Wednesday, 6 April 2016

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்த விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.


சென்னை விமான நிலையத்தில் 61 முறை விபத்து ஏற்பட்டது தொடர்பாக விளக்கமளிக்ககோரி மத்திய விமான போக்குவரத்து துறை மற்றும் இந்திய விமானத் துறை ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கடந்த 2012ம் ஆண்டு சென்னை விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டது. 
அதன் பிறகு விமான நிலையத்தின் மேற்கூரை மற்றும் கண்ணாடி ஆகியவை 61 முறை உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகும் விமான நிலைய அதிகாரிகள் இது குறித்து எந்த உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆனால் அதில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இது குறித்து உரிய விளக்கம் அளிக்ககோரி மத்திய விமான போக்குவரத்து துறை செயலர் மற்றும் இந்திய விமான துறை தலைவர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment