Saturday, 16 April 2016

சவுதியில் மகன் கைது மீட்க தந்தை கோரிக்கை


பேராவூரணி: சவுதி அரேபியாவில் கைதான மகனை மீட்க தமிழக முதல்வருக்கு தந்தை மனு அனுப்பியுள்ளார். தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சியை சேர்ந்தவர் கிராம உதவியாளர் சந்திரபோஸ். இவர் தமிழக முதல்வர், தஞ்சை கலெக்டருக்கு அனுப்பிய மனுவில், எனது மகன் சக்திவேல் (28). சிவில் என்ஜினியரிங் படித்தவர். சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கம்பெனிக்கு 2013ல்வேலைக்கு சென்றார். 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இந்தியா திரும்புவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அவர் வேலை பார்த்த கம்பெனியில் சம்பள பாக்கி இருந்ததாகவும், ஊருக்கு போக வேண்டியுள்ளதால் பாக்கியை தருமாறு நிர்வாகிகளிடம் சக்திவேல் கேட்டுள்ளார்.
இந்நிலையில் சக்திவேலின் தொலைபேசி எண்ணுக்கு நான் தொடர்பு கொண்டேன். அப்போது அவரது நண்பர் ஒருவரை போைன எடுத்து சக்திவேலை, சவுதி அரேபிய போலீசார் கைது செய்து அழைத்து சென்றுவிட்டனர். எதற்காக கைது செய்தனர், அவர் எங்கு உள்ளார் என்ற விபரம் தெரியவில்லை உடனடியாக அவரை மீட்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று கூறிவிட்டு வைத்துவிட்டார். இதனால் சவுதி அரேபியாவில் உள்ள தனது மகனை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment