசுக்கும், கீழக்கரை நகராட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக அறிக்கை விட்டிருப்பதை நான் நகராட்சி தலைவர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கின்றேன் இவ்வாறு கூறினார்.
http://kaalaimalar.net/jawahirulla-was-condemned/
http://kaalaimalar.net/jawahirulla-was-condemned/

No comments:
Post a Comment