துபாயில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அந்த நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவ்வாறு தங்கி இருப்பவர்களை கண்டறிவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடிதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தற்பொழுது அங்கு சட்ட விரோதமான முறையில் தங்கி இருந்த 34,561 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதிக் 1,780 பேர் பிச்சைகாரர்கள் ஆவார்கள்.
இவ்வாறு தங்கி இருப்பவர்களில் முதலிடத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும், 2வது இடத்தில் பாகிஸ்தானியர்களும், 3வது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர். இதுவரை 1,884 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் இந்திய மதிப்பிற்கு சுமார் 9 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
No comments:
Post a Comment