சிறுபான்மையினருக்கு வீடு வசதிகளில் வாய்ப்புகள் தேவை : சட்டப் பேரவையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உரை.....!!
மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு முஸ்லிம் பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைய மிகுந்த அக்கறைக் கொண்டிருக்கிறது அதற்கு நன்றி.
தமிழக அரசு தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களை ஆரம்பித்து அதை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு 2011 ஆம் ஆண்டு 1+1 என்று இருந்த இணை மானியத்தை 1+2 என்று உயர்த்தி தந்தார்கள். அதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அதை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் 1+3 என்று சீரமைத்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் இச்சங்கம் எல்லா மாவட்டங்களிலும் செயல்படும் வகையில் அதில் முஸ்லிம் சமூக ஆர்வலர்களையும், ஜமாஅத்தார்களையும் உறுப்பினர்களாக்கி ஏழை முஸ்லிம் பெண்கள் பொருளாதார வலிமை பெற மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்றும், அதில் ஜமாஅத் தலைவர்களை, உலமாக்களை உறுப்பினர்களாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
வீடு வசதிகள் துறை :
தமிழ்நாட்டில் நிலமற்ற, வீடற்ற ஏழை சிறுபான்மையினரின் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது இதற்கு ஒரு தீர்வு வராதா? ஏன ஏங்குகிறார்கள்.
கர்நாடகத்தில் சிறுபான்மையினர் வீடு கட்டவும், வீடு வாங்க மனை வாங்கவும், வங்கியில் கடன் பெற்றால் அதன் வட்டியை மானியமாக அரசு வழங்குகிறது.
மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் மேம்பாட்டு மற்றும் நிதியமைப்பு சார்பில் சிறுபான்மையினரில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீடுகளை கட்டி குறைந்த வாடகைக்கு விடுகிறது.
அதுபோல தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினர் பொருளாதரார மேம்பாட்டு வாரியம் சார்பில், இதற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
விழப்புணர்வு பரப்புரை தேவை :
சிறுபான்மையின மக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் மத்திய-மாநில அரசுகள் ஏராளமான சிறப்பு திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகின்றன.
ஆனால் அதுகுறித்து விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. இதனால் நிதி செலவிடப்படாமல் திரும்பி செல்லும் நிலையும் உள்ளது. எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு பிரச்சாரக் குழுவை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அமைக்க வேண்டும் என்றும், அதில் ஜமாஅத் தலைவர்களை, உலமாக்களை உறுப்பினர்களாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment