Saturday, 10 September 2016

இதுவரை 10 லட்சம் முஸ்லிம்கள்  ஹஜ் பயணம் !நெரிசலை தடுக்க,  சவுதி சிறப்பு ஏற்பாடு

இதுவரை 10 லட்சம் முஸ்லிம்கள்  ஹஜ் பயணம் !

நெரிசலை தடுக்க,  சவுதி சிறப்பு ஏற்பாடு
உலகின் பல நாடுகளிலிருந்து இதுவரை 10 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணத்துக்காக  மெக்கா சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு ஹஜ் புனித பயணத்தின் போது  நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெக்கா வரும் பக்தர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு எலக்ட்ரானிக் ரிஸ்ட் பேண்ட் எனப்படும் சிறப்பு கைவளையம் வழங்கப்படுகிறது. அதன் மூலம், கூட்ட நெரிசல் கணக்கிடப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளது.
இதுதவிர மெக்கா பெரிய மசூதியில் 1000 புதிய கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment