திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பேருந்து நிலையத்தில் காதல் தம்பதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அரிவாளுடன் தப்பிச்செல்லும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
உடுமலைபேட்டை அருகே உள்ள குமரலிங்கம் பகுதியை சேர்ந்த சங்கர், கவுசல்யா ஆகியோர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு, உடுமலைபேட்டை பேருந்து நிலையம் சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல், இருவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கவுசல்யா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தின் போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்மநபர்களை பொதுமக்களில் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்

No comments:
Post a Comment