- First Published: Dec 21, 2015 2:43 AM
- Last Updated: Dec 21, 2015 2:43 AM
மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்க
மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர். 40 நிமிஷங்கள் நீடித்த சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும், தூத்துக்குடி, திருநெல்வேலியில் நிகழ்ந்த சேதங்களையும் நிதியமைச்சரிடம் முதல்வர் ஜெயலலிதா எடுத்துரைத்தார். கடுமையான இயற்கை பாதிப்பு என மத்திய அரசு அறிவித்தமைக்கும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை வழங்கியதற்கும் முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.
மேலும் ரூ.2 ஆயிரம் கோடி: மழை-வெள்ளப் பாதிப்புகளைச் சீரமைக்க தமிழகத்துக்கு கூடுதல் நிதி தேவை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இதுதொடர்பாக நவம்பர் 23-ஆம் தேதி அளித்த கோரிக்கை மனுவில், நிவாரணம், மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.8,481 கோடி தேவை எனத் தெரிவித்ததாகவும், இப்போது ஏற்பட்ட பாதிப்புகள்-சேத விவரங்கள் குறித்து துணை கோரிக்கை மனு தயாராகி வருவதாகவும் முதல்வர் கூறினார்.
அதேசமயம், பாதிப்புகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக ஒதுக்கினால்தான் நிவாரணப் பணிகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் உதவிகள் தேவைப்படக் கூடிய மிகவும் முக்கியமான அம்சங்கள் குறித்து அருண் ஜேட்லியிடம் முதல்வர் விளக்கினார்.
சிறப்பு வீட்டு வசதித் திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி தேவை: குறிப்பாக, சென்னையின் நீர்நிலைகளான அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க தமிழக அரசு முன்னுரிமை காட்டி வருவதாகவும், அதில், 25 ஆயிரம் பேருக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக குடியிருப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மீதமுள்ள 25 ஆயிரம் குடும்பங்களுக்கும், இதர நீர்நிலைகளில் வசிக்கும் 25 ஆயிரம் குடும்பங்களுக்கும் தேவையான வீட்டு வசதித் திட்டங்களை ஏற்படுத்த சிறப்பு வீட்டு வசதித் திட்டத்தை தமிழக அரசு தயாரித்துள்ளதாகவும், அதற்கு ரூ.5 ஆயிரம் கோடி தேவை எனத் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, இதுதொடர்பான கோரிக்கை பிரதமரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பாதித்தோருக்கு கடன் வசதி: பாதிக்கப்பட்டோர் வாகனங்கள், கல்விக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை வாங்க ரூ.5 லட்சம் வரை எளிய வட்டியில் வழங்க வழிசெய்ய வேண்டுமென ஏற்கெனவே பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து அருண் ஜேட்லியிடம் முதல்வர் நினைவு கூர்ந்தார். இதுதொடர்பாக மாநில அளவிலான வங்கிகள் குழுக் கூட்டத்திலும் அதுகுறித்த கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் உறுதி: முதல்வரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "முத்ரா திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடன்களைப் பெற வழி செய்யப்படும்.
இது தமிழக அரசு அதிகாரிகள் இடம்பெற்றுள்ள மாநில அளவிலான வங்கிகள் குழுவின் மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்றார்.
தமிழக அரசின் இதர கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசால் விரைந்து பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
சந்திப்பின் போது, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
ஒருங்கிணைப்பு தனி அதிகாரி நியமனம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் காப்பீடுகளை பதிவு செய்து இழப்பீடுகளைப் பெறுவதற்காக தமிழக அரசின் சார்பில் ஒருங்கிணைப்பு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
காப்பீடுகள் கோரி பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். எனவே, காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்துச் செயல்படுவதற்காக, தமிழக அரசு சார்பில் நிதித் துறை செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காப்பீடுகளுக்கு விண்ணப்பித்து இழப்பீடுகளைப் பெற, சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு தமிழக அரசு உதவிகளைச் செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம், முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.

No comments:
Post a Comment