Saturday, 16 April 2016

தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவை நாடும் அரசியல் கட்சிகள்....!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியலில் போட்டியிடும் அரசியல் கட்சியல்ல,
எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்காத ஆன்மீக அமைப்பு.
ஆனால் பிரதமர் முதல் முதல்வர் வரை அனைத்து கட்சி தலைவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கென்று தனி முக்கியத்துவம் கொடுப்பதை காண முடிகிறது. பிரதமர் வெளிநாட்டு தலைவர்களை அமர வைத்து கண்ணியப்படுத்தும் நாற்காலியில் தவ்ஹீத் ஜமாஅத் தலைவரை அமர வைத்து கண்ணியப்படுத்துகிறார்.
IAS தேர்வில் தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி கேள்வி கேட்கப்படுகிறது.
தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லையென்ற நிலையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவிற்காக தலைமையகத்தை நோக்கி திமுகவும், அதிமுகவும் வந்து கொண்டிருக்கிறது.
தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் இதே நிலையை காண முடிகிறது.

கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியிலுள்ள முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், அதிமுக கூட்டணியிலுள்ள தமிழ்மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவை தேடி வருகிறார்கள்.
கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையிலும் தம்மை தேடி வரும் கட்சியனருக்கு உரிய கண்ணியத்தையும் கொடுத்து தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற தெளிவான விளக்கத்தையும் கொடுத்து வருகிறது.

No comments:

Post a Comment