மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் நீக்கும் விழாவாக கிறிஸ்துமஸ் அமையட்டும்: முதல்வர் ஜெயலலிதா
தமிழகம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் நீக்கும் விழாவாக கிறிஸ்துமஸ் அமையட்டும் என கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - இயற்கைப் பேரிடரால் துயருறும் தமிழக மக்களுக்கு இன்னும் கூடுதலாக உதவும் நோக்கில், அதிமுக சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
அல்லல்படும் மனிதர்களுக்கு நீங்கள் செய்கின்ற உதவியெல்லாம் ஆண்டவனுக்கே செய்யும் உதவியாகும்'' என்ற இயேசு பெருமானின் அறிவுரைக்கு ஏற்ப, அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் நீக்கும் தூய தொண்டின் விழாவாக நடத்திட வேண்டும் என்றும் செல்வி. ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இயேசு பிறப்பின் பெருவிழா இந்த ஆண்டு தியாகத்தின் விழாவாகவும், தன்னலம் மறந்த தூய தொண்டின் விழாவாகவும் அமையட்டும் என முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment