Saturday, 9 January 2016

சவுதி அரேபியா-ஈரான் விவகாரம்: ரியாத்தில் முக்கிய கூட்டம்



ரியாத்: சவுதி அரேபியா மற்றும் ஈரான் இடையிலான மோதல் முற்றிவரும் நிலையில் இது குறித்து விவாதிப்பதற்காக ஜிசிசி எனப்படும் வளைகுடா கூட்டுறவு பேரவையை சேர்ந்த நாடுகள் இன்று ரியாத்தில் சந்தித்து பேசுகின்றனர். ஷீயா பிரிவை சேர்ந்த மத குரு நிமிர் அல் நிமிர் உள்ளிட்ட 47 பேருக்கு சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து தெஹ்ரானில் உள்ள அந்நாட்டு தூதரகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதையடுத்து இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளன. கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இவை இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் மத்திய கிழக்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது

No comments:

Post a Comment