Sunday, 4 September 2016

ஷுஹதாக்களின் குடும்பத்தினர் ஹஜ் செய்ய வருகை....!!

ஷுஹதாக்களின் குடும்பத்தினர் ஹஜ் செய்ய வருகை....!!

மக்கா, மதினா இரு புனித பள்ளியின் சேவகரும், உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் மன்னருமான சல்மான் அவர்கள் பாலஸ்தீனில் ஷஹீதாக்கப்பட்ட ஆயிரம் தியாகிகளின் குடும்பத்தினர் புனித ஹஜ் கடமையை நிறைவு செய்ய அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பின்பேரில் ஆயிரம் தியாகிகளின் குடும்பத்தினர் ஹஜ் செய்ய மக்கா மாநகருக்கு வருகை தந்துள்ளனர்.
சென்ற ஆண்டும் மன்னர் சல்மான் அவர்களின் அழைப்பின்பேரில் ஆயிரம் தியாகிகளின் குடும்பத்தினரும் ஹஜ் செய்தனர்.
ஷுஹதாக்களின் குடும்பத்தினரின் கண்ணீரை போக்கும் வகையில் மன்னர் சல்மான் அவர்களின் செயல்பாடுகள் அமைந்து வருகிறது.

No comments:

Post a Comment