மனிதநேய ஜனநாயக கட்சியின் வளைகுடா நாடுகளின் அங்கமான மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பில் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு தஸ்மா டீச்சர் சொசைட்டியில் பொதுமக்கள் ஆதரவுடன் சிறப்பாக நடந்து முடிந்தது.
அப்துல் பாசித் நீதி போதனை வழங்க அதை தமிழாக்கம் செய்த நீடூர் சர்புதீன் வழங்கி துவங்கிவைக்க, மண்டல செயலாளர் முத்துக்காப்பட்டி ஹாஜா மைதீன் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்கள். மண்டல துணை செயலாளர் ஏனங்குடி முஹம்மது பாசில் மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலத்தில் உறுவானது ஏன் என்பதை விளக்கினார்.
அதனை தொடர்ந்து தாயகத்தில் இருந்து வருகை புரிந்து உள்ள மாநில பொது செயலாளர் அண்ணன் தமிமுன் அன்சாரி அவர்களும் மாநில செயலாளர் அண்ணன் ராசுதீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். குவைத் மண்டல சார்பாக நினைவு பரிசுகளை மாநில பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், மாநில செயலாளர் H.ராசுதீன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இறுதியாக மண்டல பொருளாளர் நீடூர் நபீஸ் அவர்கள் நன்றி உரையாற்றினார். அதை தொடர்ந்து அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்து


No comments:
Post a Comment