Sunday, 18 September 2016

பால் குடிப்பது கூட பசு வதை தானாம்...


      பசுவை பாதுகாப்பதாக கூறி, இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர் மாட்டிறைச்சி உண்பவர்களை தாக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தேறி சர்ச்சைக்குள்ளானதையெல்லாம் அறிந்திருப்போம்....
இந்த நிலையில், பால் குடிப்பது கூட பசு வதை தான் என்று டெல்லியை சேர்ந்த இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு சொல்கிறது..
பாலுக்காக பசுக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அதனை தடுக்க பாலுக்கு எதிராக பரப்புரை செய்ய உள்ளதாகவும், அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, பாலின் தேவை அதிகரித்திருப்பதால், அதற்காக பசுக்கள் பெருமளவு வதைக்கப்படுவதாக கூறுகிறது அந்த அமைப்பு.
குறிப்பாக, ஆண் கன்றுகள் இறைச்சிக்காக அனுப்பப்படுவதாகவும், பெண் கன்றுகள் பாலுக்காக வளர்க்கப்படுவதாகவும் கூறும் விலங்கு அமைப்பு, பசுக்களுக்கு செயற்கையாக ஹார்மோன்கள் செலுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறது.
பொதுவாக ஒரு விலங்கின் பாலை மற்ற விலங்குகள் குடிப்பதில்லை என்ற போது, மனிதன் மட்டும் ஏன் மாறாக செயல்படுவதாகவும் விலங்கு அமைப்பு கேள்வி எழுப்புகிறது.
பசும்பால் அத்தியாவசியமாகிவிட்ட நிலையில், விலங்குகள் அமைப்பு ஒன்று அதனை பசு வதையாக முறையிடுவது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

No comments:

Post a Comment