Tuesday, 18 October 2016

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது முன்னாள் பிரதமர் தேவகவுடா.


மங்களூர், அக்.17 பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என்று மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவகவுடா தெரிவித்தார்.
இதுகுறித்து மங்களூரில் சனிக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நமதுநாட்டில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டுள்ளனர். எனவே, பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும். நான் பிரதமராக இருந்தபோது, மக்களின் குறைகளைத் தீர்ப்பதில்தான் அதிக கவனம் செலுத்தினேன். விவசாயிகள் வஞ்சிக்கப்பட் டுள்ளனர்.
விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு மக்களிடையே எழுச்சியை உருவாக்க விரைவில் பிரசாரப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
ஜம்மு-காஷ்மீரில் பிரச்சினை கைமீறிச் சென்று கொண் டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக அமைதி சீர்குலைந்துள்ளது. அங்கு அமைதி திரும்ப வேண் டியது அவசியமாகும். அதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்றார் அவர்

No comments:

Post a Comment