சவூதி அரேபியா, செப்-18
ஹஜ் யாத்திரைக்கு அடுத்து அதிகமாக புனித கஃபாவிற்கு விஜயம் செய்து முஸ்லீம்கள் நிறைவேற்றி வரும் வணக்க வழிபாடுகளில் ஒன்று உம்ராவாகும். இந்த உம்ரா பயணத்திற்கான அனுமதி தற்போது ஹிஜ்ரி வருடத்தில் ஸபர் மாதம் துவங்கி ரமலான் மாதம் வரையிலான 8 மாத காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

2030 எனும் தூர நோக்கு வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டு வரும் வருடத்திற்கு 8 மில்லியன் உம்ரா விசாக்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 30 மில்லியன் விசாக்கள் என்ற அளவை 2030 ஆம் ஆண்டிற்குள் எட்ட திட்டமிடப்பட்டுள்ளன.
எனவே, இனி முஹர்ரம் மாதமும் ஷவ்வால் மாதமும் கூடுதலாக உம்ரா சீசனில் சேர்க்கப்பட்டு 10 மாதங்களால் அதிகரித்திட திட்டங்கள் பரிசீலணை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்புடைய பொருட்களையும் ஆவணங்களையும் சேகரித்து பாதுகாத்து பார்வைக்கு வைக்கும் நடவடிக்கைகளுக்காக 'உலகின் பிரம்மாண்ட மியூசியம்' ஒன்றை மக்கா நகரில் எழுப்பும் ஆரம்பகட்ட வேலைகளை மக்கமாநகர சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகத்துடன் இணைந்து செய்து வருகிறது.
Source: Arab News
No comments:
Post a Comment