Sunday, 10 January 2016

மருத்துவ செய்திகள்............... சாப்பிட்டு முடித்த பின்னர் இதையெல்லாம் செய்யாதீர்கள்!



உணவினை சாப்பிட்டு முடித்த பின்னர் சிலர் மேற்கொள்ளும் தவறான பழக்கவழக்கங்களால் சாப்பிட்ட உணவின் பலன் உடலுக்கு முழுமையாக கிடைக்காமல் போய்விடுகிறது.
இதனால் ஏற்படுவது, சத்துக்குறைபாடு மட்டுமின்றி அதனால் சில வித நோய்களும் ஏற்படுகின்றனர்.

எனவே நாம் சாப்பிடும் உணவின்போதும், சாப்பிட்டு முடித்த பின்னர் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதிலும் கவனமாக இருத்தல் வேண்டும்.

சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது

உணவு வகைகள் ஜீரணமாகவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால் ஜீரண கோளாறுகள் ஏற்படும்.

உடற்பயிற்சி செய்யக் கூடாது

உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் ஜீரண உறுப்புகள் முறையாகச் செயல்பட, போதிய ரத்தம் கிடைக்காது.

சாப்பிட்டு, 3 அல்லது 4 மணி நேரத்துக்குப் பின்னர் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். பொதுவாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதே நல்லது. காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால், ஜீரண உறுப்புக்களால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக் கொள்ள முடியாது.

சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது

சாப்பிட்டவுடன் குளித்தால், கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்று, ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வலுவிழந்து விடும்.

குளித்தால் முக்கால் மணி நேரத்திற்கு பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தான் குளிக்க வேண்டும்.

சிப்ஸ், அப்பளம்

உருளைக் கிழங்கு சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எப்போதும் அதிக குடிநீர், கலோரி இல்லாத பானங்களைக் குடிக்கவும். "தொலைக்காட்சி' பார்த்துக் கொண்டோ, புத்தகம் படித்துக்கொண்டோ, பேசிக் கொண்டோ சாப்பிடாதீர்கள்.

உணவு மூச்சுக்குழாய்க்குள் போய் அடைத்துக் கொள்ளும். அப்போது மனம் ஜீரணச் சுரப்பிகளை சுரக்கத் தூண்டுவதில்லை. காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் சாப்பிட வேண்டும்.

சாப்பிட்டவுடன் பழம் சாப்பிடக்கூடாது

காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும்.

உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உண்ட உணவு செரிக்காத நிலையில், பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

சாப்பிட்ட உடனே பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும். சாப்பிட்டு, 1-2 மணி நேரம் கழித்துதான் பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு, 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. அதிக நார்ச்சத்தும் பிற சத்துக்களும் முழுமையாக கிடைக்கும்.

==============================
அதிகமாக பசிக்கிறதா? அல்லது பசிக்காமல் இருக்கிறதா? விபரீதம் தெரிந்துகொள்ளுங்கள்..............

உண்ணுதல் கோளாறு என்பது தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகரிப்பது அல்லது குறைவதேயாகும்.
குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பல்வேறு காரணிகளால் உண்ணுதல் கோளாறு உருவாக வாய்ப்பு உள்ளன.

காரணம்

ஒரு நபர் முதலில் குறைந்த அளவு அல்லது அதிக அளவு உணவை எடுத்துக்கொள்வதில் இருந்து படிப்படியாக உருவாகின்றது இந்த உண்ணுதல் கோளாறு.

இக்கோளாறினால் துன்பமடையும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேறு சில உளவியல் பிரச்சனைகளும் தென்படுகின்றன.

அவை, மன உளச்சல், உடல் எடை குறித்த அச்சம், தாழ்வு மனப்பான்மை மற்றும் குடும்ப சூழல்கள் என்பவையாகும்.

அளவுக்கு அதிகமாக உண்ணும் கோளாறு என்பது பெரும்பசி நோயைப் போலவே இருக்கும், ஆனால் இதில் பாதிக்கப்பட்டவர், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டபின், அதை வெளியேற்ற முயலமாட்டார். இதனால் பாதிக்கப்பட்டவர் பொதுவாக பருமனாகவே காணப்படுவார். இது பொதுவாக பெண்களைவிட, ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது.

