Updated: January 8, 2016 13:18
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் இறுதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ் ராஜ் அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 2,3,4 தேதிகளில் வாதங்கள் நடைபெறும் என அந்த அமர்வு அறிவித்துள்ளது.
நீதிமன்ற விசாரணை பட்டியலில் இருக்கும் வழக்குகளை பொருத்து 4-ம் தேதிக்குப் பின்னர் ஜெயலலிதா வழக்கு விசாரணை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என நீதிபதிகள் கூறினர்.
இந்த மூன்று நாட்களிலும் ஜெயலலிதாவின் வழக்கு விசாரணை பட்டியலில் முதலாவது இடம்பெறும் என நீதிபதி சந்திர கோஷ் தெரிவித்தார்.
நீதிபதி மாற்றம்:
உச்ச நீதிமன்ற பதிவுத்துறை வியாழக்கிழமை மாலை துணை அறிவிப்பு பட்டியல் வெளியிட்டது. அதில், "சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதி மன்ற அறை எண் 11-ல், 52-வது வழக் காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என தெரிவித்திருந்தது.
மேலும் ஜெயலலிதா மீதான வழக்கை விசாரிக்க ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நீதிபதி ஆர்.கே. அகர்வால் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நீதிபதி அமிதவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே இன்று ஜெயலலிதா மீதான சொத் துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி பினாகி சந்திர கோஷ், நீதிபதி அமிதவா ராய் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
No comments:
Post a Comment