சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகள் முனையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது.
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 58 வது முறையாக கண்ணாடி பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினர். 8 அடி உயரமுள்ள கண்ணாடி உடைந்து விழுந்ததில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்

No comments:
Post a Comment