அறிகுறிகள்

உண்ணுதல் கோளாறு இருக்கும் நபர்கள், பெரும்பாலானோரை விடவும் அதிக உணவை வேகமாக சாப்பிடுவார்கள்.

மன உளைச்சலால் பாதிக்கப்படும்போது அதிகமாக சாப்பிடுவது அல்லது உணவை வெறுப்பது, அஜீரணக் கோளாறை உருவாக்கும் உணவு வகைகளை விரும்பி எடுத்துக்கொள்வது, வழக்கத்திற்கு மாறான நேரங்களில் சாப்பிடுவது போன்றவை.

அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொள்ளும் வேளையில், இயல்பை விட வேகமாக சாப்பிடுவது, பசி எடுக்காத போதும் அளவுக்கு அதிகமாக உண்பது, பிறர் காணாதவாறு தனியாக அதிகம் சாப்பிடுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது மிதமிஞ்சி நோய் எனப்படும்.

நோய் கண்டறிதல்

உண்ணுதல் கோளாறு என்பது மருத்துவத்தால் குணப்படுத்த கூடிய ஒரு வியாதியே. இந்த நோயானது பெரும்பாலும் மனச்சோர்வு, போதை மருந்து நாட்டம் உள்ளிட்ட பிற காரணிகளுடன் பிணைந்தே காணப்படும்.

சில அறிகுறிகளை உதாசீனம் செய்யும் நோயாளிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தலையும் இது ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இதில் பசியற்ற உளநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சம வயதுடையவர்களை விட 18 மடங்கு முன்னரே இறக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சை

பசியற்ற உளநோய் (Anorexia Nervosa)

பசியற்ற நோய் பாதித்தவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது மிகவும் சிரம்மான காரியம். தங்களுக்கு பிரச்சனை இருப்பதையே இவர்கள் நம்ப மறுப்பதுடன், கோபமும் எரிச்சலும் அடைவார்கள்.

சிகிச்சைக்குச் சென்றால் குண்டாகிவிடுவோம் என்ற அதிக பயமும் சிகிச்சையை நிராகரிக்க அவர்களை தூண்டினாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி இவர்களை சிகிச்சைக்கு உட்படுத்துவது மிகவும் முக்கியம்.

இவர்களுக்கு பழையபடி தேவையான அளவு எடையை அதிகரிக்கச் செய்வதும் தகுந்த உணவுப் பழக்கவழக்கத்தை ஏற்படுத்துவதும்தான் சிகிச்சையின் குறிக்கோள்.

சிலநேரங்களில், உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாடு (Malnutrition) ஏற்படும்போது மருத்துவமனையில் சேர்த்து ட்யூப்(Tube) மூலம் உணவை செலுத்த வேண்டியிருக்கும்.

நீண்ட கால சிகிச்சையாக, இவர்களுக்கு, உளவியல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால், மனச்சோர்வுக்கு மருந்தும் பரிந்துரைக்கப்படலாம்.

உணவியல் வல்லுனர்களின் ஆலோசனையும் இவர்களுக்கு உதவும். தங்கள் தோற்றம், சாப்பிடுவது, உணவு போன்ற விடயங்களைப் பற்றிய இவர்களின் தவறான கருத்து / சிந்தனையை மாற்ற ஆலோசனை வழங்கப்படும்.

ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டால், குறைந்தகால சிகிச்சையே போதுமானது.

பெரும்பசி நோய் (Bulimia Nervosa)

பெரும்பசி நோய் சிகிச்சையின் இலக்கு, பாதிக்கப்பட்டவரின் அசாதாரண உணவுப் பழக்கத்தை முறிப்பதுதான். உணவியல் நிபுணரின் ஆலோசனை, மனச்சோர்வுக்கான மருந்துகள், நடத்தை மாற்று சிகிச்சை, தனிநபர், குழு, மற்றும் குடும்ப சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள், பெரும்பசி நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment