ஜித்தா (19 செப் 2016): ஹஜ் யாத்ரீகர்கள் சட்டவிரோதமாக சவூதியில் தங்க எத்தனித்தால் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சவூதி குடியிருப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஹஜ் நிறைவடைந்த நிலையில், ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஹஜ் விசாவில் சவூதி வந்தவர்கள் ஹஜ் விசா காலாவதியாதவற்குள் தங்களது நாடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று சவூதி குடியிருப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு திரும்பி செல்லாமல் சவூதியிலேயே தங்க எத்தனித்தால் அவர்கள் கடும் தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்றும் அவர்களுக்கு உதவி புரிபவர்களும் கடும் தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்றும் சவூதி குடியிருப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அதேவேளை ஹஜ் விசாவில் சவூதி வந்தவர்கள் மக்கா, மதீனா தவிர வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment