Wednesday, 16 March 2016

யாருக்கும் ஆதரவு இல்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் எப்.எம்.அல்தாஃபி அறிவித்துள்ளார்.இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கடந்த தேர்தல்களில் முஸ்லிம் சமுதாயத்துக்காக நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக அளித்த உறுதி மொழியின் அடிப்படையில் சில அரசியல் இயக்கங்களை ஆதரித்துள்ளது. ஆனால், அந்தக் கட்சிகள் தேர்தலுக்கு பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் இனிவரும் காலங்களில் எந்த அரசியல் கட்சியையும் தேர்தலின்போது ஆதரிப்பதில்லை என்று எங்கள் பொதுக்குழுவில் முடிவு செய்தோம். அதன்படி, இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.
அதேநேரத்தில், எங்கள் அமைப்பில் உள்ளவர்கள், அவர்களுக்கு பிடித்தமான அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என்றும் கூறியுள்ளோம்.விகி தாச்சார அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எங்களின் எண்ணம். அதற்கான காலம் கனியும்போது நாங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment