ஜித்தா (20 செப் 2016): சவூதியில் செல்ஃபோன் கடைகளில் வெளிநாட்டினர் வேலை செய்யக்கூடாது என்ற உத்தரவை அடுத்து பல இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர்.
சவூதியில் செல்ஃபோன் கடைகளில் சவூதி குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று சவூதி தொழிலாளர் அமைச்சக உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதியிலிருந்து இந்த புதிய விதிமுறை அமுலுக்கு வந்தது.
இந்த நிலையில் முழுக்க வெளிநாட்டினர் மட்டுமே வைத்திருந்த ஆயிரக்கணக்காண செல்ஃபோன் கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.
இதனிடையே விதிமுறையை மீறி செல்ஃபோன் கடைகளில் பணிபுரிந்த வெளிநாட்டினர் தொழிலாளர் அமைச்சக அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, இந்திய ரூபாய்.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment