Tuesday, 18 October 2016

முதல்வர் குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு 3 நாள் நோன்பு :


முதல்வர் குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுகவினர் 3 நாட்கள் நோன்பு மேற்கொண்டுள்ளனர்.
அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் 25 பேர் இன்று முதல் 3 நாட்கள் நோன்பு இருந்து வருகின்றனர். மேலும், அப்போலோ மருத்துவமனை முன்பு 20 பள்ளி மாணவர்கள் முதல்வர் குணமடைய வேண்டி திருக்குரான் ஓதி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முதல்வர் குணமடைய வேண்டி அதிமுக மகளிரணி சார்பில் அப்போலோ மருத்துவமனை முன் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல முதல்வர் குணமடையவேண்டி திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் 20க்கும் மேற்பட்டோர்  அப்பல்லோ மருத்துவமனை முன்பு தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடத்தினர்.

No comments:

Post a Comment