Thursday, 12 May 2016

லிபியாவில் சிக்கிய 29 இந்தியர்கள் பத்திரமாக கொச்சி திரும்பினர்


கொச்சி : 45 நாட்களாக லிபியாவில் சிக்கி தவித்த இந்தியர்கள் 29 பேர் இன்று காலை பத்திரமாக கொச்சி வந்து சேர்ந்தனர். இவர்களை கேரள அதிகாரிகள் வரவேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 12 பேர் அடங்குவர்.
ஆப்ரிக்க கண்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள லிபியா நாட்டில் , 40 ஆண்டுகளுக்கும் மேல் அதிபராக இருந்த கடாபி, 2011ல், இங்கு நிகழ்ந்த உள்நாட்டு கலவரத்தில் கொல்லப்பட்டார். அதன் பிறகு, அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து, பிரதமராக, அப்துல்லா அல் - தானி உள்ளார். கடந்த வாரம் முதல், 'ஜிஹாதி' எனப்படும் பயங்கரவாதிகள், தலைநகர் திரிபோலி மற்றும் முக்கிய நகரமான பென்காஜியின் விமான நிலையங்களை கைப்பற்றுவதற்காக, கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். கடந்த 2011ல், அங்கு, பயங்கர உள்நாட்டு கலவரம் வெடித்தபோது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், அங்கிருந்து அப்போது பத்திரமாக மீட்கப்பட்டனர். இப்போது அங்கு, 6,000 இந்தியர்கள் உள்ளனர்; அவர்களில் பெரும்பாலானோர், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அது போல், திரிபோலி மற்றும் பென்காஜி நகரங்களில், 800க்கும் மேற்பட்ட பெண் நர்ஸ்கள் உள்ளனர்.
இந்நிலையில் சப்ரதா என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே பெரும் வெடி குண்டு தாக்குதல் நடந்தது. இங்கு வசிக்க முடியாத அளவிற்கு தள்ளப்பட்டனர். இதனையடுத்து இந்த பகுதியில் இருந்து வசித்த இந்தியர்கள் தப்பிக்க லிபியா அரசு உதவியுடன் திரிபோலி கொண்டு வரப்பட்டனர். விசா இன்றி தவித்த அவர்கள் மத்திய அரச உதவியுடன் இன்று பத்திரமாக தாயகம் திரும்பினர்.
மொத்தம் 29 பேரில் 6 குடும்பத்தை சேர்ந்த 17 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள், இதில் குழந்தைகள் 11 பேர் . கேரள மாநிலம் ஆழப்புழா, கோட்டயம், பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள் சென்னை வரவுள்ளனர்.

No comments:

Post a Comment