மதபோதகர் ஜாகிர் நாயக்கிடமிருந்து நன்கொடை:பாஜக- காங்கிரஸ் மோதல் !
சர்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிடமிருந்து நன்கொடை பெற்றது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜாகிர் நாயக்கின் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே காங்கிரஸ் நன்கொடை பெற்றதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி, ஜாகிர் நாயக் சர்சைக்குரியவர் என முன்கூட்டியே அறிய காங்கிரஸ் கட்சிக்கு ஜோசியமா தெரியும் என வினவியுள்ளார்.
ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஜாகிர் நாயக் 50 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், நன்கொடையை கடந்த 2011 ஆம் ஆண்டு திருப்பி அளித்துவிட்டதாக அக்கட்சி கூறியுள்ளது.
ஜாகிர் நாயக்கின் போதகத்தை கேட்ட நபர் ஒருவரே, வங்கதேசத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்வதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
No comments:
Post a Comment