தங்கமகன் மாரியப்பனுக்கு மஹிந்திரா கார், ரூ. 10 லட்சம் பரிசு !
டிவிட்டரில் எழுந்த கோரிக்கையை ஏற்றார் ஆனந்த் மஹிந்திரா
டிவிட்டரில் எழுந்த கோரிக்கையை ஏற்றார் ஆனந்த் மஹிந்திரா
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் ஜீப் ஒன்றை பரிசளித்துள்ளது. மேலும், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து மாரியப்பனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு மாநில அரசுகளும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பரிசுத் தொகைகளை அறிவித்தன. மஹிந்திரா கார் நிறுவனம், இவர்கள் இருவருக்கும் Thar ஜீப்பை பரிசாக அளித்தது.
தமிழக வீரர் மாரியப்பன் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் அக்கவுண்ட்டில், 'சாக்ஷி மாலிக், பி.வி.சிந்து ஆகியோருக்கு கார் கொடுத்ததைப் போல, மாரியப்பனுக்கு ஏன் கொடுக்கவில்லை?' என ஏராளமானோர் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்காக #TharForMariyappan என்ற தனி ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான ட்விட்டுகள் எழுதப்பட்டன.
அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் மாரியப்பனுக்கும் தார் ஜீப்பை பரிசளிப்பதாக அறிவித்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.
அதுமட்டுமின்றி, தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து 10 லட்ச ரூபாய் தொகையை பரிசாக அளித்துள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, 'தனக்கு முன்னுள்ள பல்வேறு தடைகளை கடந்து தங்கம் வென்றுள்ளார் மாரியப்பன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment