Sunday, 18 September 2016

பள்ளிவாசல், தர்க்காக்களை பழுதுபார்க்க மற்றும் சீரமைக்க தொகுப்பு நிதி உருவாக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு.


கிறிஸ்துவ தேவாலய பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு மானியமாக ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினரின் நலனை காக்கவும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த தமது தலைமையிலான அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களை செய்து வருவதாக குறிப்பிட்டார். 
தேர்தல் அறிக்கையில் தேவாலயங்களுக்கு பழுது பார்த்தல், சீரமைத்தல் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அதன்படி தேவாலயங்களுக்கு பழுது பார்த்தல், சீரமைத்தல் பணிகளுக்காக மூன்று லட்சம் ருபாய் வரை மானியமாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். .
இதற்கென இந்தாண்டு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். 
இதே போல் பள்ளிவாசல் மற்றும் தர்க்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புகளை மேற்கொள்வதற்காக ஒரு தொகுப்பு நிதி உருவாக்கப்படும் எனவும், இந்த தொகுப்புக்கு நிதி 3 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment