உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள லிபிய நாட்டில் சிக்கியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த புஷ்பாமேரி குடும்பம் உள்ளிட்ட 32 இந்தியர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2011 ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த புஷ்பாமேரி – பிலவேந்திரன் தம்பதி உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர், கேரளாவைச் சேர்ந்த 21 பேர், என மொத்தம் 32 நபர்கள் லிபிய நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லிபியாவில் பயங்கர கலவரம் வெடித்து உள்நாட்டு போராக மாறியது. இதனையடுத்து வெளிநாட்டினர் பலர் லிபியாவை விட்டு வெளியேறி விட்டனர். ஆனால், தற்போது வரை ஜாவியா மருத்துவமனை நிர்வாகம் இந்தியர்கள் அனைவரும் வெளியேறுவதை தடுப்பதுடன், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பறித்து வைத்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் இந்திய தூதரகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment