Friday, 9 September 2016

ஒட்டகம் வெட்ட அனுமதி வழங்க மீண்டும் மறுப்பு !

ஒட்டகம் வெட்ட அனுமதி வழங்க மீண்டும் மறுப்பு !

தமிழகத்தில் ஒட்டகங்கள்  வெட்ட அனுமதிக்க முடியாது என்ற உத்தரவை அரசு தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் கூறியுள்ளது.
பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் குர்பானிக்காக ஒட்டகம் வெட்ட அனுமதிக்க வேண்டுமென, சென்னையைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்ட பின்னரே ஒட்டகம் வெட்ட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறினர். 
மேலும் ஒட்டகம் வெட்ட அனுமதிக்கக்கூடாது என்ற உத்தரவை தமிழக அரசு தீவிரமாக கடைபிடிக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment