காவிரி விவகாரம் தொடர்பான போராட்டங்கள், வன்முறை காட்சிகளை செய்திகளில் பயன்படுத்தும்போது கட்டுப்பாடுடன் ஒளிபரப்ப தொலைக்காட்சி ஊடகங்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
உண்மை நிலவரத்தை சரிபார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், ஒளிபரப்பும் காட்சிகள் விரும்பத்தகாத செயல்களை தூண்டும் விதமாக அமைந்துவிட கூடாது என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வன்முறைகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் தூண்டுதலுக்கு காரணமாகி பதற்றம் அதிகரிக்கும் என்றும், இதனால், இருமாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை நேரலையாகவோ, கோப்புப் படங்களாகவோ ஒளிபரப்புவதை தவிர்த்து, காவிரி ஆறு அல்லது பாதுகாப்பு படையினரின் காட்சிகளை ஒளிபரப்பலாம் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், வார்த்தைகளை பயன்படுத்தும்போது கவனமாக கையாள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment